இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் !
இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் !
இந்திய இறையாண்மை முற்றிலும் தவிர்க்கப் பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது .சட்டத்தை மதிக்காத ஆட்சியாளர்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டு உள்ளது மிகவும் கேவலமாக உள்ளது.
இறைவன் சட்டத்தையும் மதிக்கவில்லை.மனிதனால் தோற்றுவித்த சட்டத்தையும் மதிக்கவில்லை.
ஆட்சியாளர்களே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி சட்டத்தை ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
இன்றைய உலகில் மத்திய அரசும் சரி.மாநில அரசுகளும் சரி... பொது நோக்கம் இல்லாமல் .அன்பு.தயவு.கருணை இல்லாமல் ..சுய நலத்திற்க்காகவும்.கொள்ளை அடிப்பதற்காகவும்.ஆட்சி.அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும்.ஆட்சி செய்து கொண்டு உள்ளார்கள்.
இவர்களால் நாட்டு மக்களை துன்பம்.துயரம்.அச்சம்.பயம்.வறுமை.இல்லாமல் காப்பாற்ற முடியுமா என்றால்.எக்காலத்திலும் முடியவே முடியாது .என்பதை நாட்டு மக்களே அறிந்து புரிந்து.தெரிந்து வைத்து உள்ளார்கள்.
ஆட்சியாளர்களாலும்.சட்டத்தாலும்.திட்டத்தாலும்.
மக்களைக் காப்பாற்ற முடியவே முடியாது.
மக்களைக் காப்பாற்ற முடியவே முடியாது.
மக்களைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
எனவே மனிதர்களை நம்பி ஏமாற்றம் அடைவதை விட இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டால் நிச்சயம் மக்கள் காப்பாற்றப் படுவார்கள்.
இறைவன் எப்போதும் நடுநிலையோடு மக்களைப் காப்பாற்றுவார் ..
இறைவன் யார் ? என்பதுதான் இப்போது நாம் சிந்திக்க வேண்டும்.
நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் அல்ல !
கடவுள் அருள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளார்.அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.எனவே நாம் ஒவ்வொரு வீட்டிலும்.ஒளியே கடவுளாக நினைந்து .தீபத்தை வைத்து வழிபாடு செய்து வணங்குங்கள் .
ஒளியை வணங்கினால் இருள் தானே விலகிவிடும் !
இறைவன் பஞ்ச பூதங்களுக்கு அனுமதி வழங்கி குறைவில்லாத இயற்கையான நீர் நிலைகள்.மண் . .மழை.காற்று.ஆக்கினை ஆகாயம்.போன்றவைகளால் எந்த ஆபத்தும் இல்லாமல் உலகிற்கு எல்லா நன்மைகளும் வாரி வாரி வழங்குவார் /
நாமும் நலமுடன் வாழ்வோம்.நாட்டு மக்களும் நலமுடன் வாழ்வார்கள்.
நம்மைப் படைத்த இறைவனை தொடர்பு கொள்வதே நாம் செய்யும் நற் காரியங்களாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு