செவ்வாய், 3 ஏப்ரல், 2018

மனம் ஒரு பேய்க் குரங்கு !

மனம் ஒரு பேய்க் குரங்கு !

ஒருவனுடைய மனம் புத்தி.சித்தம் அகங்காரம் தடுமாறுகிறது என்றால்
 அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்பதாகும்..அறிவு குறைந்து இருக்கிறது என்பதாகும்.

 அறிவு நிறைந்து  இருந்தால் மனம்.புத்தி.சித்தம்.அகங்காரங்கள்.என்ற தடுமாற்றம் தானே அடங்கிவிடும்.

எனவே தான் மனதை சிற்சபையின் கண் செலுத்துங்கள் என்கிறார் வள்ளலார்.

சிற்சபை என்பது நம் உடம்பின் தலைப்பாகத்தில் அகம் என்னும் ஆன்மா இருந்து இயங்கும் இடமாகும்..

வெளியில் செல்லும் மனத்தை ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மட்டுமே மனமும் புத்தியும் தன் வெளி வேலைகளை நிறுத்திக் கொள்ளும்.

மனமும்.புத்தியும் அடங்கும் இடத்தில் இருந்து தான்.அறிவு வெளிப்படும்.அறிவு வெளிப்பட்டவன் எவனோ அவனால் மட்டுமே மெய்ப்பொருள் என்னும்  உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

வள்ளலார் பாடல் !

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கேஇனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்எனக்குற வாகிய என்னுயி ருறவே

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திடஇனம்பெறு சித்த மியைந்து களித்திட !

என்னும் அகவல் வரிகளில் தெளிவாக விளக்கி உள்ளார்.மனம் ஆன்மாவில் தொடர்பு கொள்ளும் போது மனம் கனிந்து உருகிட .மதி என்னும் அறிவு நிறைந்து வெளிப்பட்டு தன் வேலையைச் செய்யும்.

அறிவு விளங்கினால் மட்டுமே புறத்தில் உள்ள கரணங்களில் உள்ள மனம்.புத்த.சித்தம்.அகங்காரம் என்னும் கருவிகள்.தன் வேலைகளை.அறிவின் விளக்கத்தின்  வழியாக  செயல்படும்.

புறப்புறம் என்னும் கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு என்னும்  இந்திரியங்களும் நல் ஒழுக்கத்தின்  வழியில் தன் வேலைகளைச் செய்யும்.

அதனால் தான் வள்ளலார்  சிற்சபையின் கண் மனத்தைச் செலுத்துங்கள் என்கிறார்.

மனம் அடங்குவதற்கு உலகில்.பக்தி. தவம்.தியானம்.யோகம். பல வழிகளை நம் முன்னோர்கள் தவறான வழிகளையே காட்டி உள்ளார்கள்..வள்ளலார் நேர் வழியைக் காட்டி உள்ளார்.

இதற்கு ஆன்ம தியானம் என்றும்.சுத்த சன்மார்க்க தியானம் என்றும் பெயர்.

நாம் வள்ளலார் காட்டிய நேர்வழியில் சென்று மனத்தை அடக்கி அறிவைப் பெருக்கிக் கொண்டு .அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்...

வள்ளலார் பாடல் !

அறிவில் அறிவை அறியும் பொதுவில்ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழிசெல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி !

அடுத்து

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !.

என்னும் பாடல் வரிகளில் தெரியப் படுத்துகின்றார். வள்ளலார்.

மனம் அடங்கினால் அறிவு தோன்றும்.அறிவு தோன்றினால் அருள் தோன்றும்.அருள் தோன்றினால் கடவுள் யார் என்ற உண்மை விளங்கும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால் மரணத்தை வெல்லலாம்.

இந்த உண்மை வழியைக் காட்டுவது தான் சுத்த சன்மார்க்கம் .

சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து என்தகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு