அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

மக்களின் மனநிலை மாற வேண்டும் !

மக்களின் மனநிலை வேதனை அளிக்கிறது !

கணவன்  இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது..

மனைவி இறந்தால் கணவன்  வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது...

என்பது வள்ளலார் மனித சமுதாயத்திற்கு சொல்லிய அர்த்தமுள்ள அறிவுரை யாகும்..

அதன் விளக்கத்தை அடுத்த கட்டுரையில் வெளிப்படுத்துகிறேன்.

காமமும் காதலுமே புற உலக வாழ்க்கை அல்ல...

அதற்குமேல் அகவாழ்க்கை உள்ளது.அதுதான் அருள் பெறும் வாழ்க்கை..

இன்று மனித சமுதாயம் தவறான வழிகளிலே சென்று கொண்டுள்ளது..

காம இச்சையிலே காதல் செய்கிறார்கள் .திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்..
கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால்.
விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்...

முதல் கணவன் கட்டிய தாலியை கழட்டிவிட்டு.வேறு கணவன் கட்டிய தாலியை அணிந்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள்..குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆண்களும் ஒரு பெண்ணுடன் திருமணம் செயது கொண்டு .குழந்தைகள் பெற்றுவிட்டு.முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்...

முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளின் நிலை என்ன ? அந்த குழந்தைகள் அவர்கள்  அப்பா அம்மாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்..
யாருடன் இருந்து வாழ்வார்கள்..

அந்த குழந்தைகள் ஒழுக்கம் உள்ளதாக வாழ்வதற்கு வழி கிடைக்குமா ? என்பது கேள்விக் குறியாகி விடுகின்றது...

இந்த தவறான வாழ்க்கை முறையும் எண்ணங்களும்  சாதாரண மக்களுக்கு அதிகம் வருவதில்லை..

பணம்.பதவி.புகழ்.
உள்ள ஆடம்பரமான வாழ்க்கை வாழும்  குடும்பத்தில் உள்ளவர்களும்.அவர்களின் மகன் மகள்கள் தான் அதிகமான தவறான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார்கள்...
தவறு செய்ய துணிந்து விடுகிறார்கள்.

அவர்களைப் பார்த்து சாதாரண மக்களும் அதே தவறை செய்து கொண்டு வருகிறார்கள்.

இதற்கு தற்போதுள்ள தாய் தந்தையர்களும் துணை போகிறார்கள்..

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தவிடுபொடியாகி விட்டது...

காரணம்.. காதலும் காமமும் மக்களின் மனதை மாற்றிவிட்டது.

இன்னும் அதிகம் சொல்ல வேண்டுமானால் இன்று வளர்ந்துவரும் வெளிநாட்டு நாகரீகம் மோகம்.உணர்ச்சிகளை தூண்டும் இறைச்சி (மாமிசம்)  உணவு முறைகள்.ஆபாச ஆடைகள் போன்ற தவறான கலாச்சாரம் போன்ற வழிகாட்டுதலால் இந்திய மக்களின் மனநிலையைக் கவ்விக் கொண்டது..

அச்சம் நாணம்.மடம்.பயிற்பு போன்ற கவுரவம் காற்றில் பறந்து கொண்டு உள்ளன.

மேலும் இன்று வளர்ந்துவரும் சினிமா.சீரியல் கதைகள் .கதைகளை உருவாக்கும் கதை ஆசிரியர்கள்...
வசனகர்த்தாக்கள்.
அவற்றை இயக்கும் இயக்குனர்கள்.அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள்.எல்லாமே சேர்ந்து மக்களின் மனநிலையை குழப்பிக் கொண்டுள்ளதை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.

அதேபோல் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும்..நீதி வழங்கும் நீதி அரசர்களும் மக்களின் நல்வாழ்விற்காக அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களுக்கும் சமுதாயத்தின் மேல் அதிக அக்கரையும் அவசியமும் உள்ளன என்பதை புரிந்து கொண்டு மனித சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டு செல்லும் கடமையும் அக்கரையும் உள்ளன என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

அதற்குமேல் ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அதிக அக்கரை உள்ளன.மூட நம்பிக்கை இல்லாமல் வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகளை மக்களிடம்  பகுத்தறிவோடு கொண்டு செல்ல வேண்டும்..

நாடும் நாட்டு மக்களும் ஒழுக்கத்துடன் மகிழ்ச்சியுடன்.அன்பு தயவு கருணையுடன்  வாழ வேண்டும் என்பதற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் வள்ளலார்...

வள்ளலார் வகுத்து தந்த ஒழுக்க நெறிகளை பின் பற்றினால் மட்டுமே இந்த நாடும் நாட்டில் உள்ள மக்களும் தடம் மாறாமல் மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நல்வாழ்வு கொடுக்க காத்திருக்கும் போது நாம் தடம் மாறினால்..பின் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்..

 மேலும் ஒழுக்கம் தவறி வாழ்பவர்கள் மரணம் அடைந்தால்..அடுத்த பிறவி மனிதப்பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லாமல்  போய்விடும்..

எனவே மனிதபிறப்பை தக்க வைத்து கொள்ள அனைவரும் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும்.

இந்த நான்கு ஒழுக்கங்களில் இந்திரிய ஒழுக்கம்.
கரண ஒழுக்கம் இரண்டையும்.
பூரணமாக கடைபிடித்தால் ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் இரண்டையும் இறைவன் தடையில்லாமல் கொடுத்துவிடுவார்...

இந்திரிய ஒழுக்கத்தில் முக்கியமானது...காமம்.வெகுளி. மயக்கத்தில் அதிகம் ஈடுபடக்கூடாது..
அன்பு.காதல்.தயவு.கருணை மட்டுமே இருக்க வேண்டும்...

கரண ஒழுக்கத்தில் மனத்தை அடக்க.கட்டுபடுத்த தெரிந்து கொள்ள வேண்டும்...

வெளி உலகத்தின் மாயா வலையில் மனமானது தனது அறியாமையில் விழாமல் அறிவின் விளக்கத்தை கொண்டு மனித இனம் மனிதனாக வாழ்ந்து.இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்கே மனிதப்பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது...

எனவே காமம்.வெகுளி .
மயக்கத்தில் விழுந்து..மன்ம் போனபடி  வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல்..

அறிவை அறிவால் அறிந்து கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வள்ளலார் உலகத்தாற்கு உறுதியாக கூறுகிறார் !

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்

கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து சொல்லுகின்றார்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து பதிவு செய்கிறார்..

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

அடுத்து பாடல் !

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்

காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா

தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. !

மேலே கண்ட பாடல்கள் எளிய தமிழில்  மக்களின்  நலனுக்காக வள்ளலார் பதிவு செய்துள்ளார்.படித்து பயன் பெறுங்கள்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக