அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 3 மே, 2011

கண்மூடி பழக்கம் நண்பருக்கு கடிதம்

கண் மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்பது உண்மைதான.கண்மூடித்தனமாக எதையும் நம்பக்கூடாது.நமக்கு எதற்கு அறிவு கொடுத்துள்ளார் இறைவர்,அறிவு என்பது இரண்டு வகைப்படும்,மனிதனுக்கு ஆறு அறிவு என்பதும் பொய்யான கருத்தாகும்.உண்மை அறிவு,பொய் அறிவு என்று இருவகைப்படும்.நம்முடைய உடம்பில் இங்திரியங்கள் ,கரணம்,ஜீவன்,ஆன்மா என நான்கு பிரிவுகள் உள்ளன.இந்திரியங்கள் மூலமாக செயல்படுவது.இந்திரிய காட்சி இந்திரிய அறிவு என்றுபெயர்.கரணங்கள் என்னும் மனம்,புத்தி சித்தம்,அகங்காரம் என்னும் உருவமற்ற அணு அலைகள் மூலம் பார்ப்பது,செயல்படுவது.கரண காட்சி,கரண அறிவு என்று பெயராகும்.இந்திரியங்கள்,கரணங்கள் மூலமாக ஜீவனில் பதிவாகி செயல்படும் செயலுக்கு ஜீவகாட்சி,ஜீவ அறிவு என்பதாகும்.அடுத்து ஆன்மா அது உள்ளொலியாக உள்ளது.இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவன் ஆகிய மூன்றின் வழியாக ஆன்ம்காவில் அனைத்தும் பதிவாகும்.இவை யாவும் கண்களில் பார்த்த ஒரு நொடியில் யாவும் நடைபெருகின்றன.இந்த மாயை என்னும் பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் எதை கண்,மனம் மூலமாக நினைக்கிறோமோ அவை யாவும் நடைபெரும்.ஆனால் இவை நிலையானது இல்லை.பொய்யான தோற்றங்கள் பொய்யான செயல்பாடுகள்.இவை யாவும் ஒரு குறிப்பட்ட காலம் இருந்து பின் அழிந்து விடும்.இதற்கு பொய்யான அறிவு என்று பெயராகும்.இவையாவும் மனம் என்னும் கருவி மூலம் செயலபடுவதாகும்.ஆதலால்தான முண்ணொர்கள் மனதை அடக்கவேண்டும் வேண்டும் என்று பல ஜானிகள் பலவழிகளை காட்டினார்கள்.இன்று வரை மக்கள் குழப்பமாகவே இருக்கிறார்கள்.வழிகாட்டிகள் யாரும் ஒரே கருத்தை சொல்லாமல்,போட்டி பொறாமை ஏமாற்றம் வஞ்சகம் பொன்ற பொய்யான கற்பனை கதைகளான வேதம் ஆகமம் புராணம்,சாத்திரம் போன்றவற்றை போட்டி போட்டுக்கொண்டு எழுதி வைத்துள்ளார்கள்.இதையெல்லாம் பார்த்த அருட்பெருஞ்ஜோதி என்னும் பேரொளி பக்குவமுள்ள ஆன்மாவான அருள் ஒளியை வள்லலார் உருவத்திலே அனுப்பி வைத்துள்ளார்.வள்லலார் இந்த உலகை திருத்த வந்தவராகும்.அருளைப் பெற்று தான மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணாமல் எல்லாஉயிர்களும் இனபமுற்று வாழ வேண்டும்.உலக உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல்,விஞ்ஞானம்,அறிவியல்,ஆன்மீகம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். என்னுடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் கிடைத்தவரை வள்ளலார் நெறியை பின்பற்றி வருகிறேன்.இனிமேல் என்னை எப்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயக்குவார் என்று எனக்கு தெரியாது.வள்ளலார் தன்னை குருவாகவோ!தன்னை வழிபடவோ சொல்லவில்லை.அவரை நாங்கள் வழிகாட்டியாகத்தான் நினைக்கிறோமே தவிர குருவாக நினைக்கவில்லை.ஏன் என்றால் வள்ளலாரே தன்னை வணங்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.ஆதியும் ந்டுவும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமினகள் சுகம் பெற விழைவீர்,இது மேலேறும் வீதி மற்றைய வீதிகள் கீழ் செல்லும் வீதி என்று சொல்லிய பிறகு எங்களுக்கு தடுமாற்றமோ அறியாமையோ இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெளிவாக தெரியப்படுத்துகிறேன்.பொய் அறிவுப் பற்றித்தான் மேலே பதிவு செய்துள்ளேன்.உண்மை அறிவுபற்றி பின் எழுதுகிறேன்.உங்கள் ஆன்மநேயன்.கதிர்வேலு

1 கருத்து: