உயிர் இரக்கத்தின் உச்சம் !
உலகில் உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு வள்ளலார் வருத்தப் பட்டாரே அன்றி .தமக்குத் துன்பம் வந்துவிடும் என்றோ.ஒருபோதும் எண்ணியது இல்லை.தமக்கு வந்த துன்பத்தைப் பற்றியோ வள்ளலார் ஒருபோதும் துன்ப்ப் பட்டது இல்லை.
சிறு தெய்வங்களுக்கு வாய்பேசாத உயிர்களை பலியிடுவதைக் கண்டு உள்ளம் வருந்தி நொந்துள்ளார்.அதைப் பற்றி அவர் கூறி இருப்பதை கேளுங்கள்.
சிறு தெய்வக் கொள்கைகள் மக்களுக்கு எப்போதும் நன்மை தருவது இல்லை.துன்பங்களைத் தான் உண்டாக்குகிறது. ஒரு சிறு தெய்வம் பல பெயர்களைக் கொண்டு இருக்கிறது.
அது ஆடு.மாடு.பன்றி.கோழி.எருமைக்கடா முதலியவற்றைப் பலியாக்க் கொல்கிறது.இதைக் காணும் போதெல்லாம் என் மனம் நொந்து நடுங்குகின்றேன் என்கிறார்.மக்களுக்குத் துன்பத்தைத் தருகின்ற இந்தச் சிறு தெய்வக் கோயிலைக் காணும் போதெல்லாம் நான் அதைப் பார்க்க அஞ்சுகின்றேன் என்கின்றார்.இதுபோன்ற தெய்வங்களையும் வழிப்பாட்டு முறைகளையும் மக்களுக்குக் காட்டியவன் எவ்வளவு கோணல் கொடூர புத்தி உடையவனாக இருந்து இருப்பான்.என்று மிகவும் வேதனைப் படுகின்றார்.
பாடல் !
நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலி வுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
பலியுறு சிறிய தெய்வ வெங் கோயில்
கண்ட காலத்தும் பயந்தேன் !
மனிதன் யாராக இருந்தாலும் சரி.உள்ளம் மென்மை உடையவராய் இருக்க வேண்டும். நெஞ்சிலே இரக்கம் நிரம்பியவராய் இருக்க வேண்டும்.மற்ற உயிர்கள் படும் துன்பத்தக்க் கண்டால் மனம் இரக்கமே வடிவமாக மாற வேண்டும். உள்ளம் உருக வேண்டும்.தம்மை அறியாமலே கண்ணீர்த் தாரை தாரையாக வெளிப்பட வேண்டும். இதுவே இரக்கத்தின் இயல்பு.இரக்கத்தின் உச்சம்.இதுதான் வள்ளலாரின் ஜீவ காருண்யம்.
உண்மையான இரக்கம் ஒருவரை வேற்றுமை பாராட்டாது.மனத்திலே மட்டற்ற கருணை உள்ளவர்கள் .யார் துன்புற்றாலும் சாதி.சமயம்.மதம் .உயர்ந்தோர்.தாழ்ந்தோர் என்ற பேதம் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள்.
பறவைகள்.விலங்குகள்.பதைப் பதைத்தாலும்.பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.மரம்.செடி.கொடிகள் துன்புறுவதாக தோன்றினாலும். உடனே உதவி புரியத் துடிப்பார்கள்.வள்ளலார் மட்டுமே உயிர் இரக்கத்தை தன் உயிரினும் மேலாக சிறந்த்தாகப் போற்றி வாழ்ந்து உள்ளார்.இரக்கம் நீங்கில் என் உயிர் நீங்கும் என்றவர் தான் வள்ளலார்.
உயிர் இரக்கத்தின் சிகரத்தின் எல்லைக்கே அவர் சென்று விடுகின்றார்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடித் துடித்தார்.வள்ளலாரைப் போல் வாடிய பயிரைக் கண்டே வாடியவர் உலத்தில் ஒருவரும் கிடையாது.ஒரு ஞானியும் ஒரு அருளாளரும் கிடையாது.எந்த இலக்கியத்திலும் காண முடியாது...
பாடல் !
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
பசியினால் இளைத்தே வீடு தோறும் இரந்து பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் !
என்கிறார். என் உடம்பு இளைத்ததே உயிர் இரக்கத்தால் தான் என்கிறார்..
இவ்வளவு உயிர் இரக்கத்தின் உச்சத்திற்கே சென்ற வள்ளலாரைப் பாரத்துக் கொண்டா இருப்பார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..
பாடல் !
நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையேநேர்காண வந்தனம்
என் றென்முடிமேல்மலர்க்கால்தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனேஎனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியேதெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.!
என்னும் பாடல் வாயிலாக ஆண்டவரே தெரிவிக்கின்றார்.. நீ நினைத்த நன்மைகளைக் கண்டு நேரிலே வந்து அருளை வாரி வழங்கி.வள்ளலார் உடம்பிலே.உயிரிலே.ஆன்மாவிலே. இன்புறக் கலந்து கொள்கிறார்.மரணம் இல்லாப் பெருவாழ்வு கொடுத்து சுத்த பிரணவ ஞான தேகம் என்னும்...என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வைப் பெற்றுக்கொள்கிறார் வள்ளலார்.
எங்கே கருணை இயற்கையில் விளங்கின அங்கே விளங்கிய அருட்பெருஞ் ஜோதி!.
அன்பு.தயவு.இரக்கம் கருணை இயற்கையாக இருந்தால் பூரண அருளைப்பெற்று நாமும் வள்ளலார் போல் மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக