அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 6 டிசம்பர், 2016

செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது !

செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது !

செத்த பிணங்களைப் பார்த்து, அதாவது இறந்தவர்களை எடுத்திடும் போது அழுகின்றீர்களே உலகீர் இறவாத பெரிய வரம்,அவற்றைப்  பெரும் வழி ஒன்று உள்ளதே அவற்றை ஏன் ? அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி கேட்கின்றார் வள்ளலார் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

மரணம் வருவதற்கு உண்டான அறிகுறிகளான நரை, திரை, பிணி ,மூப்பு,பயம் போன்ற முன் அறிவிப்பு நம் உடம்பிற்கு தோன்றுகிறது ,அவற்றை தவிர்த்து கொள்ளும் வழி உள்ளது .அவற்றை அறியாமல் ,அவற்றைத் தீர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து ,இறுதியில் மரணம் அடைந்து விடுகின்றீர்கள் ,பின்பு மரணம் வந்து விட்டதே என்று அழுகின்றீர்கள் ,

மரணம் வரும் வாழ்க்கை வாழ்க்கை அல்ல , மரணம் வந்துவிட்டால் ,நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீண் விரையமாகி விடும் ,

நீங்கள இவ்வுலகில் ் எவ்வளவு பெயர்  புகழோடு வாழ்ந்தாலும்  பயன் இல்லை ,இறந்தபின் எல்லாம் மறைந்து விடும் ,மறக்கப்பட்டுவிடும் ,மீண்டும் எந்தப் பிறப்பு கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது ,

எனவே இந்த மனித பிறப்பிலே மரணத்தை வென்று நித்திய மெய்  வாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும் ,அவைதான் மனிதனின் உயர்ந்த வாழ்க்கை ,அந்த வாழ்க்கையை மக்களால் கொடுக்க முடியாது ,பொருளால் பெற முடியாது .

நம்மைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே கொடுக்க முடியும் ,அவை பொருளால் கிடைக்காது . அருளால் மட்டுமே கிடைக்கும் ,

அருளைப் பெரும் வழியைக் காட்ட வள்ளலார் அனைவரையும் அழைக்கின்றார் ,எவரும் அருளைப் பெரும் வழியில் செல்ல தயங்குகிறார்கள் ,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெருவதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு அமைப்பை படைத்து உள்ளார் .அவற்றில் மரணத்தை வெல்லும் வழி உள்ளது ,அருளைப் பெரும் வழி உள்ளது ,

இனிமேலாவது அருளைப் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வு  வாழ்வோம் ,

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக