நெற்றிக் கண்ணைத் திறப்பது எங்கனம் ?
நெற்றிக் கண்ணைத் திறப்பது எங்கனம் ?
நம்முடைய நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் என்கிறார் வள்ளலார்..
ஆசாரியர் என்றவுடன் சிலபேர் மனிதரை நினைத்துக் கொள்கின்றனர்.
அல்லது மனித குரு என்று நினைத்துக் கொள்கின்றனர்.அவை முற்றிலும் தவறானது.
உலகில் எல்லா ஜீவராசிகள் அனைத்திற்கும் தனித்தலைமைப் பெரும்பதியாக விளங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே குருவாக இருந்து செயல் படுகின்றார்.
வள்ளலார் பதிவு செய்துள்ளது !
அருட்பெருஞ்ஜோதி அகவலிலே தெளிவாக பதிவு செய்துள்ளார்.
மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !
அருளை வழங்குபவர் எவரோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான செயலாகும்...
மனித குருவால் அருளை வழங்க முடியுமா ? என்றால் வழங்க முடியாது...அருளைப் பெருவதற்கு உண்டான வழியைக் காட்டலாம்.அதுவும் அருளைப் பெற்று இருந்தால் மட்டுமே அருளைப் பெறும் வழியைக் காட்ட முடியும்..
அருளைப் பெறாமல் சாகிறவன் அதாவது இறந்து மாண்டு போகிறவன் எல்லாம் குருவாக முடியுமா ? என்றால் குருவாக முடியாது...குரு என்று சொல்கிறவன் எல்லோருமே ஏமாற்று பேர் வழிகள்.
மலம் ஒழிப்பது.தீட்சை கொடுப்பது.தவம்.
யோகம்.தியானம் போன்றவை சொல்லிக் கொடுப்பது அனைத்தும் தவறான வழிகாட்டுதலாகும்...
அவை அனைத்தும் சமய மதங்களின் வழிகாட்டுதலாகும்.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு நேர் விரோத செயல்களாகும்.
அப்படியும் மீறி சொல்லிக் கொடுப்பவன் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் சுட்டிக் காட்டுகின்றார்...
நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் வராமல் இருக்க வேண்டும்..அப்படியே வராமல் வாழ்ந்தாலும் அவன் குருவாக ஏற்றுக் கொள்ள முடியாது ...அவனுக்கு அந்த அருள் சக்தியும் ஆற்றலை யும் வழங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் குரு என்று அவன் சொல்ல வேண்டும்...
வள்ளலார் எந்த இடத்திலும் தன்னை குரு என்றோ !.தன்னை வணங்க வேண்டும் என்றோ! தன்னை வழிபடவேண்டும் என்றோ ! சொல்லவே இல்லை.
தியானம்.தவம்.யோகம்.மலம் ஒழிப்பு.தீட்சை.
வழங்குதல்.ஆசாரசங்கற்ப விகற்ப வழிபாட்டு முறைகளை வள்ளலார் சொல்லிக் கொடுக்கவில்லை...
பசித்திரு .தனித்திரு.
விழித்திரு என்று மட்டுமே சொன்னார்...
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்..
பரோபகாரமே கடவுள் வழிபாடு என்றார்..
இறைவன் மீது இடைவிடாது அன்பு செலுத்துங்கள் என்றார்..அதுவே சத்விசாரம் என்றார்..நம்முடைய குறைகளையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.
இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்
போன்ற பெருமைகளையும்.
அருள் ஆற்றல்களையும் இடைவிடாது விசாரம் செய்து கொண்டு இருத்தல் வேண்டும்..அப்படி இருந்தால் தெரிவிக்க வேண்டியதை இறைவனே தெரிவிப்பார் என்று எல்லோருக்கும் புரியும்படி சொல்லி உள்ளார்...
மலம் உள்ளவன் மலம் அற்றவன் !
ஐந்து மலம் உள்ளவன் மனிதன்.மலம் இல்லாதவன் இறைவன்.
மலம் இல்லாத இறைவனால் மட்டுமே மலத்தை அகற்ற முடியும் என்பதை மனிதர்களாகிய நாம் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்...
வள்ளலார் சொல்லியது...!
நம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.
ஏன் எனில்.மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும்.அவன்தான் சுத்த ஞானி...
மேறபடி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தகப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர் பெற்று எழும்.மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உடனே அந்த ஜீவன் பஸ்பமாகிவிடுவான்.
மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்கள் உள்ளன.என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...
நெற்றிக்கண் !
நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு .ஒரு கதவும் பூட்டும் உள்ளது.மேற்படி பூட்டை அருள் என்கிற திறவுகோலைக் கொண்டு தான் திறக்க வேண்டும்.
ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும் பெருந் தயவு .நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் தோன்றும்..என்கின்றார்
எனவே ஆனமாவின் சிறிய தயவைக் கொண்டு கடவுளின் பெருந் தயவு என்னும் அருளைப் பெற வேண்டும்...மற்ற எந்த குறுக்கு வழியாலும் அருளைப் பெற முடியாது என்பது திண்ணம்..
அருளின் தன்மைப் பற்றி வள்ளலார் அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார் !
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
482. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
483. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
484. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
485. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
487. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
488. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
489. அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே !
497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே !
மேலே கண்ட அகவல் வரிகளை பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்...எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்...
அறிவுக் கண் கொண்டு படித்து உண்மைத் தெரிந்து கொள்ளுங்கள்..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரால் மட்டுமே நெற்றிக் கண்ணைத் திறக்க முடியும்.
வேறு எவராலும் நெற்றிக் கண்ணைத் திறக்க முடியாது...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு