தினகரன் பத்திரிகைக்கு கண்டனம் !
தினகரன் பத்திரிகைக்கு கண்டனம் !
அன்புடன் தினகரன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் பார்வைக்கு....
ஒருவாரத்திற்கு முன் தங்கள் தினசரி நாளிதழில் .வள்ளலார் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியைப் பார்த்து
வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் மனத்திலும் உள்ளத்திலும் நெருப்பை கொட்டியது போல் கொதிப்படைந்துள்ளார்கள்..
நான் நாற்பது ஆண்டுகளாக வள்ளலார் கொள்கையை பின்பற்றி உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் சன்மார்க்க கொள்கைகளை பரப்புரை செய்து வருகிறேன்...
வள்ளலார் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து இறைவன் அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனுடன் கலந்த .மரணத்தை வென்ற மகான் என்பது உலகமே அறியும்.
தமிழிநாட்டில் பத்திரிகை.டிவி நடத்திவரும் உங்களுக்கு தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை..
தவறுதளாக பத்திரிகையில் போட்டு விட்டீர்கள் போலும்..
வள்ளலார் கொள்கையே மரணத்தை வெல்லும் சாகாக்கல்வி கற்று கொடுப்பதுதான்...
வள்ளலார் மரணத்தை வென்று இறைவனுடன் கலந்த இடம்தான் வடலூரில் உள்ள மேட்டுகுப்பம் என்ற இடமாகும்..இன்றும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாடு வெளிநாடுகளிலும் இருந்தும் வந்து தரிசித்து செல்கிறார்கள்...
வள்ளலார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு மரணத்தை வெல்லும் வழிமுறைகளை நேரிடையாக தெரிவிக்கிறேன்.
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் நிறைய உள்ளன.அதில் இரண்டு பாடலே போதும் என நினைக்கிறேன்
ஆரம்பம....
வள்ளலார் எழுதிய திருமுறைகள் அனைத்தும் மரணத்தை வெல்லும் வழியைப் பற்றியே பதிவு செய்துள்ளார்.
எனவே சன்மார்க்க அன்பர்கள் உங்கள் பத்திரிகை அலுவலகம்் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளார்கள்...
நாங்கள் தான் வேண்டாம் என்று நிறுத்தி வைத்துள்ளோம்.
எனவே உங்கள் பத்திரிகையிலே .தெரியாமல் பதிவு செய்துவிட்டோம் என்று மறுப்பு பதில் செய்தி போட்டுவிடுங்கள்..
அதுதான் உங்களுக்கும் நல்லது.எங்களுக்கும் நல்லது..
உங்கள் பதிப்பை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் ஆன்மநேயன. ஈரோடு கதிர்வேல்
மற்றும் சன்மார்க்க அன்பர்கள்...

- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!
இறுதிநிலை !
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!
மேலே கண்டபாடல் எதனாலும்அழிக்க முடியாத அருள் தேகம் பெற்றது.
வள்ளலார் எழுதிய திருமுறைகள் அனைத்தும் மரணத்தை வெல்லும் வழியைப் பற்றியே பதிவு செய்துள்ளார்.
எனவே சன்மார்க்க அன்பர்கள் உங்கள் பத்திரிகை அலுவலகம்் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளார்கள்...
நாங்கள் தான் வேண்டாம் என்று நிறுத்தி வைத்துள்ளோம்.
எனவே உங்கள் பத்திரிகையிலே .தெரியாமல் பதிவு செய்துவிட்டோம் என்று மறுப்பு பதில் செய்தி போட்டுவிடுங்கள்..
அதுதான் உங்களுக்கும் நல்லது.எங்களுக்கும் நல்லது..
உங்கள் பதிப்பை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் ஆன்மநேயன. ஈரோடு கதிர்வேல்
மற்றும் சன்மார்க்க அன்பர்கள்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு