சித்தர்களின் தனிச் சூதும் காட்டினாய் !
அந்தோ ஈததிசியம் ஈததிசியம் என்புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என் நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள் தன் தனிச்சூதும் காட்டி
சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி
வந்தோடு நிகர் மனம் போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்குளாதே !
மேலே உள்ள பாடல் வள்ளலார் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளது .
இவ்வுலகில் தோன்றிய சித்தர்கள் .பலர் மலைகளிலும் ,காடுகளிலும்,குகைகளிலும் சென்று தவம் செய்து, உண்ணாமல் உறங்காமல் இருந்து சமாதி நிலையை அடைந்துள்ளார்கள்.
சிலர் உடம்பையும் உயிரையும் தக்கவைத்து நீண்ட வருடங்கள் வாழ்ந்து உள்ளார்கள் .
சில சித்தர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்களை சுற்றி குன்றுகள், மலைகள் வளர்ந்து .அந்த மலைகளின் மேல் வழிப்பாட்டு தளங்களை அமைத்து மக்கள் மலை ஏறி வழிபாடு செய்யும் முறைகளை அமைத்துள்ளார்கள்.
எல்லா சித்தர்களும் இறுதியில் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு உள்ளதை .''சந்தோட சித்தர்களின் தனிசசூதும்காட்டி '' உள்ளதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு காட்டி உள்ளதாக சொல்லுகின்றார்.
மீண்டும் பிறப்பு ,இறப்பு இல்லாமல் வாழும் மரணம் இல்லா பெருவாழுவு வாழும், சுத்த சன்மார்க்கத்தின் ,''சகஜ நிலையைக்'' காட்டி .இறைவனுடைய அடியும் முடியும் காட்டி ,ஆன்மாவும், உயிரையும் காட்டி ,உடம்பையும் காட்டி ,என்னுடைய நிலையம் காட்டி .அலைபாயும் பேய்க் குரங்கு போன்ற மனத்தை அடக்கி அது கரைந்து போகும் வழியும் இறைவன் காட்டினார்.என்கின்றார்.
மேலும் உலக அறிவு சிறிதும் இல்லாத எனக்கு உண்மை அறிவான அருள் அறிவை தெரிவித்து ,அருள் பூரணத்தைப் பெற்றுதான் மரணத்தை வெல்லமுடியும்,என்ற உண்மையான உளவை தெரிவித்து மகிழ்வித்தாய் .
உன்னுடைய அருளின் வண்மை.இந்த உலகத்தில் வேறு யாருக்கும் இல்லை,வேறு யாராலும் கொடுக்கமுடியாது என்ற உண்மையை அறிந்தேன் ..என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்கின்றார் .
இதனால் நாம் யாரைப் பின்பற்றினால் மரணத்தை வென்று மனிதனும் இறைவன் ஆகலாம் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பதை நீங்களே முடிவு எடுங்கள் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக