அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 30 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir KathirveluKarthikeyan Sammandam
தவம் ஏன் என்றால் இன்றைய குருமார்கள் ஏற்கனவே வாழ்ந்த குருமார்களின் அடிச்சுவட்டில் இருந்து சிலவற்றை திருடி வெறும் வார்த்தை ஜாலத்தை உருவாக்கி ஒரு பிரமாண்ட புற அமைதியை மட்டும் உருவாக்கி மக்களை மயக்கி காசாக்குகிறார்கள். அதோடு ஒரு தீவினையாளர் ஒரு தீவினை குருவிடம்தான் தஞ்சம் அடைய முடியும். மரணம் அடையப் போகிறவன் மரணம் அடையப் போகிற குருவிடம்தான் வாழ முடியும்.
"கடை விரித்தேன் கொள்வாரில்லை" என வள்ளலார் கூறக் காரணம் என்னவென்றால் வள்ளலார் மரணத்தை வென்றவர், மரணத்தை வெல்ல ஆர்வப்படாத கூட்டம் போகவில்லை எனவே அவ்வாறு கூறினார். எனவே விட்டகுறை தொட்டகுறை உள்ளவர்கள் மட்டுமே உண்மை சத்குருவிடம் வாழ முடியும். யார் யாருக்குப் போதிக்க வேண்டும் என்பதும் இறைவன் செயல்தான்,
ஆன்மநேயஅன்பரே குரு குரு என்று அலைவது ஏன்? குரு மூலமாக நாம் பிறக்கவில்லை.தாயாகி தந்தையுமாய் தாங்கு கின்ற தெயவம்.தனக்கு நிகர் இல்லாதாத தனித்தலைமை தெய்வம்,சேயாக எனைவளர்க்கும் தெயவம்,அவை சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம்.என்று வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார்.சிற்சபையில் இருக்கும் உயிர் ஒளிதான் இந்த உடம்பை இயக்கிக் கொண்டு இருக்கிறது.உடம்பை இயக்கும் ஒளியை தொட்ர்பு சொள்ளாமல்,வேறு மனிதரை தொடர்பு கொள்வதில் என்ன பயன் உள்ளது?வள்ளலார் ஒரு பாடலில் தெரியப்படுத்துகிறார்.உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே யறிவீர் மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர்,மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர்,இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே எண்ணி யெண்ணி யிளைக்கின்றீர் ஏழை உலகீரே,நடம்புரி யென் தனித்தந்தை வருகின்ற் தருணம்,நண்ணியது நண்ணுமினோ புண்ணியம்யஞ் சார்வீரே.என்கிறார்.இதை உணர்ந்தால் வேறு ஒருவரை தேடவேண்டாம் என்பது தெளிவாகும்.உலக இன்பங்களை துறந்தவர் யார் அனைவரும் உலக போகத்திலே இருக்கிறார்கள்.சாதி,சமயம் ,மதம்,சாத்திரங்கள்,புராணம்,இதிகாசம்,போன்ற பொய்யான கற்பனைகளில் இருப்பவர்கள் எப்படி உண்மையை எடுத்துறைக்கமுடியும்,அனைவரும் எதாவது ஒன்றில் பற்று வைத்துள்ளார்கள்.எதிலும் பற்று இல்லாதவர்கள் யார்?சாதரண சடங்குகளையே விடமுடியாதவர்கள்,யுத்தக்குறியான காவி உடையை கூட விடமுடியாதவர்கள் எப்படி குருவாவார்கள்.பொருளை கையில் தொடாதவர்கள் உண்டா?பொருள் இருந்தால் அருள் வருமா?எதிலும் பொது நோக்கம் இருக்கவேண்டும் பொது உணர்வு உண்ர்வு உணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் தோனறா அருட்பெருஞ்ஜோதி என்கிறார் வள்ளலார்.இதையெல்லாம் நீங்களே சிந்தித்தால் விடை கிடைக்கும்.அன்புடம் கதிர்வேலு.கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன் என்பது பொய்யான வார்த்தையாகும்.திரு அருட்பாவில் எங்கும் அந்த வார்த்தைகள் கிடையாது.சமயவாதிகள்,விதைத்த பொய்யான செய்தியாகும்.வள்ளலார் இந்த உலகத்தை திருத்தவந்தவராகும். அதை பொருத்து கொள்ள முடியாதவர்கள்.செய்த சூழ்ச்சியாகும்.அதையெல்லாம் நம்பவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக