மானிடனாக வந்த அருட்பெருஞ்ஜோதி தெய்வம் ! அவர்தான் அருட்பிரகாச வள்ளலார் !
அவர் பிறந்து வளர்ந்து,கல்விக் கற்க, ஆன்மீகத்தில் வழிக் காட்ட எவரிடமும் தீட்சை பெறவில்லை. அவருக்கு எவரும் குரு இல்லை ,ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள்,அனைவரும் நன்கு படித்தவர்கள்.பட்டம் பெற்றவர்கள் . ஒன்பது வயதி லேயே ,சாதி,சமய,மத வித்தியாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். சிறு வயதிலேயே பக்திப் பாடல்கள் இயற்றும் வல்லமை பெற்று இருந்தார் .அவர் எழுதிய அருட் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தெள்ளமுதம். அருள் தீஞ் சுவை கலந்தது
ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட, அடியோடு அதை விட்டு விட்டனர். அவர் பார்வை தடைகள் இல்லாத எக்ஸ்ரே தன்மை கொண்டது கூர்மையான அழகிய கண்கள்,அகன்ற நெற்றி, குழி விழுந்த கன்னம்,செவ்விதழ் போல் உதடு,கம்பீரக் குரல் ,நிமிர்ந்த நடை, அவர் அறிவு அருள் அறிவாக இருந்தது. பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று யாராலும் அறியமுடியாது.மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமலும் ,அறிந்து கொள்ளவும் முடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார்.
எங்கு போவார் என்ன செய்கின்றார் என்று எவருக்கும் தெரியாது.
அவரை யாரும் தொட்டுப் பேச முடியாது,அவர் அருகில் அமர முடியாது,அவர் கண்களைப் பார்த்து எவராலும் பேசமுடியாது.அவரை சுற்றி அருள் உஷ்ணம் வட்டம் இட்டுக் கொண்டே இருக்கும்.
பார்ப்பதற்கு, மாநிறம், ஒல்லிய நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் ஏதோ கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்) உடம்பை மூட ஒரு வெள்ளைத் துணி. வேட்டியோடு சேர்ந்து உடலின் மேலும் போர்த்தப்பட்டிருக்கும்.
ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு கவளம் அதுவும் நண்பர்கள் விருப்பதிற்காக ,ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து அது தான் ஆகாரம். ஐந்து மாத சிறுவயதிலே சிதம்பர ரகசியத்தைக் கண்டவர்.
குழந்தையாக அம்மா ,அப்பாவின் கையில் இருந்தபோதே சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) அவருக்கு புரிந்துவிட்டது. பல பாடல்களில் அதை ,அவரே வெளிப்படுத்தி உள்ளார்
துறவியாக இருந்தும் உலக வாழ்க்கையில் ஈடு பாடு இல்லை.மனித தேகத்தில் ஆன்மா என்னும் உள் ஒளியுடன் வாழ பிடிக்கவில்லை, தன்னுடைய உடம்பை ஒளியாக மாற்றுவதற்கு படாத பாடு பட்டு உள்ளார் .அந்த துயரத்தை படமுடியவில்லையே என்று கதறி கதறி அழுதுள்ளார் கதறல். போதும் போதும் பட்டதெல்லாம்.போதும் என்று பல பாட்ல்களில் தன்னுடைய துன்பத்தைப் பதிவு செய்துள்ளார் .
''படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே
பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்
உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே, குரு மணியே, மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
இந்தப் பாட்டில் கண்டபடி தனக்கு இறைவனின் உடல் உயிர் ஆவியை அனைத்தும் இறைவன் வழங்கி உள்ளார் அந்த மா மனிதர். தான் அருட் பிரகாச வள்ளலாராக மாறினார் .கருணையே வடிவானவர்.
உயிர் இரக்கமே அவரின் உயிரின் சுவாசம்...ஆடு, மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோவார்,நடுங்கி போவார் .
என் அப்பனே , இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய். படம் எடுத்து ஆடும் கொடிய விஷ நாகத்திற்கும் ஏன் படம் எடுக்கின்றது என்ன துன்பமோ தெரியவில்லையே என்று வேதனைப்படுவார் .அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.அதனால்தான் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை வேண்டும் என்றார்
அவர் கலங்கும் பாடல் ;--
.
'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''
மரம் செடி கொடிகள் போன்ற தாவரங்கள் தண்ணீர் இன்றி எங்காவது வாடி வதங்கி காய்ந்து தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா ? என்று கதறுவார் .மழை வேண்டி இறைவனிடம் மன்றாடுவார் .
உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவகாருண்ய திலகம் வள்ளலார் ...அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடியவர் '' இறக்கம் நீங்கில் என் உயிர் நீங்கும் என்றவர்.இரக்கமே என் உயிர் என்றவர்.
அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்கள் அனைவரையும் திருத்த வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.
''அருட்பெருஞ்ஜோதி தான் வள்ளலார் ...வள்ளலார் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்''
மனித தேகம் எடுத்தவர்கள் மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் அருள் தேகம் பெற்று மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி உடையவர்கள் என்பதை ,உலக மக்களுக்குத் தெரியப் படுத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர்த்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.
மனித தேகம் எடுத்த நாம் அனைவரும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையில் சென்று அவர் போல் வாழ்ந்து ,மற்றவர்களுக்கும் வழிக் காட்டுவோம் ,/.
அருள் பெற்று வாழ்வதற்கு தடையாக இருக்கும் ,சாதி,சமய,மதங்களின் கொள்கைகளை விட்டு ,வள்ளலார் காட்டிய பாதையில் வீறு நடைபோடுவோம்.வாருங்கள்..வாருங்கள்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....
antha vaziyai thedi alaigindren oru nodi poluthenum unthan paarvai enmethu pattu ennai um vaziil mattruveer ayya...
பதிலளிநீக்கு