வியாழன், 26 ஏப்ரல், 2018

சாதி சமயம் மதம் !

சாதி.சமயம். மதங்கள் !

சாதி சமய மதங்கள் உலகில் உள்ளவரை மனிதன் மனிதனாக வாழவே முடியாது...

மனித குலத்தை.மனித குணத்தை மாற்றி விலங்கு குணத்திற்கு மாற்றியது தான் சாதி சமய மதங்களின் கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே....சமய மதவாதிகளின் சுயநல சூழ்ச்சிதான் எல்லாவற்றுக்கும் காரண காரியமாக அமைந்துள்ளன..

அவைகளின் உண்மைத் தெரியாமல் மனிதனே மனிதன் .சாதியின் பெயரால்.சமயத்தின் பெயரால்.மத்த்தின் பெயரால் பேய்பிடுத்தவர்கள் போல் .
குழந்தைதனமாக.
ஒருவரை ஒருவர்
மனித நேயம் இல்லாமல்.ஆன்ம நேயம் இல்லாமல்.போரிட்டு  சண்டையிட்டு வீணாக அழிந்து கொண்டு உள்ளார்கள்..

மனித இனத்திற்கு உண்மையைத் தெரிவித்து.சாதி.சமய மத வெறியில் இருந்து விடுவித்து.மனித குலத்தை காப்பாற்றி.சரிசம்மாக வாழ வைக்கவே .மனிதனை சமரச ஒழுக்கத்திற்கு  கொண்டு செல்லவே வள்ளலாரை இறைவன்.இவ்வுலகிற்கு வருவிக்க உற்றார்....

அதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்...அதன் கிளைகளாக.
சன்மார்க்கிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களை அமைத்து.. சங்கத்தின் வாயிலாக சன்மார்க்கிகள் தங்களால் முடிந்த. ஜீவகாருண்ய பணியும்.சத்விசாரப்பணியும் இடைவிடாமல் செவ்வனே செய்து வருகிறார்கள்..

பொய்யான சாதி சமய மதங்கள் !

பொய்யான சாதி சமய மதங்களை. பொய்யான கடவுள்களைப் பொய் தான் என்று புரியவைத்து .தெரியவைத்து.அறியவைத்து சொல்லித்தான் மக்களைத் திருத்த வேண்டும்...பொய்யான ஒழுக்கங்களை .பொய்யான வழிப்பாட்டு முறைகளைப் பொய் என்று சொல்லித்தான் மக்களை நல்வழிக்கு கொண்டு வரவேண்டும்...

இந்த உண்மைகளை சில எடுத்துச் சொன்னால் .சுயநலம் உள்ள சாதி.சமய.மதவாதிகளுக்கு சொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்..எதிர்ப்பதாகவும் இருக்கும்....அவற்றைப்பற்றி கவலையோ.வருத்தமோ .வெறுப்போ கொள்ளாமல் சுத்த சன்மார்க்கிகள் தங்கள் கடமையை கடமைத் தவறாமல் ஒழுக்க நெறியோடு கடைபிடித்து செயலாற்ற வேண்டும்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் மட்டுமே.உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல முடியும்.மக்களை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்ற வைத்து..  காப்பாற்ற வழிவகை செய்யும் என்பதை மக்களுக்கு புரியும்படி போதிக்க வேண்டும்....

நமக்கு எதிர்ப்புக்கள்.தொல்லைகள்.விரோதங்கள்.
துன்புறுத்தல்கள்.எதிர்வாதங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்...அவற்றை ஈடுகட்டி செயல்பட  நாம் தயார்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேத முற்று அங்கும்இங்கும்போருற் று இறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலேஇவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதி நடராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக இறை உண்மையின் வாக்கு மூலமான அருள் செய்தியை வெளிப்படுத்துகின்றார்.

உலகம் சுகநிலைப் பெற வேண்டும் ..என்பிள்ளை நீ...ஆதலால் இந்த வேலையை புரிக.. அதாவது செய்க என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணையாகும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இன்னும் மக்கள் வீண்போகாதபடி சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்து ..எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று சுகநிலை அடைந்து.மரணத்தை வென்று. வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

எனவே சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் கட்டளைப்படி துணிவுடன் செயல்பட வேண்டும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்றும் தோன்றா துணையாக நம்முடன்  இருந்து நம்மை இயக்கிக் கொண்டே இருப்பார்....

வள்ளலார் பாடல் !


துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தேசுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கேசுதந்தரம தானது

உலகில்வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்வாழ்வெலாம் பெற்றுமிகவும்மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனை

உன்றன்மனநினைப் பின்படிக்கேஅன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளையாடுக

அருட்சோதியாம்ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணைஎன்றே

இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்திசைவுடன் இருந்தகுருவேஎல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்இலங்குநட ராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக ஐந்தொழில் வல்லபத்தை வள்ளலாருக்கு இறைவன் ஏன் தந்தார் எதற்காக  தந்துள்ளார் என்பதை விளக்கம் தந்துள்ளது மேலே கண்ட பாடல் வரிகள்..படித்து பயன் பெறுவோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு