கருணைக் காட்டும் கடவுள் !
நாம் பலதரப்பட்ட துன்பம் ,துயரம் அச்சம், பிணி,பயம், போன்ற துயரங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .உடல் ரீதியான துன்பம் ஒருபக்கம்,பொருள் ரீதியான துன்பம் மறு பக்கம், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ,என்ற அச்சத்தால் வரும் பிரச்சனை ஒருப்பக்கம் ,குடும்ப பிரச்சனைகள் ஒருபக்கம் ,வெறு பல பிரச்சனைகள் மறுபக்கம் ,என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருக்கப் படும் போது,என்னவாகுமோ என்ற பயத்தால், என்ன செய்வது என்று தெரியாமால் துடிதுடித்துப் போகிறோம்.
நாம் படும் துன்பங்களையும்,துயரங்களையும்,அச்சத்தையும் ,பயத்தையும் கவலைகளையும் யார் இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம்!,யார் இடத்தில் முறையிடலாம்?, என்று மனிதனாக பிறந்த அனைவரும் தேடுகிறோம்,அலைகிறோம்,.யாரும் நமக்கு உதவி செய்வதாக தெரிய வில்லை,-- என்று தெரிந்தவுடன் ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்கிறோம் ,ஆனால் எந்தக் கடவுள் நமக்கு உதவி செய்வார் என்பது நமக்குத் தெரியாமல்,அலையும் போது,--ஒவ்வொருவரும் ஒரு கடவுளைச் சொல்லி நம்மை திசை திருப்புவார்கள்,பிறகு நாம், எதோ ஒரு கடவுளைத் தேடி,அபிஷேகம் ,ஆராதனை,பொங்கள்,படையல்,பிரார்த்தனை,வழிபாடு போன்றவற்றை செய்து-- நமது குறைகளைச்ச் சொல்லி புலம்புகிறோம் .அந்த புலம்பல் எங்கே செல்கிறது என்பது நமக்குத் தெரியாது,
கண்களுக்கு தெரிந்த,உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை ,பழக்கத்தின் காரணமாக, வணங்கி வழிபடுகிறோம்,எதோ ஒரு வகையில் நம்முடைய துன்பம் துயரம் அச்சம் பயம் போன்ற கவலைகள் நம்மை விட்டு விலகி விட்டதாக கருதுகிறோம்.
நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் பின்னாடி கட்டாயம் ஒரு பின்னணி இருக்கும். காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது,துன்பங்களும் ,பிரச்சனைகளும் வரும்போது ,--பொதுவாக அப்பாவால் வந்தது,அம்மாவால் வந்தது,கணவனால் வந்தது ,மனைவியால் வந்தது,குழைந்தைகளால் வந்தது என்று பிறரைக் குற்றம் சாட்டி, சொல்வது இயல்பான வாடிக்கையாகி விட்டது.
ஆனால் எல்லா மனிதர்களும் பிறக்கும் போது நல்லவர்களே !அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நல்வினை ,தீவினை என்னும் இரு வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி விடுகிறது ,இதைத்தான் ,கிரியை என்பார்கள் .மாயை என்பார்கள் ,சாத்தான் என்பார்கள் சைத்தான் என்பார்கள்,பிசாசு என்பார்கள்.தலைவிதி என்பார்கள்.வினை என்பார்கள்.
நல்லது செய்தால் நல்லது நடக்கும் ,தீயது செய்தால் தீயது நடக்கும் என்பது பொது முறையாகும் .{நன்றும் தீதும் பிறர் தர வாரா !}நன்மையையும் தீமையும் பிறர தர வாராது என்பது நாம் உணர வேண்டும் ,ஆனால் நமக்கு நல்லது எது?தீயது எது ?என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்,
நல்வினை ,தீவினை எப்படி பதிவாகிறது !
பிற உயிர்களின் உழைப்பால் உணர்வால் கண்ணீரால் எது வரினும் --அதை நாம் தெரிந்தோ !தெரியாமலோ !அதை அனுபவிப்பது -அனைத்தும் தீமைகளையே தரும்,-- அதுவே தீவினையாகும் ,

பிற உயிர்களின் அன்பால் தயவால் கருணையால் மகிழ்ச்சியால் எது வரினும்,அதை தேவைக்கு மேல் பெற்றுக் கொள்ளாமல் வேண்டாம் என்று சொல்லுவதே, நன்மையைத் தரும்,அதுவே நல்வினையாகும்,இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமக்கு எக்காலத்திலும் துன்பம் துயரம அச்சம் பயம் போன்ற கவலைகள் வாராது,
கடவுளின் கருணை !
நாம் துன்பங்களை போக்க எதோ ஒரு கடவுளை வணங்குகிறோம்,துன்பங்கள் போய் விடுகிறது என்பதை மேலே சொன்னோம் .அதன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் .
நாம் வணங்கும் கடவுள் அத்தனையும் தத்துவங்களே ஒழிய, உண்மைக் கடவுள்கள் அல்ல !நாம் வணங்கும் கடவுள் அனைத்தும் மாயையின் வடிவங்களே யாகும் .நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் குற்றங்களை அந்த தத்துவங்களின் உருவங்களின் முன் விண்ணப்பம் செய்து வழிபடுகிறோம்.அதை அந்த உருவங்கள் கவனிப்பதும் இல்ல-- ஏற்றுக் கொள்வதும் இல்லை,ஏன் என்றால் அவை அனைத்தும் உயிர் இல்லாத ஜடங்களே --.நீங்கள் செய்வது எதுவும் அவைகளுக்குத் தெரியாது,அவைகளை உணராது ! அவைகளை கேட்காது ! அவைகளைப் பார்க்காது!அவைகளை ஏற்காது ! அவைகளுக்கு எதுவும் பேசவராது !அசையாத,உயிர் இல்லாத , உருவங்கள் இடத்தில் விண்ணப்பம் செய்தாலும்,வேண்டுதல் செய்தாலும்.வழிபாடு செய்தாலும் ,அவை அனைத்தும் மக்களின் அறியாமையாகும் .இதை நாம் அறிவு கொண்டு உணர்தல் வேண்டும் .
நாம் வேண்டும் வேண்டுதல் எங்கு செல்கின்றன !
ஒரு குழந்தை அழுதால் --பசிக்காகத்தான் குழந்தை அழுகிறது என்று உணர்ந்து ,அழுகுரல் கேட்ட உடனே --குழந்தையைப் பெற்றத் தாய் ஓடோடி வந்து,இருகரம் கொண்டு தூக்கி அனைத்து ,அக்குழந்தையின் பசியைப் போக்குகிறாள் .அதேபோல் நாம் உண்மையாக வேண்டும் வேண்டுதல்கள்,அனைத்தும் ,உண்மைக் கடவுளிடம் போய் சேருகின்றன.
நாம் என்னும் எண்ணங்களும், செயல்களும்,நம்பிக்கைகளும், நம்மைப் படைத்த மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்னும் . உண்மைக் கடவுளுக்குப் போய் சேருகின்றன .அதை வள்ளலார் எப்படி பதிவு செய்துள்ளார் பாருங்கள்.

எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி !
எப்படி எண்ணிய என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெரும் ஜோதி !
எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெரும்ஜோதி !
யாரே என்னினும் இரங்கு கின்றாற்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !
யாரே என்னினும் இரங்கு கின்றாற்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !
என்பார் வள்ளலார் அவர்கள் .
அந்த அருட்பெரும்ஜோதியின் கருணையால் அருளால் நம்முடைய துன்பங்கள் யாவும் தீர்த்து வைக்கப் படுகின்றன ,ஏன் என்றால் .அவர்தான் உண்மையானக் கடவுள் ! அவருடைய குழந்தைகள் தான், நாம் அனைவரும் என்பதை அறிவுக் கண் கொண்டு அறிதல் வேண்டும்.
பல கோடி அண்டங்களை படைத்தவர் அவர்தான்.நாம் வாழும் அண்டமான,இந்த இவ்வுலகமும் அவர் படைத்ததுதான்.--இவ்வளவு பெரிய உலகத்தை உண்டாக்கிய சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் ஒருவர் தான்,அருட்பெருஞ்சோதி ஆண்டவராகும்.-அவர்தான் ,தாவரம் முதல் மனிதர்கள் வரை, எல்லா உயிர்களையும்,உடம்புகளையும் படைத்தவராகும் -அதனால் உயிர்களுக்கு வரும் இடையூறுகள் எல்லாம் விளக்கக் கூடிய ,அன்பு,தயவு,கருணை யாவும் அருட்பெரும்ஜோதிக் கடவுளையே சார்ந்ததாகும் .நாம் அனைவரும் அவருடைய குழைந்தைகள் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் அவருக்குத் தெரியும் .
அவர் எப்படி உள்ளார் !
அவர் எப்படி உள்ளார் !
தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்--
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்து கின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்,
மலரடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம்.
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டு விக்குந் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்!.
என்றும் .
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் ,
என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜ தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்
காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எல்லாம் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .
என்று வள்ளலார் நமக்கு உண்மைக் கடவுளான ''அருட்பெரும்ஜோதி'' கடவுளை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .அந்த கடவுள் நம் சிரநடுவில் உள்ள சிற்சபை என்னும் இடத்தில் --உள் ஒளியாக ,உயிர் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் என்பதை அறிய வேண்டும்.

நாம் இறைவனிடம் வேண்டும் போது,
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
பகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்.
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன்
அச்சம் எல்லாம் துன்பம் எல்லாம் மறுத்து விரைந்து வந்தே
இப்பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி
எண்ணம எல்லாம் முடித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் .
மேலே கண்டபடி உண்மையான அன்பினால் இறைவனை நினைத்து--நினைந்து நினைந்து,உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்று எழும் கண்ணீரால், வேண்டவேண்டும் வழிபட வேண்டும்.அப்போதுதான் இறைவன் கருணைக் காட்டுவார்
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனுடைய குழைந்தை களாகும் அதனால் உலகில் உள்ள எந்த உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல் அன்பு செலுத்த வேண்டும் .அதனால் தான் உயிர்க் கொலை செய்ய வேண்டாம் புலால் உண்ண வேண்டாம் என்று மிகவும் வலியுறுத்தி சொல்லி உள்ளார் வள்ளலார் .
கடவுளை எப்படி காண்பது ?
நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம், கடவுள் தண்டனை கொடுப்பார் என்பது எல்லாம் பொய்யான செய்திகளாகும்.கடவுள் கருணை உள்ளவர் ,அதுவும் தனிப்பெரும் கருணை உள்ளவர் ,அவர் எப்படி தண்டனைக் கொடுப்பார் சிந்திக்க வேண்டும்.
நாம் அறிந்தோ அறியாமலோ தவறு செய்கிறோம்,அதனால் மற்றவர்கள் மூலமாக நமக்கு துன்பம் வருகிறது.--துன்பம் கொடுப்பவரைப் பார்த்து உங்களுக்கு கண்டிப்பாய் கடவுள் தண்டனைக் கொடுப்பார் என்று சாபம் விடுகிறோம் .இல்லையேல் அவரைத் தூற்றுகிறோம்.இதற்கு கடவுள்தான் காரணம் என்று கடவுள் மீது பாரத்தை வைக்கிறோம் .இவை எல்லாம் அறியாமையாகும் ,
நமக்கு பல வழிகளில் துன்பம் துயரம்,அச்சம் பயம் ,போன்ற கவலைகள் வந்து கொண்டே இருக்கிறது !இதற்கு காரணம் என்ன ? அளவுக்கு மீறிய ஆசைகள்!.அளவுக்கு மீறிய பற்றுதல்கள்!.அளவுக்கு மீறிய மோகங்கள்.!இவைகளால் துன்பம் வருகிறது .
உதாரணத்திற்கு ;--நாம் சேர்த்து வைத்து இருந்த பொருள்கள் ,மற்றவர்களால் கொள்ளை போகும் போதும் ,நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் மீதும் ,நாம் பற்றும் பாசமும் வைத்து இருந்த நம் மனைவி -வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிந்த போதும் ,நமக்கு அளவு கடந்த கோபமும் ,வேகமும்,உணர்ச்சியும்,அதிகம் ஆகும் போது ,அதற்கு யார் உடந்தை யானவர்களோ!அவர்களை கொலை செய்து விடுகிறோம்,
கொலை செய்துவிட்ட பிறகு ,எதற்காக கொலை செய்தார் என்பது தெரிந்தாலும் உலகியல் சட்டம் {மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டம் }கொலை செய்த குற்றத்திற்காக --அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப் படுகிறது.--இதற்கு கடவுள்தான் காரணமா ?என்றால் இல்லை .
நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்து இருந்தாலும் ,செய்த தவறுகளை உணர்ந்து .மீண்டும் தவறுகள் செய்யாமல் இருக்க ,செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் ,கடவுள் நமக்கு கருணைக் காட்டுவார் ,ஏன் என்றால் குற்றங்களை குணமாகக் கொள்ளுவது கடவுளின் இயற்கை குணம் ,அதே போல் குற்றங்கள் செய்யாது இருப்பது ,மனிதனின் ஆன்ம குணம் ,--கடவுளும் கருணை உள்ளவர்,கடவுளின் குழந்தை யாகிய ஆன்மாவும் கருணை உள்ளதாக இருக்க வேண்டும் ,இவை மாறுபடுகின்ற போது துன்பம் நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது.
வள்ளலார் சொல்லும் பாடலைப் பாருங்கள்.
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமாகக் கொள்ளல் உனக்கு இயல்பே
சிற்றம் பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
தெற்ரென் றடியேன் சிந்தை தனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்து
இற்றைப் பொழுதே அருட்ஜோதி ஈக தருணம் இதுவாமே !
குற்றங்கள் நாம் செய்து இருந்தாலும் ,குணமாகக் கொண்டு அருள் புரிவது இறைவனாகிய உனக்கு இயல்பானதுதானே !நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்வது ஒன்றும் இல்லை ,ஆதலால் எங்களுடைய டபொய்யான குணத்தை --சிந்தையை தெளிவித்து,அச்சம் துயரம் தீர்த்து இப்பொழுதே அருட்ஜோதி என்னும் உண்மையை உணர்த்தி ,உன்னுடைய பேர் அருளை வழங்கி எங்களை வாழ்வித்திடல் வேண்டும் என்கிறார் .--இவை வள்ளலாருக்கு அல்ல !நமக்காக நாம் அருட்பெருஞ்ஜோதியை எப்படி வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்பதை விளக்குகிறார் .
கடவுள் எங்கு உள்ளார் ?
எவ்வுயிரும் பொது எனக் கண்டு இறங்கி
உப கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர் தம் செயல் அனைத்தும் திருஅருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என்
வாய் மிகவும் ஊர்வதாலோ !
எத்துணையும் பேதம் முறாது எவ்வுயிரையும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !
மேலே காணும் பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?இறைவனால் படைக்கப் பட்ட அனைத்து உயிர்கள் மேலும் அணுத் துகள் அளவும் பேதப் பாடாது ,தன்னுடைய உயிர்போல் எண்ணி ,எந்த உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல்.ஆன்ம நேய ஒருமைப் பாட்டுடன் யார் வாழ்கிறார்களோ!அவர்களை நான் வணங்குகிறேன் ,
ஏன் என்றால் அவர்கள் உள்ளத்தில் தான் {ஆன்மாவில் } கடவுள் நடம் புரிந்து கொண்டு உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன் ,ஆதலால் அவர்கள் இட்ட பணியை செய்ய ,புரிந்திட என்னுடைய சிந்தை மிகவும் ஆவலாக உள்ளன.என்பதை வள்ளலார் பறை சாற்றுகிறார் .
அப்படி வாழ்ந்த அருளாளர்கள் யார் ? எனக்குத் தெரிந்தவரை இந்த உலகத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரைத் தவிர,வேறு யாரும் இல்லை , ஏன் என்றால் அவர் ஒருவர்தான் ;--
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
பசியினால் இளைத்தே
வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பயந்தேன்
நீடிய பிணியால் வருந்து கின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.
இந்த மாதிரி ஒரு அருள் ஞானியை பார்த்தது உண்டா ? கேட்டது உண்டா?அறிந்தது உண்டா ?மனிதர்கள் வாடுவதை பார்த்து இருந்தவர்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்காக பல போதனைகள் சொல்லி இருக்கிறார்கள்.அதனால் மக்கள் அடைந்த பயன் ஒன்றும் இல்லை >
எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தவர் ,அறிந்தவர் ,வாழ்ந்தவர் --அதனால் தான் பயிர் வாடுவதைப் பார்த்த போதெல்லாம் வாடினேன் என்றார்! --அதனால்தான் உயிர்க் கொலை செய்வதை வேண்டாம் என்றார் வள்ளலார் .,அதை விடக் கொடுமையானது ,கடவுள் பெயரைச் சொல்லி கடவுளுக்காக --வாயில்லாத ஆடு,மாடு,கோழி,பன்றி போன்ற உயிர்களை துடிக்க துடிக்க வெட்டி பலிக் கொடுத்து ,உண்ணுகிறார்களே .இதை எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்ளுமா ?அப்படி ஏற்றுக் கொண்டால் அவை கடவுள்களா? வேதனையாக இருக்கிறது .சிந்திக்க வேண்டும் ,உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் செய்யும் செயலா இது ?
அந்த தெய்வங்களைப் பார்த்து வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்!
நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு,பன்றி ,குக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன்.!
துண்னெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும் !
மேலே கண்ட பாடலைப் பார்த்தால் நம் நெஞ்சம் உருகாதா ?நாம் உயிர் வாழ்வதற்கு மற்ற உயிர்களை கொன்று உண்ணலாமா ?இந்த தெய்வம் எல்லாம் கருணை உள்ள தெய்வமா ?கருணைக் காட்டும் தெய்வங்களா !இந்த தெய்வங்கள் அருளை வழங்கும் தெய்வங்களா ?இந்த தெய்வங்களை படைத்தவன் யார்?அவன் மனிதனா ? கொலைகாரப் பாவிகள் அல்லவா ?இந்த தெய்வங்களைப் பார்த்து வள்ளலார் எப்படி பயந்துள்ளார் .நொந்து உள்ளார் !நடுக்கம் உற்று உள்ளார் !இதற்க்காக எப்படி வாடி உள்ளார் !நல்லோர் மனதை நடுங்கச் செய்யலாமா?
இந்த தெய்வங்களைப் படைத்தவர்களுக்கு அறிவு இல்லை !அவர்களுக்கு அறிவைக் கொடுங்கள் என்று உண்மையான இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் .அந்தப் பாடலைப் பாருங்கள்.
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி இன்பம் தந்தீரே !
இந்த மாதிரியான பொய்யானக் கற்பனைக் கடவுள்கள் --சமய ,மத வாதிகளால் படைக்கப் பட்டவைகளாகும்.இவற்றை உண்மை என்று நம்பி,-- பாவம் மக்கள் --பாவத்தை சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள் .--மக்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் ,எல்லா மக்களுக்கும் உண்மையை அறிந்து கொள்ள அறிவைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
வடலூரில் உண்மை தெய்வம் !
இயற்கை உண்மையர் என்றும் --இயற்கை விளக்க மானவர் என்றும் ---இயற்கை இன்ப மானவர் என்றும் --தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லவர் என்றும் ,
எல்லாம் உடையவராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்சோதியர்''என்றும் ,சத்திய அறிவால் அறியப் படுகின்ற உண்மைக கடவுள் ஒருவரே !அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்க மின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை ,இவ்வுலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து,அருளை அடைந்து,அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பலவேறு, சமயங்களிலும் ,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லட்சயங்களைக் கொண்டு நெடுங்காலமும் ,பிறந்து பிறந்து அவத்தை வசத்தர் களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்து களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.
இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் ,முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையராய் ,எல்லா சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் --சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்,பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற் குறித்த உண்மைக கடவுள்!தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சயமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற --
ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,
''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் ,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடு கின்றோம்,''என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .''
அருட்பெருஞ் ஜோதியராய்''வீற்று இருக்கின்றார் .---ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து,தரிசிக்கப் பெறுவீர் களாயிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி ,இறந்தவர்கள் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்.
என்னும் செய்தியை 1874,ஆம் ஆண்டு ஸ்ரீ முக வருடம், தை மாதம் 19,ஆம் தேதி புனர்பூசத் தினத்தன்று வெளியிட்டுள்ளார் வள்ளலார் .
எல்லா உயிர்களுக்கும் கருணைக் காட்டும் கடவுள்தான் ;--
அருட்பெருஞ்ஜோதி--அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்சோதி !
என்னும் கடவுளாகும் ..
ஆன்மநேய அன்பர்களே !மாயையால் உருவாக்கிய பொய்யான தத்துவ உருவங்களை,வணங்காமல், வழிபடாமல் உண்மையான கடவுளாகிய உருவம் அற்ற அருள் ஒளியாக உள்ள அருட்பெரும் ஜோதிக் கடவுளை வழிபடுவோம் .அவர் ஒருத்தர் மட்டும் தான் தனிப்பெரும் கருணை உடையவர் ,அவரால் மட்டுமே உயிர்கள் மேல் அன்பு, தயவு,கருணைக் காட்ட முடியும் .இதுவே சத்தியமான உண்மையாகும் --புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் நீவீர் எல்லாம் புனிதம் உரும் பொருட்டே !என்பது வள்ளலார் வாக்காகும் .
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

நன்மை செய்வோம் நலம் பெறுவோம்
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஆன்மநேயன் ;--கதிர்வேலு,
மீண்டும் பூக்கும் ;--
மீண்டும் பூக்கும் ;--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக