மனிதனும் மனமும் !
மனிதனுக்கு மட்டும் மனத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் மனத்தின் வழியே வாழ்க்கை அமைத்துக் கொள்வதால் மனிதன் என்ற பெயர் வழங்கப்பட்டது..
மனிதனின் மனமானது அன்பு தயவு கருணை இல்லாமல் புற வாழ்க்கையே பற்றிக் கொண்டுள்ளது...
மனித உடம்பில் ஆன்மா.உயிர் .உடம்பு மூன்றும் இணைந்து செயல்படுகின்றது. உடம்பின் புறம் புறப்பும் என்னும் கரணங்கள். இந்திரியங்கள். மனத்தின் வசப்பட்டு செயல்பட்டுக் கொண்டுள்ளன...
அகத்தில் உள்ள ஆன்மாவை மனம் தொடர்கொண்டால் மட்டுமே மனமானது ஆன்மவயப்பட்டு.ஆன்ம லாபம் பெறமுடியும் என்பதை வள்ளலார் தெளிவாக கடைபிடித்து வாழ்ந்து காட்டி உள்ளார்...
மனத்தை அடக்க பல ஞானிகள்.சித்தர்கள் பல வழிகளை கடைபிடித்து தியானம்.தவம்.யோகம்.புற வழிபாடுகள் செய்ய தனிமையைத்தேடி.காடு.மலை.குகை போன்ற இடங்களுக்குச் சென்று மனத்தை அடக்க கடுமையான தவம் செய்தார்கள்..அதனால் ஏகதேச அற்ப சித்திகளைப் பெற்று கொண்டு உயிரை அடக்கி உடம்போடு சமாதி நிலை அடைந்தார்கள். அவர்களுக்கு
மரணத்தை வெல்லும் வழி தெரியவில்லை... ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வகை தெரியவில்லை...
*ஆன்மாவை மறைத்துள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளை முழுமையாக விலக்க வழி தெரியவில்லை.*
அவர்களும் மீண்டும் பிறப்பு எடுத்துதான் கடவுளைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லமுடியும்....
*புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்...மனம் அகத்திற்குத் தானே செல்லாது... முதலில் அசுத்த மனத்தை சுத்த மனமாக மாற்ற வேண்டும்..*
சுத்த மனமாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தார் வள்ளலார்...அதற்கு ஒரே வழி மனத்தை அன்பு.தயவு.கருணை உள்ளதாக மாற்ற வேண்டும்...மனத்தை தயவு கருணை உள்ளதாக மாற்ற வேண்டும்...
அதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம்.ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பு அறிவும் தானாக விளங்கும் என்றார்...
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்..
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.
மனமானது புத்தி.சித்தம்.
அகங்காரம் போன்ற சூட்சுமக் கருவிளைக் கொண்டு...இந்திரியங்களான கண்.காது.மூக்கு.வாய்.மெய் என்ற கருவிகளை தன்வசமாக வைத்துக் கொண்டு புறவாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து உயிரையும் அழித்து விடுகின்றது.
எனவே தான் வள்ளலார் மனத்தை அகத்தில் உள்ள..ஆன்மா இயங்கும் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடும் என்கிறார்....
உடம்பை.உயிரை.ஆன்மாவை அழியாமல் பாதுகாக்க மனத்தை உட்புறமாக செலுத்த வேண்டும்...
மனத்தை உட்புறமாக செலுத்த தயவு கருணை மிகவும் அவசியம்..கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கிறார்..
*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி*
மனத்தை அடக்கும் வள்ளலார் பாடல் !
மனமானது அகம்.அகப்புறம்.புறம் புறப்புறம் என்னும் நான்கு இடங்களுக்கும் முக்கியமான பங்கு வகிக்கின்றது...
கீழே கண்ட பாடலை படித்து தெரிந்து கொள்ளவும்...
1.மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. !
2. பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன்
என்னைஅறி யாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.!
3. விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே. !
4. பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே. !
மேலே கண்ட பாடல்களின் வாயிலாக மனத்தை அடக்கிய வழிமுறைகளை தெளிவுப் படுத்துகின்றார்...
*எனவே மனத்தை இரண்டு வழிகளில் செலுத்த வேண்டும்.*
எனவே மனித மனமானது.ஜீவன்கள் மேல் இரக்கமும் கடவுள் மீது அன்பும்.சமமாக செலுத்து வேண்டும்...
*அதுவேதான் ஜீவகாருண்யம்.. சத்விசாரம் என்பதாகும்.*
கடவுளை வெளியில் சென்று தேட வேண்டாம் எல்லா ஜீவன்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பதே கடவுளின் ஏகதேசம்...அதுவே ஆன்மாவாக இயங்கிக் கொண்டுள்ள இடம் சிற்சபை நடம் என்பதாகும்...
வள்ளலார் பாடல் !
குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*
*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே!*
மேலே கண்டபாடலில் மனத்தை சிற்சபை நடத்தை தெரிந்து துதித்துடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.
உலகில் உள்ள சமயம் மதங்கள் யாவும் பொய்யே சொல்லி உள்ளன.எனவே அவைகள் சொல்லும் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வள்ளலார் மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளார்.பாடலை ஊன்றி படித்தால் புரிந்து கொள்வீர்கள்..
ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
எனவே மரணம் வருவதற்கு அடிப்படைக் காரணம் மனம்தான்.
*புறத்தில் செல்லும் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்துவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான வழிபாடாகும்....*
சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றாமல் சமயம்.மதம் சார்ந்த கொள்கைகளை கடைபிடித்து வரும் சன்மார்க்கிகள் முதலில் அகவழிபாட்டிற்கு வருவதே வள்ளலாருக்கு காட்டும் நன்றிக் கடனாகும்..
சன்மார்க்கிகள் திருந்துங்கள் .மற்றவர்களையும் திருத்துங்கள்...
வள்ளலார் பாடல் !
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!
மேலே கண்ட பாடலை ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக