சுத்த சன்மார்க்க பிராத்தனை !
வள்ளல்பெருமான் பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கமாக தெரியப்படுத்தி உள்ளார்.
ஒருவன் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல என்கின்றார்,
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கின்றார்.
அப்படி செய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன .பிரார்த்தனை செய்ய வேண்டுமானால்,இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கின்றார்.
நாம் நம்முடைய சுய நலத்திற்க்காக பிரார்த்தனை செய்வதால் எந்த பயனும் தனிமையில் கிடைக்காது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் எப்படி பிரார்த்தனை செய்தார் என்பதை அவரே விளக்கமாக பதிவு செய்துள்ளார்.அந்தப் பாடலைப் பாருங்கள், நன்றாக படியுங்கள்.
பாதி இரவில் எழுந்து அருளிப் பாவி யேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்கு கின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ் உலகம் பெறுதல் வேண்டுவனே !
என்கின்றார்.
பாதி நடு நிசியில் இறைவன் வந்து எழுப்பி என்றும் அழியாத அருள் நிதியை அளித்து,அருட் ஜோதியைக் கொடுக்கின்றார், கொடுத்ததோடு அல்லாமல் என்னுடைய உள்ளத்தின் உள்ளே கலந்து கொண்டாய் அதனால் நான் அடைந்த பேரின்பத்தை சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது.
ஆனால் அதை நான் பெருமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எனக்கு கொடுத்த அவ் வண்ணமே, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார்.
என்னே அவருடைய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை,..எல்லா உயிர்களும் தம் உயிர்போல் என்னும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை இவ்வுலகில் யாருக்கு உள்ளது.
சுத்த சன்மார்க்கிகளாகிய நாம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்படி,வாழ வேண்டும் என்ற உண்மையான பிரார்த்தனை செய்ய வேண்டும்,அப்படி .செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
அப்படி செய்வதால் இறைவன் நமக்கு எந்தத் தடையும் இல்லாமல் நமக்கு வேண்டியதை நிச்சயம் தருவார்.
அன்புடன் ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக