சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !
தொடர்ச்சி :-
வள்ளலார் சொல்லியுள்ள .
.சுத்த சன்மார்க்க உண்மை நெறியை பின்பற்ற
ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்
என்னும் நான்கு படிகள் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொண்டு பின் பற்ற வேண்டும் என்று முன் கட்டுரையில் "ஞான சரியை"" என்றால் என்ன ? எனபதை தெரிவித்து உள்ளோம் .
ஞான சரியை என்பது இந்திரிய ஒழுக்கம் .அதுவே ஜீவ காருண்யம் என்பதைக் கண்டோம்.
இப்போது ஞான கிரியை என்றால் என்ன ? எனபதைப் பார்ப்போம் .
ஞான கிரியை என்பது , கரண ஒழுக்கத்தை குறிப்பதாகும் .
கரணங்கள் என்பது மனம் ,புத்தி ,சித்தம் ,அகங்காரம் ,உள்ளம் என்பதாகும் .இந்த ஐந்து கருவிகளும் ,கண்களுக்குத் தெரியாமல் செயல் படும் புறம் என்னும் சக்தி வாய்ந்த கருவிகளாகும் .
இந்தக் கருவிகள் தான் புறப்புறத்தில் உள்ள இந்திரியங்களை வேலை வாங்கிக்கொண்டு இருப்பவைகளாகும் .
இந்த கரணங்களில் முதன்மையாக உள்ளது மனம் .மனம் என்ன நினைக்கின்றதோ அவற்றை நிறைவேற்றுவது தான் புத்தி சித்தம் அகங்காரம் உள்ளம் என்னும் துணைக ்கருவிகளின் விருப்பமாகும் .
எனவே மனத்தை அடக்க வேண்டும் .மனத்தை அடக்கினால்தான் அருளைப் பெற முடியும் என்பதால் .
மனத்தை அடக்க தியானம் .தவம் ,யோகம் ,பக்தி போன்ற பல வழி முறைகளை கடைபிடித்து வருகிறார்கள் .
ஆனால் வள்ளலார் மனத்தை அடக்க முடியாது . மனம் புறத்தைத் தேடும் ஆற்றல் மிகுந்த சக்தி படைத்த கருவியாகும் .
அதன் சொல்படிதான் இந்தி ரியங்கள் ஆகிய கண். காது, மூக்கு ,வாய் .மெய் என்னும் அனைத்து புறப்புற உறுப்புகளும் புற உறுப்புகளின் அனுமதிப் பெற்று செயல் படும் .
எனவே மனத்தை அடக்க முடியாது மனதை மாற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார் .
எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான் , ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் என்பதாகும் .
ஞான சரியை என்பது ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் ஜீவர்களுக்கு உபகாரம் செய்வது .
அந்த உபகாரத்தைக் கொண்டு கரண ஒழுக்கத்தைக் கடைபிடித்து மனதை மாற்ற வேண்டும் என்கிறார் .
கண்களுக்கம் மனத்திற்கும் எப்போதும் இடைவிடாத தொடர்பு உண்டு .கண்கள் போகும் இடத்திற்கு மனம் போகும் .மனம் போகும் இடத்திற்கு கண்கள் போகும் .
இந்திரியங்களுக்கு கண்தான் முதன்மை யானது .கரணங்களுக்கு மனம் தான் முதன்மை யானது .
இந்த இரண்டையும் ஒரே பக்கமாக திருப்ப வேண்டும் என்பதுதான் ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் என்பதாகும் .
வள்ளலார் கரண ஒழுக்கத்தில் என்ன? சொல்லுகிறார்
கரண ஒழுக்கமானது !
மனதைச் சிறசபையின் கண்ணே நிறுத்தல் என்று சொல்லி விட்டு ,அதாவது முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் வேண்டும் என்கிறார் .
புருவ மத்தி என்பது ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் என்பதை சுட்டிக் காட்டுகின்றார் .
மனதை அங்கு நிற்க செய்தால் கருவி கரணங்கள் தானே அடங்கும் .ஏன் என்றால் இந்திரிய அறிவும் கரண அறிவும் ,ஆன்ம அறிவோடு தொடர்பு கொள்ளும் போது அதாவது நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தொடர்பு கொள்ளும் போது அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகும் ,அந்த உஷ்ணத்தால் ஆன்மாவிற்கு நெகிழ்ச்சி உண்டாகும் அந்த நெகிழ்ச்சியினால்,
ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் ஒவ்வொன்றாக விலகும் ,
முழு திரைகளும் விலகினால் தான் இறை அருள் காரியப்படும் .
அதைத்தான் ஜீகாருண்யம் என்னும் ஜீவ தயவினால் ஆன்ம தயவு காரியப்படும் என்பதாகும் .
அப்படி காரியப்படும் போது துர் விஷயத்தைப் பற்றாது இருப்போம் ,
ஜீவ தோஷம் வசாரிக்க மாட்டோம் ,,தன்னை மதியாது இருப்போம் ,செயற்கை குணங்களால் ஏற்படும் இராகாதிகளை நீக்கி இயற்கை யாகிய சத்துவ குணம் உள்ளவர்களாக இருப்போம் ,பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருப்போம் .தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டிக்கும் குண்ம் வரும் .
இவை எல்லாம் ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கத்தால் நிலை பெறும் .
ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கத்தால் அதாவது ஜீவ காருண்யத்தாலும் .
ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் மான சத்விசாரமும் இடைவிடாது .அதி தீவிர முயற்சியுடன் அதாவது நன் முயற்சியுடன் செயல் பட்டால் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப் பெருங்கருணை கொண்டு , திரைகளை நீக்கி அருள் வழங்குவார் எனபது உண்மையாகும் .
மேலும் இவைகளை படிப்பால் அறியக் கூடாது .அறிவது எப்படி எனில்
ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் .
அத் தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் , ஆதலால் இடைவிடாது நன் முயற்சியில் பழகல் வேண்டும் என்று அழுத்தமாக வள்ளலார் சொல்லுகின்றார .
ஞான கிரியை என்பது சத்விசாரம் என்பதாகும் .
சத்விசாரம் என்பது இரவும் பகலும் என்நேரமும் இடைவிடாது ஆன்மாவிடம் தொடர்பு கொள்வதாகும் .
அதைத்தான் பசித்து இரு ,தனித்து இரு, விழித்து இரு என்று சொல்லுகின்றார் .
சுத்த சன்மார்க்கத்திற்கு பக்தி தேவை இல்லை என்கின்றார் .
பக்தி என்பது :- மன நெகிழ்ச்சி மன உருக்கும் .
அன்பு என்பது :-ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்
மன நெகிழ்ச்சி நிலைக்காது .ஆன்ம நெகிழ்ச்சி நிலைக்கும் .ஆகவே அன்பு தான் முக்கியமானது .
அன்பை பெறுவதே ஞான கிரியை என்பதாகும் .
இன்னும் விரிக்கில் பெறுகும் .
அடுத்து ஞானம் யோகம் என்ன என்பதைப் பார்ப்போம் .
தொடரும்
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

1 கருத்துகள்:
ஆஹா அற்புதமான பதிவு ஐயா...
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு