மனம் என்ற கரணங்கள் கண்கள் என்னும் இந்திரியங்கள் மூலமாக செயல்படுகின்றது.ஆதலால் கண்கள் பார்ப்பது மனதில் பதிவாகும்.மனதில் பதிவாவது ஜீவனில் பதிவாகும்.ஜீவனில் பதிவாவது, ஆன்மாவில் பதிவாகும்.ஆதலால் உருவங்களை பார்த்து வழிபாடு செய்பவர்கள்,எக்காலத்திலும் உண்மையை உணரமுடியாது.அதனால் தான வள்ளலார் உருவவழிபாட்டை வேண்டாம் என்று சொன்னார்.உயிரும் ஒளி,கடவுளும் ஒளியாக உள்ளார்.ஒளியை வழிபாடு செய்தால் கண்களின் ஒளிமூலமாக மனம் என்னும் ஓலியில் கலந்து ஜீவன் ஓளிமூலம் ஆன்மாஎன்னும் ஓலியில் பதிவாகும்.அப்பொழுது அருட்பெருஞ்ஜோதியுடன்.இங்திரியங்கள்,கரணம்,ஜீவன் ,ஆன்மா அனைத்தும் தொடபு கொள்ளும்,அப்பொழுது உண்மைகள் தானே விளங்கும்.கூட்டம் சேரவேண்டும் என்பதற்க்காக மக்களை அறியாமையில் தள்ளி விட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வேளையில் சிலகூட்டங்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யான கற்பனைகளை சொல்லி ம்க்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.அதையும் உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆத்லால் தான் வள்ளலார் கலையுறைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண் மூடிபழக்கமெல்லாம் மண்மூடிப்போக என சாடுகிறார்.ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்,இது மேலேறும் வீதி, மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி என்றார்,இதுவரை இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கிறேன்.என்றும்.வைதாலும் வைதிடுமின் வாழ்த்தென கொண்டுடுவேன் மனம் கோனெண் மானமெல்லாம் போன் வழிடுத்தேன் நீவிரெல்லாம் புனிதம் முறுபொருட்டே.என்று நம்மையெல்லாம் அழைகிறார்.அடுத்து மற்றவர்கள் ஏதாவது ஒன்று சோல்ல கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளியுண்டாகும்.அதனால் பல்லிலித்து இருமாந்து கெட நேரிடும்.ஆதலால் எதையும் நம்பவேண்டாம்.நம்மை இயக்கும் உயிர் ஒளியை தொடர்பு கொள்ளுங்கள்.அது வேரெங்கும் இல்லை நம் சிரநடுவில் இருக்கிறது.அதற்கு சிற்சபை என்று பெயர்.சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தியெல்லாம் சத்தியம் சேர்ந்திடுமே,என்று சத்தியம் வைத்து சொல்கிறார் வள்ளலார்.அவர் எழுதிய அருட்பாவில் அனைத்து உண்மைகளையும் தெரியப்படுத்தியுள்ளார்.படித்து பயன் பெருங்கள்.ஆன்ம நேயன்;-கதிர்வேலு.
உருவ வழிபாடு ஏன்? ---வேதாத்திரி மகரிஷி,
பதிலளிநீக்கு28 ஏப்ரல் 2011, 13:53 க்குஇல் Thalavai Samyஆல்
http://arivhedeivam.blogspot.com/2009/10/blog-post_10.html
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.
இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.
குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.
பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.
இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies
இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்
முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.
அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்
ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.