தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !
தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !
தீபாவளி என்பது நரகா சூரனை அழித்ததால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக கொண்டாடட்படுவதாக அதற்கு ஒரு மாதத்தையும் தேதியையும் தேர்வு செய்து பெரியோர்கள் வைத்துள்ளார்கள் .
அதன் விளக்கம் !
நம்முடைய உடம்பின் தலைப் பகுதியில் தீபம் என்னும் ஆன்ம ஒளி தான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது.
நம்முடைய உடம்பில் உள்ள அந்த ஒளியை தெரிய வொட்டாமல் 96 ,தத்துவங்கள் ஏழு திரைகளாக ஏழு விதமான தாதுக்கள் மறைத்துக் கொண்டு உள்ளன.
அந்த ஒளியை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு உள்ள தத்துவங்களை தாதுக்களை அறியாமை ,அஞ்ஞானம் என்னும் தீய குணங்கள் மறைத்துக் கொண்டு உள்ளன.
அந்த தீய குணங்களைத்தான் அறியாமை,அஞ்ஞானம் என்பதை அழிக்கும் குணங்களை நரகாசுரன் என்னும் பெயரை வைத்துள்ளார்கள்
நரகாசுரன் என்பது உயிரைப் பறிக்கும், எமன் என்னும் கூறறுவன் என்பதாகும்.
அறியாமை ,அஞ்ஞானம் ,ஆணவம்,மாயை,கன்மம், என்னும் தீய குணங்களையும் செயல்களையும், அழித்து ஒழித்து,,ஆன்ம ஒளியைக் கண்டு, மரணத்தை வென்று உண்மையான அந்த தீப ஒளியை காண்பதுதான் தீப ஒளித் திருநாள் என்பதாகும்.
அந்த தீப ஒளியை அனைவரும் காண வேண்டும் என்பதுதான் மகிழ்ச்சி தரும் திருநாளாகும்..
அதை மக்களுக்கு தெரியபடுத்தவே கற்பனைக் கதைகளாக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார்கள்.
எப்படியோ தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
புத்தாடைகள் ,பட்டாசுகள் பலகாரங்கள் அனைத்தும் இன்றைய நாகரிகத்திற்கு தகுந்தாற் போல் புதுப் புது வண்ணங்களாகவும்,வடிவங்களாகவும் குடும்பம் குடும்பமாக வாங்கி அனுபவித்து கொண்டாடி மகிழுங்கள் .
அதே நேரத்தில் ஆதரவு அற்ற ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள் .அதுவே நாம் செய்யும் புண்ணிய காரியமாகும்..
அந்த புண்ணிய காரியத்தால் நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை,. அஞ்ஞானம், என்னும் தத்துவங்களான தீய குணங்களை நீக்கி தீப ஒளியைக் காட்டும் வழியாகும் .
அன்பு,தயவு,இரக்கம்,கருணையினால் தான் தீய குணங்கள் மறைந்து அறிவு என்னும் சுடர் வெளிப்படும்.
அனைத்து ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கும் எனது உள்ளம் கனிந்த தீப ஒளி நல் வாழ்த்துக்கள்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

1 கருத்துகள்:
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு