ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல !
ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல !
ஆலய வழிபாடு என்பது ஒரு காலத்தில் பக்தி பரவசத்துடன் நம்பிக்கையுடன் மக்கள் கோவில்களுக்கு சென்று வந்தார்கள் .
கோயிலில் உள்ள கடவுளின் சிலைகளை வணங்குவதால் எந்த நன்மையையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள் .
வீட்டில் அடைந்து கிடக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் பொழுது போக்குக்காக இப்போது கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்கின்றார்கள்.,
வழிபாடு செய்வதற்கும்,துன்பங்களைப் போக்குவதற்கும் ,ஆண்டவரிடம் அருள் பெறுவதற்கும் தகுதியான இடம் கோவில்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
கோவில்கள் எல்லாம் இப்போது சுற்றுலா மையாமாக,காட்சிப் பொருள்களாக மாறிவிட்டது .
அரட்டை அடிக்கவும் ,காதல் செய்யவும்,காதல் திருமணம் செய்யவும் ,அலங்கார ஆடைகள் அணிந்து செல்லவும் ,பொருள்கள் வாங்கவும் ,உணவுப் பண்டங்கள் வாங்கி உண்ணவும்,ஒய்வு எடுக்கவும்,
தனிமையில் மன்ம் விட்டு ஊர் கதையைப் பேசவும், கோவில்கள் வசதியாக உள்ளன.என்பதை தெரிந்து கொண்டு சுற்றுலா பயனமாக ஆலயங்களுக்கு சென்று கொண்டு உள்ளார்கள்.
கோவில்களுக்கு சென்று வரும்போதே ...அவர்களுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் குடித்துவிட்டு வண்டி வாகனங்களை ஒட்டிக் கொண்டு வரும்போது விபத்துக்கள் உண்டாகி பல உயிர்களையும் இழக்க நேர்ந்து விடுகின்றது.
ஆதலால் கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பல வகையான ஆபத்துகளுக்கு உள்ளாகி மரணம் அடைந்து விடுகின்றார்கள்
வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல். அளவுகடந்த அநியாயங்களையும் ,அக்கிரமங்களையும் ,செய்து விட்டு ..மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் துன்பம் தருபவர்கள், எத்தனைக் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டாலும் பயன் ஒன்றும் கிடைக்காது .
.
அறியாமையாலும் அஜாக்கிரதையாலும்,ஊழ் வகையாலும் துன்பம் நேர்ந்தாலும், பிற உயிர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் உயிர்களின் மேல் இரக்கம் கொள்பவர்களுக்கும், கருணைக் காட்டுபவர்களுக்கும் எந்த வகையிலும் துன்பம் வராது.
கடவுள் கருணை புரிகிறாரோ இல்லையோ, ஆண்டவரிடம் செல்பவர்கள் உண்மையான ஒழுக்கம், அன்பும் பக்தியும் இருந்தால் ஆபத்துக்கள் நேரிடாது
இப்போது ஆலய வழிபாடுகள் எல்லாம் கேலி கூத்தாகி மாறி விட்டது.
உலகில் பணம் பொருள் வாங்கும் கடவுள்களாகவே உள்ளன.
பணம் வாங்கும் கடவுள் மக்களுக்கு நன்மை செய்வாரா ?
பணம் வாங்குவதற்கு கடவுள் என்ன பிச்சைக்காரனா ?
அன்பும்,தயவும்,கருணையும்,காட்டும் கடவுள் பணம் பறிக்கலாமா ?
கொடுப்பதற்குக் கடவுளா ? வாங்குவதற்குக் கடவுளா ?
அதிகமாக பணம் கொடுப்பவர்களுக்கு முன் தரிசனம்,குறைவாகக் கொடுப்பவர்களுக்கு பின் தரிசனம்.பணம் இல்லாத ஏழைகளுக்கு தொலைவில் தரிசனம் .இதுதான் இன்றைய கடவுள் வழிப்பாட்டு முறைகள்.
நீங்களே சிந்தித்து செயல்படுங்கள்.
இதைத்தான் வள்ளலார் தெளிவு படுத்தி உள்ளார் .;--
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றறீரே
பகராத வன்மொழி பகருகின்றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்த்தனை நினைந்தே
கண்ணார நீர் விட்டுக் கருத்தரியீரே
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே !
தீய குணங்களை அகற்றி உயிர்கள் மேல் அன்பும்,தயவும்,கருணையும்,கொண்டு வாழாமல் உயிர்களுக்குத் தீமைகள்,வன் மொழிகள் ,துன்பங்கள் கொடுத்து வாழ்ந்தால் தீராத துன்பம் நம்மைத் தேடிவரும்.
தீமைகள் செய்யாமல் நன்மைகள் செய்தால் எங்கு சென்றாலும் கடவுள் உங்களை காப்பாற்றுவார் .
ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல .
கடவுளிடம் அன்பும், உயிர்கள் மேல் இரக்கமும்...தயவும்,... கருணையும், கொண்டு,..ஒழுக்கத்துடன் வாழுங்கள் .எக்காலத்தும் துன்பம் உங்களை நெருங்காது .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு