அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 3 மே, 2011

நடிகராக இருந்தாலும் அரசனாக இருந்தாலும்.

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் புலால் சாப்பிடுபவர்கள் நடிகராக இருந்தாலும்.அரசராக இருந்தாலும்,முற்றும் துறந்த ஞானிகளாய் இடுந்தாலும்,ஆணை பெண்ணாக்கும்,பெண்ணை ஆணாக்கும்,வல்லமை பெற்ற சித்தரகளாய் இருந்தாலும்,ஏன் இவ்வுலகை படைத்த ஆண்டவணாக இருந்தாலும்.கொலையும்,புலைபுசிப்பும் உடைய பழக்கமுள்ளவர்களாய் இருந்தால்,அவர்கள் குற்றம் உள்ளவர்கள் தான்.இறைவன் படைத்த உயிர்களை இறைவனுக்கே அழிக்க உரிமை இல்லை.இறைவன் எந்த உயிர்களையும் அழிப்பதில்லை,உயிர்கள் அறியாமையால் அழிந்து கொண்டு இருக்கின்றன,உயிர்கள் பலபிறப்பு எடுத்து மனிதபிறப்பில் வருவிக்கப்பட்டுள்ளன,மனித பிறப்பு எடுத்ததின் நோக்கமே மரணத்தை வென்று, இறை நிலைக்கு செல்லவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.சாவதென்றும் பிறப்ப்தென்றும் சாற்றுகின்ற் பெரும் பாவந்தன்னை நோவது இன்று புதிதது அன்று,என்றும் உள்ளதால் இந்த நோயை நீக்குவது மன்றுல் நின்றாடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டும் முடியும்,மற்ற பொய்யான இறைவரால் ஆவது ஒன்றும் இல்லை என்கிறார் வள்லலார்.அதனால் ஆதியும்,நடுவும்,அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற் விழைவீர்.இது மேலேறும் வீதி மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி என்கிறார்.ஆதலால் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு!கடவுள் பெயரால் உயிர்க்கொலைச் செய்யாதே!புலால் உண்ணாதே !சாதி சமயம் மதம் இனம் நாடு பொன்ற வேற்றுமைகள் கூடாது,எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.பொய்யான வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்.சாத்திரம்,போன்றவற்றை நம்பக்கூடாது.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.நம் அறிவை அறிவால் அறிகின்ற போது அனைத்து உண்மைகளும் அறிவின் மூலமாக தோன்றும்.எல்லாஉண்மைகளும் தெளிவாக விளங்கும்.அப்பொழுது எது உண்மை எது பொய் என்பது தனக்கு தானே வெளிப்படும்.நம் சிரநடுவில் இருக்கும் உயிர் ஒளியை(சிற்சபை0 இடைவிடாது தொடர்பு கொண்டே இருக்கவேண்டும்.அப்பொழுது நம் அலைபாயும் மனமானது,புறத்தில் செல்லாமல் அகத்தே செல்லும்.மனம் அடங்கி விட்டால்,மனம் அறிவின் சொல்படி கேட்கும்.அப்பொழுது இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவன்,அனைத்தும் ஆன்மாவின் அதாவது உயிரொளியின் உண்மைகள் விள்ங்கும்.கடவுள் நிலையும் அண்டங்கள் செயலும்,அணுக்கள் செயலும் யாவும் பட்ட நடுபகல் போல் வெட்ட வெளிச்சமாக தெரியும்.இதை அனைவரும் உணர்ந்தால் உலகம் அமைதி பெரும்.வள்ளலார் தான் வாழ்ந்து அனுபவித்த உண்மைகளை திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.படித்து அறிந்து அதன்படி வாழ்ந்தால் அனைவரும் நலம் பெறலாம்.அன்புடன் ;--கதிர்வேலு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக