வள்ளலார் பொய்யா சொல்லி உள்ளார் ?
வள்ளலார் பொய்யா சொல்லி உள்ளார் ?
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே !
வள்ளலார் நமசிவாயத்தை நான் மறவேன் என்கிறார் அது பொய்யா என்று ஒரு நண்பர் கேட்டார் அதற்கான விளக்கம் !
நமசிவாய என்பதும்.! சிவாயநம என்பதும் ! என்பதும் ஒரே பொருளையே குறிப்பதாகும் .
அவை பஞ்ச பூதங்களை குறிப்பதாகும், .பஞ்ச பூத உடம்பை குறிப்பதாகும் .
பஞ்ச பூத உடம்பில் இறைவன் குடி இருக்கின்றார் என்பதால் நமசிவாயத்தை நான் மறவேன் என்கின்றார .
இறைவன் உடம்பைக் கொடுத்தார் ,உயிரைக் கொடுத்தார் அவற்றை இயக்கும் கலைகளைக் கொடுத்தார் .இந்திரியங்களைக் கொடுத்தார் கரணங்களைக் கொடுத்தார் இறைவன் உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .அவர்தான் நமசியவாயம் என்று நினைத்து சமயவாதிகள் சொல்லுவது போலவே தாமும் சொல்லி மக்களை தன் வசமாக மாற்றிக் கொள்கின்றார். ..
எல்லா தெய்வங்களைப் பற்றியும் பாடி உள்ளார் .ஆனால் அந்த தெய்வங்கள் எல்லாம் உண்மையான தெய்வம் இல்லை என்பதை உணர்ந்து கொள்கின்றார்.
அப்படி நமசியவாதத்தையும் மற்ற தெய்வங்களைப் பற்றிக் பாடிக் கொண்டே உண்மையான இறைவனைத் தேடிக் கொண்டே உள்ளார். அவரே பதில் சொல்லுகின்றார்
தேடியது உண்டு நினது உரு உண்மை
தெளிந்திடச் சிறிது நின்னுடனே
ஊடியது உண்டு பிறர் தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறிய நான் அறியேன்
அம்பலத்து அருட்பெருஞ் ஜோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவும் கூசும் என் நாவே !
உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்க பொய்க் கடவுளை பாடுகிறேனே என்று வேதனைப் படுகின்றார். ...மேலும்
மாயையால் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன் தன்னையே மதித்து உன்
சாயையால் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவா வேறு எண்ணியது உண்டோ
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச்சிறிதும் இங்கு ஆற்றேன்
நாயகா எனது மயக்கம் எல்லாம் தவிர்த்தே
நன்று அருள் புரிவது உன் கடனே !
என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.
அது மக்களைத் தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக, வள்ளலார் கடை பிடித்த ஆரம்ப பக்தி நிலை .
இறைவனின் உண்மையை அறிந்து ஞான நிலைக்கு வரும் போது எல்லா உயிர்களிலும் உள் இருந்து இறைவன் செயல் படுகின்றார என்பதை அறிந்த பிறகு உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .
அந்த உண்மையான கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி என்கிறார் .
மக்கள் இப்படி கேட்பார்கள் என்பதை உணர்ந்து தான் ,அப்போது எனக்கு அற்ப அறிவாக இருந்தது என்று பேருபதேசம் என்ற பகுதியில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் . .
வள்ளலாருக்கு எப்போதும் ''உயர்ந்த அருள் ஞான அறிவு தான்'' .
மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக அப்படி சொல்லுகின்றார் .
நமசிவாய என்பதும் சிவாயநம என்பதும் கடவுள் அல்ல .
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட பஞ்ச பூதகருவிகள் .அதேபோல் நம்முடைய உடம்பும பஞச பூத கருவிகள் .
உடம்பிற்குள் இருந்து உடம்பை இயக்கும் ஆன்மா தான் கடவுளின் ஏக தேசம் ,கடவுளின் குழந்தைகள் என்பதை தெரியப் படுத்துகின்றார் .
அதற்காகத்தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார்
இன்னும் விரிக்கில் பெருகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு