அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா ?

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா ?

எந்த மதமும் போதிக்க வில்லை அப்படியே போதித்து இருந்தாலும் அவை முற்றிலும் தவறானதாகும் .

நம் முன்னோர்கள் ஞானிகள் ,இறை தூதுவர்கள் .சித்தர்கள் ,போன்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொல்வதில்லை மனிதனாக பிறந்த .அனைவருக்கும் அறிவு இயற்கையான  இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது அதை மனத்தைக் கட்டுபடுத்தி அறிவின் முலமாக அறிந்தால் எது உண்மை, எது பொய்யானது எனபதை அறிவே விளக்கம் தரும் .தன்னுடைய அறிவைப் படுத்தாமல் யாரோ ஒரு மூடர்கள்,அறிவு தெளிவு இல்லாதவர்கள் ,சுயநலவாதிகள் பணம் பறிக்கும் பச்சோந்திகள் ,கடவுள் பெயரைச சொல்லி ,வாயில்லாத உயிர்களை பலி கொடுத்து அதன் மாமிசத்தை உண்ணும பழக்கத்தைஉண்டாக்கி  பல்லாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள் .இவை முற்றிலும் தவறான செயலாகும் .ஒரு உயிரைக் கொவதும் அதன் மாமிசத்தை உண்ணுவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும் .தன்னுடைய மனைவி மக்களை கொன்று உண்ணுவதற்கு சம்மமாகும் .தன உடம்பை வளர்க்க ஒரு உயிரைக் கொன்று உண்பது தன்னையே தான் அழித்துக் கொள்வதற்கு சமமாகும் .அறிவுள்ள மனிதர்கள் சிந்திக்க வேண்டும் .படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இதே தவறை செய்து கொண்டு உள்ளார்கள் .உயிர்க் கொலை செய்யும் வரை உந்த உலகம் உருப்படியாகாது ,இதை மனிதர்களாக பிறந்தவர்கள் சிந்திக்க வேண்டும் .வேண்டுமென்று உண்பதில்லை பழக்கத்தினால் உண்கிறோம்.சற்று தனிமையில் இருந்து சிந்தித்து பாருங்கள் .உங்கள் அறிவு உங்களுக்கே பதில் சொல்லும் .நீங்களே உணர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் அன்புள்ள ஆன்மநேய சகோதரர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள் .எல்லாம் நம் நன்மைக்கே என்பதை உணருங்கள் உண்மையுடன் வாழுங்கள் .அன்புடன் --உங்கள் சகோதரன் ஆண்மநேயன் ,கதிர்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக