சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டியது !
உலகம் எங்கும் சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன.வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கம் என்ன என்பதே தெரியாமல் சமய.மதக் கொள்கைகளைப் பின் பற்றியே செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.பசிப்பிணியை ஓர் அளவு நீக்கிக் கொண்டு வருகிறார்கள்.
கடவுள் வழிபாட்டு முறைகளிலும்.கடவுள் உண்மையைத் தெரிந்துகொள்ளும் சத்விசாரத்திலும் கோட்டை விட்டுக் கொண்டு வருகிறார்கள்.கடவுள் கொள்கையில் முழுமை பெறாத வரை கடவுள் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.பாறைமேல் விதைத்த விதைபோல் நன்மை பயக்காது.
வள்ளலார் அருளைப் பெரும் உயர்ந்த மார்க்கமான.தனிநெறியான திருநெறியை சுத்த சன்மார்க்கம் என்று பெயர் வைத்து உலகுக்கே வழி காட்டி உள்ளார்.நாம் இன்னும் சரியாக முறையாக தெளிவாக புரிந்து கொள்ளாமல் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்கிறோம்..
வள்ளலார் சொல்லுகின்றார்.!
இதுவரையில் இருந்த்து போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள் என்கிறார்.நாம் வள்ளலார் சொல்லியதை கேட்கிறோமா ? என்றால் இதுவரையில் எந்த சங்கமும் சங்கத்தை சார்ந்தவர்களும் பின் பற்றியதாக தெரியவில்லை..சமய.
மதக்கொள்கைகளையும் சன்மார்க்கத்தையும் இனைத்தே வழிபாடு செய்து கொண்டு வருகிறோம்.இது வள்ளலார் சொல்லியதை மீறும் செயல்களாகும்...
வள்ளலார் சொல்லியதை பதிவு செய்கிறேன் பொருமையாக படியுங்கள்..
சுத்த சன்மார்க்க கொள்கை !.
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர்
ஒரு தொழிலுடைய பிரமாவும்,
இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும்,
மூன்று சித்தியுடைய ருத்திரனும் -
இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள்(ஆன்மா)
மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் (அருட்பெருஞ் ஜோதி)சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள.
ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல.
மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல்,
சர்வ சித்தியுடைய *கடவுள் ஒருவருண்டென்றும் அவரே அருட்பெருஞ் ஜோதி! என்றும்*அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை.
மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல.
உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.!
என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.நாம் எந்த அளவு வள்ளலார் சொல்லியதைப் பின்பற்றி வருகிறோம் என்பதை நாம் தான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...
இதற்கு மேற்பட .நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சயம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்.ஆகம்ம்.புராணம்.இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று வள்ளலார் அழுத்தமாக சொல்லியும் நாம் கேட்காமல் நம் விருப்பபடியே .எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தையும் பிடித்துக் கொண்டு வாழ்வதால் ஆன்ம லாபம் என்னும் அருள் நிச்சியமாக கிடைக்காது. மரணம் இல்லாப் பெருவாழ்வை நெருங்கவே முடியாது.
இனிமேலாவது சன்மார்க்கிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கேகுடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.!
விரிக்கில் பெறுகும்....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக