சாத்தானின் வேதங்கள் !
உலகில் தோன்றிய மதங்கள் ,சமயங்கள் ,சாதிகள், சாத்திரங்கள்,புராணங்கள் யாவும் சாத்தானின் வேதங்களாகும் ..சாத்தான்என்பதும் .சைத்தான்என்பதும், மாயைஎன்பதும் அனைத்தும் ஒன்றை பற்றியே குறிப்பதாகும்
உலக வாழ்க்கையில் சிக்குண்டவர்கள் எழுதிய நூல்கள்,அவர்கள் போதித்த போதனைகள் அனைத்தும் உலகில் உள்ள அனைத்து வேதங்களும் ஆகும். மாயையில் சிக்குண்டவர்கள் மரணத்தை வெல்ல முடியாது .மரணத்தை வெல்ல முடியாதவர்கள் உண்மையான செய்திகளை தரமுடியாது.மாயையில் சிக்குண்டவர் களால் சுத்தமான உண்மையை தெரியப் படுத்த முடியாது /
சாத்தானின் வேதங்கள் என்று இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தை சேர்ந்த சாலமன் ருஷ்டி என்பவர் தெளிவாக விளக்கி உள்ளார்.அவர் அப்படி எழுதி உள்ளதால் அவரை எங்கு இருந்தாலும் சுட்டு கொலை செய்ய அரேபிய நாட்டு இஸ்லாம் மதத தலைவர்கள் ஆணை இட்டார்கள் அதனை கேள்வியுற்ற சாலமன் ருஷ்டி தலை மறைவானார் அவர் எழுதிய புத்தகத்தை வெளியே வராமல் அழித்து விட்டார்கள் உண்மையை சொல்பவர்களை இந்த உலகம் அழித்து விடுகிறது .
சமயங்கள் மதங்கள் யாவும் பொய்யான கற்பனைகள் ..கொலை செய்யும் கொலைககாரக் கடவுள்களையே அறிமுகப் படுத்தி உள்ளது கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது அந்த கடவுள் யாவும் கோபம உடையது என்றும் கூறுகிறது .இதற்கு சமய ,மத வேதங்களும் சாத்திரங்களே ஆதாராமாகும்.
எல்லா மதங்களும் உண்மையான கடவுளுக்கு களங்கம் கற்பித்து உள்ளன உண்மையான கடவுளை யாரும் கண்டதில்லை, காரணம் அனைவரும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கண்டது எழுதியது அனைத்தும் குற்றம் உடையதே .உண்மையான கடவுளை கண்டவர்களுக்கு மரணம் வராது, எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது .மரணம் அடைந்தவர்கள் எழுதியது அனைத்தும் சாத்தானின் வேதங்கள் என்பதை மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும் .
இன்றுவரை சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே என்று வள்ளலார் அனைத்து மதங்களையும் சாடி உள்ளார்.
நமது வள்ளல பெருமான் அவர்கள் உண்மையான கடவுளை அறிந்து உணர்ந்து கண்டு கலந்து இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் என்பது மாபெரும் உண்மையாகும்
அந்த உண்மையானக் கடவுள்தான் '''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி என்பதாகும் .
.ஏன் அவர் மட்டும் உண்மையான கடவுளைக் கண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அவர் மாயையில் அதாவது சாத்தானின் வழியில் வலையில் சிக்க வில்லை .உலகில் உள்ள எந்த பொருளையும் அவர் அனுபவிக்க வில்லை நமது உயிரையும் உடம்பையும், என்றும் அழியாமல் காக்கும் அருள் என்னும் பொருளை கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் என்பவராகும்.அந்த அருளைத் தரக்கூடிய ஒரே ஒரு கடவுள் 'அருட்பெரும் ஜோதி ''என்னும் பெரோளியாகும் .
அந்த ஒப்பற்ற பேரொளி என்னும் ஆண்டவரிடம் முழுமையாக அருள் என்னும் திரவத்தைக் பெற்றுக் கொண்டவர் வள்ளலார் ..அந்த அருளைப் பெற்றவர்கள்தான் உண்மையை உணரமுடியும் உரைக்க முடியும் எழுத முடியும் ..அப்படி அவர் எழுதியதுதான்,''திருஅருட்பா' என்னும் ஞான நூலாகும்.
வள்ளலாருக்கு மரணம் என்பது கிடையாது கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் அதாவது ஒளி தேகம் பெற்றவராகும்.அவர் அருள் ஞானத்தால் மக்களுக்கு காட்டிய தெய்வம் அருளாகவும் கருனையாகவும் விளங்கிக் கொண்டு உள்ளது அதுவே அருட்பெரும்ஜோதி என்னும் கடவுளாகும் .அது எங்கும் உள்ளது அது எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது ஆதலால் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும் .
அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பெயர் வைத்தார் வள்ளலார் .
ஆதாலால் தான் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வேண்டும் என்று மிகவும் கடுமையாக வலியுறுத்தி உள்ளார் எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழும் வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும்.அதற்கு ஜீவ காருண்யஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .கடவுள் இருக்கும் இடம் அருள் என்னும் கோட்டையாகும்,அந்த கோட்டைக்கு உள்ளே போகவேண்டும் என்றால் கோட்டையின் கதவைத் திறக்க சாவி என்னும் திறவுகோல் வேண்டும்.
அந்த திறவுகோல் ஜீவ காருண்யம் என்னும் அன்பு ,தயவு,கருணை கொண்டு உயிர்கள் மகிழ்ச்சி அடைய செய்வித்தால் அந்த ஜீவ காருண்ய உபசரிப்பே அருள் என்னும் கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் திறவுகோல் கிடைக்கும் . அதுவே கடவுளை அறிய முக்கிய திறவு கோலாகும் என்றார் வள்ளலார் .அவர் காட்டிய மார்க்கம் புனிதமானது உண்மையானது .அதுவே சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.
சுத்த சன்மார்க்கம் ;--சமயம் மதம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம்;---சாகாக் கல்வி கற்கும் மார்க்கம்.
ஆதலால் சாத்தானின் வேதங்களான,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் ,சாத்திரங்கள் போன்ற பொய்யான நூல்களை ஓதாமல் உணராமல் ,உண்மையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து ,உணர்ந்து, ஆன்ம நேயத்தோடு ஜீவ காருண்யத்தோடு.உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .
வள்ளலார் அழியாத் தேகம் பெற்ற பாடல் ஒன்று ;--
காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே
கோளாலே பிறர இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே !
வள்ளலார் மரணத்தை வென்றவர் என்பதற்கு மேலே கண்ட பாடல் பொருத்தமான சான்றுகளாகும் .
ஆதலால் நாம் ..எல்லா மனித குலத்துக்கும் பொதுவான, உண்மையான ,''அருட்பெரும் ஜோதி '' என்னும் ஒளியானக் கடவுளை ,ஆண்டவரை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது அழுது தேடுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .
அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு ...
மேலும் பூக்கும் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக