அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மெய் எப்போதும் கசக்கும் !

மெய் எப்போதும் கசக்கும் !

உலகில் மக்கள் பொய்யைக் கேட்டே வளர்ந்தவர்கள் வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டே இருப்பவர்கள்.

காரணம் பொய் கட்டிக் கொண்ட இந்த உடம்பு பொய்யைத் தான் அதிகமாக விரும்பும்.

எத்தனையோ அருளாளர்கள் இந்த உலகத்திற்கு வந்து .உண்மையும் பொய்யும் கலந்து சொன்னார்கள் . மக்கள் படித்தார்கள் .பேசினார்கள .அவரவர்களுக்கு தகுந்தாற்போல். இறைவனை வணங்கினார்கள்.வழிப்பட்டார்கள்.இறுதியில் மாண்டு போனார்கள்.

இதற்கு எல்லாம் காரண கர்த்தாக்கள் யார் ? என்பதைத்தான் வள்ளலார் தெளிவுப் படுத்துகுறார்..

மனித பிறப்பு உயர்ந்த அறிவு உள்ள பிறப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படி இருந்தும் .மொழி வாயிலாக மனித மூளையை சலவை செய்து விட்டார்கள்.

நாம் எவ்வளவு தான் அறிவு நிறைந்து இருந்தாலும் நம்முடைய வீட்டில் நடக்கும் நல்ல காரியமாக இருந்தாலும். கெட்ட காரியமாக இருந்தாலும். சமஸ்கிருதம் தெரிந்த படித்த ஒரு சமூகத்தில் உள்ளவரை வரவழைத்து .பணம் கொடுத்து. ஒன்றும் புரியாத ஆச்சார சங்கற்ப விகற்பங்களை.செய்விக்கிறீர்கள்.இவை எவ்வளவு நமது அறியாமை என்பதை ஏன் இன்னும்் புரிந்து கொள்ளவில்லை.என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தருகிறார்.

மொழி இல்லாத இறைவனை அறிந்து அருள் பெறுவதற்கு மொழியும் அதன் செயல்பாடும் எவ்வளவு தடையாக உள்ளது என்பதைத்தான் வள்ளலார் தெளிவு படுத்துகின்றார்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

இதைப் படித்துவிட்டு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்.!


வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலைஎன்ன பயனோ இவை. என்கின்றார்.

வேதம் ஆகமம் புராணம் இதிகாசம். சாத்திரம் எல்லாம் .சூதாக சொல்லி உள்ளதே தவிர உண்மையை வெளிப்படையாக சொல்லவில்லை. என்கிறார்

எந்த சமயமும் மதமும் உண்மை சொல்லவில்லை என்பதால் நான் உண்மை சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார்.

ஏன் என்றால் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்.நாயகன் என்னும் அருட்பெரும்சோதி ஆண்டவரின் வார்த்தை என்கிறார்.....அதனால்

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் உண்மையை அறிந்து.உண்மையை உணர்ந்து வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக