வியாழன், 1 ஜூலை, 2010

தமிழ் மொழி ;---பாகம் 5 ,

        இவ்வுலகில் பல்லாயிரம் மொழிகள் தோன்றி இருந்தாலும் ,

தமிழ் மொழியின் தொடக்கத்தில் இருந்துதான் ,

எல்லாமொழிகளும்,

தோன்றியுள்ளது என்பது வள்ளலாரின் உண்மையான,

செய்திகளாகும் .

தமிழை வளர்ப்பதற்கு,தமிழ் நாட்டில் பல தமிழ்ச சங்கங்கள் ,

உருவாக்கப்பட்டு தமிழை வளர்த்து வந்துள்ளது என்பது 

அனைவரும் அறிந்த உண்மைதான் ,

தமிழை யாரும் வளர்க்கவேண்டாம் ,தமிழை 

நேசித்தால் போதும், தமிழ் தானே வளரும்,

என்கிறார் வள்ளலார் .

இதோ வள்ளலார் பதிவு செய்துள்ளபாடல், 

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் 

பக்கநின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் 

ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டியணைதாலும்

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைககரும்பே

வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே 

மெய்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே 

தீர்த்தாவென்று அன்பர் எல்லாம் தொழப் பொதுவில் 
நடிக்கும்

தெய்வ நடத்தரசே என் சிறுமொழி ஏற்றுஅருளே.

என்று வள்ளலார் தெளிவுப்படுத்தியுள்ளார் .

தமிழ் மெய்மையான அறிவை விளக்கும் அருள் மொழியாகும் .

அருள் அமுதமாகும்என்கிறார் வள்ளலார் .

ஆதலால் அனைத்துல மக்களும் போற்றி புகழ்ந்து 

ஏற்றுக்கொள்ளும் மொழி தமிழ் மொழியாகும் .  


மேலும் ஒருபாடலில் பதிவு செய்கிறார் வள்ளலார் .


அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் 


அசையாதே யவியாதே யண்டபகி ரண்டத்


துறையாவும் பிண்டவகைத் துறை முழுதும் விளங்கத் 


தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணிவிளக்கே 


மறையாதே குறையாதே கலங்க்முமில்லாதே 


மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே 


இறையா எவ்வுயிர் அகத்தும் அகபுறத்தும் புறத்தும் 


இலங்கும் நடத்தரசே என் இசையும் அணிந்தருளே 


யாராலும் அசைக்கமுடியாத எங்கள் தமிழ்


என்கிறார் வள்ளலார் .


தமிழை நாம் நேசித்தால் தமிழ் நம் அனைவரையும் 


நேசிக்கும் என்பதை திருஅருட்பாவில் பதிவு 


செய்துள்ளார் வள்ளலார் .


இவ்வுலகை படைத்து ஐந்தொழில்கள் செய்யும் 


மெய்ப்பொருளே/ எனக்கு அருளைக் கொடுத்த 


அருட்பெரும்ஜோதியே/ என்தந்தையே,/ பொய்யான 


வேதம் ,ஆகமம் ,புராணம் ,இதிகாசம் போன்ற 


கதைகளை ,கேட்டு ,நம்பி வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ,


இந்த உலக சமுதாயத்தை திருத்து வதற்க்காக ,என்னை 


வருவித்த அருட்பெரும்ஜோதி உண்மைக்கடவுளே ,


இந்த அறியாத மக்களுக்கு எப்படி உணர்த்துவது ,


எந்தமொழியில் தெரியப்படுத்துவது ,என்பதை 


தெரியப்படுத்தவேண்டும் ,


என்று விண்ணப்பம் செய்கிறார் வள்ளலார் .


எப்படி செயகிறார் என்பதை பின்வரும் பாடலில்,


பதிவு செய்கிறார்.




நாடு கலந்தால்கின்றோர் எல்லோரும் வியப்ப 


நண்ணிஎனை மாலையிட்ட நாயகனே நாட்டில் 


ஈடு கரைந்திடற்கு அரிதாம் திருச்சிற்றம் பலத்தே 


இன்பநடம் புரிகின்ற இறையவனே எனை நீ 


பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே 


பணியிட்டாய் நான் செய்பெரும் பாக்கியம் என்றுவந்தேன்


கோடுதவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற 


குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே .


மற்றும் ஒருபாடல்,


.
ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் 


அருள் அமுதம் முணவளித்தாய்


வெந்தொழில் ஈந்து ஏங்கிய நின் மெய்யடியார் 


சபைநடுவே


என் தந்தை உனைப்பாடிமகிழ்ந்து  இன்புறவே 


வைத்து அருளிச 


செந்தமிழில் வளர்கின்றாய் 


சிற்சபையில் நடிக்கின்றாய் ,


என்று .தமிழ் மொழியின் சிறப்பைப்பற்றி போற்றிப் 


புகழ்ந்துள்ளார் வள்ளலார் .


அருட்பெரும்ஜோதி என்னும் உண்மைக் கடவுள் 


தமிழை எடுத்துக் கொடுக்க தான் தமிழ் மாலையாக


தொடுக்கிறேன் என்கிறார் வள்ளலார் .


இவ்வுலகில் உண்மையை தெரிவிக்க வேண்டுமால் ,


ஏதாவது ஒரு மொழித்தேவைப்படுகிறது.அது 


உண்மையான மொழியாக இருக்கவேண்டும்,


உயிரும் பொருளும் அருளும் இருக்கவேண்டும் ,


என்பதை உணர்ந்த வள்ளலார் ,தமிழ் மொழி மேல் 


அளவுகடந்த பற்றுதலும் ,பாசமும் ,நேசமும் ,அன்பும் 


கொண்டு சுமார் ஆறு ஆயிரம் அருட்பாடல்களுக்கு 


மேல் அருந்தமிழில் எழுதி வைத்துள்ளார்.


அருபாக்கள் முழுவதும் எழுதி வைத்துவிட்டு ,இவைகள் 


யாவும் நான் எழுதவில்லை ,அருட்பெரும்ஜோதியர் 


எடுத்து கொடுக்க நான் அருள் மாலையாக ,


தொடுத்தேன் என்று பெருமையுடன் ,திருஅருட்பாவில் 


தெளிவுப்படுத்தியுள்ளார் .


நான்யார் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது என்று 


தன்னை அடக்கமாக்கிக் கொண்டு ,எல்லாம்


அருட்பெரும்ஜோதி ஆண்டவர் செயல் என்று 


தன்னை மறைத்துக்கொள்கிறார் வள்ளலார் .


அன்பு ,கருணை ,தயவு, ஒழுக்கம் ,உண்மை ,நேர்மை


அருள் அத்தனைக்கும் மொத்தமான் ஒரு மாபெரும் 


அருளாளர் வள்ளலார் ஒருவர்தான் என்பது 


எல்லாவுலகமும் அறிந்ததாகும் .


ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இன்னும் வள்ளலாரை 


சரியாக புரிந்துகொள்ளவில்லை .


அருட்பெரும்ஜோதி ஆண்டவர்;----இந்த உலகில் 


உண்மையை உரைத்த ஒரே ஒரு மனிதர் நீ 


ஒருவர்தான் என்பதை உணர்த்தும் ஒருபாடல்.


பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க 


நான் போய்ப் 


பொது நடங்கண்டு உலம்களிக்கும் போது


மணவாளர்


மெய்பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் 


விளங்க உலகத்திடையே விளக்குக 


என்று எனது 


கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் 


கொண்டேன் 


களித்திடுக இனி உனை நாங் கைவிடோம் என்றும் 


மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண 


மாலை யிட்டோம் என்று எனக்கு 


மாலை யனிந்தாரே.


என்பதை விளக்கியுள்ளார் வள்ளலார் .


மேலும் ஒருபாடல் ;----


உன்னைப்போல் ஒருவரும் இவ்வுலகில் உண்மையை ,


உரைக்கவில்லை என்று அருள் மாலை சூட்டுகின்றார்,


அருட்பெரும்ஜோதி ஆண்டவர் .;---


இன்னுரையன் என்று உலகமெல்லாம் அறிந்திருக்க 


என்னுரையும் பொன்னுரை என்றே அணிந்தான் ;-
தன்னுரைக்கு 


நேர் யார் என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்


 ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து .  


வள்ளலாரின் அருள் நிலையை, அருள் ஆற்றலை, 


அருள் வல்லமையை,அருள் புகழை க்கண்டு ,


அருட்பெரும் ஜோதியே போற்றி புகழ்ந்து உள்ளது 


நாம் அனைவரையும் வியக்க வைக்கிறது .



இனிமேலாவது வள்ளலார் வகுத்து தந்த உலக 


பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்கநெறியைக் 


கடைப்பிடித்து அனைவரும் நலமுடன் வாழ்வோம் .


தமிழையும் தமிழ் வரலாறுகளையும் வள்ளலார் 


எழுதிய திரு அருட்பாவை படித்து தெரிந்து 


கொள்வோம்.


வளர்க தமிழ் 


வாழ்க உலக உயிர்கள் .


நன்றி ;---மீண்டும் பூக்கும் .      










  

3 கருத்துகள்:

23 ஜூலை, 2010 அன்று 7:52 PM க்கு, Blogger இளங்குமரன் கூறியது…

அதிசயம் அதிசயம்....அருமையான செய்திகள். நன்றி ஐயா.

 
24 ஜூலை, 2010 அன்று 4:14 PM க்கு, Blogger இளங்குமரன் கூறியது…

வணக்கம் ஐயா. வள்ளலாரின் கட்டுரை ஒன்றை 1997 ஆம் ஆண்டு தட்டச்சு செய்ய வாய்ப்பு அமைந்தது. அன்று முதல் 75% சைவமாகிவிட்டேன். உங்கள் கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.

நான் சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றேன். தமிழகம் வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். மிக்க மகிழ்ச்சியுடன்
இளங்குமரன்.

 
13 மார்ச், 2011 அன்று 8:16 AM க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

ஆன்ம நேய அன்புடைய இளஙகுமரன் ஐயா அவர்களுக்கு வணக்கத்துடன் வரைவது உங்கள் கருத்துரைக்கு மிக்கம்கிழ்ச்சி நீங்கள் வள்ளலார் மீது வைத்திருக்கும் விருப்பத்திற்கும் திருஅருட்பா வைத்திருக்கும் கருத்துகளுக்கும் மிக்கம்கிழ்ச்சி.உங்களுக்கு இதற்கு மின் மெயிலில் தபால் அனுப்பி இருந்தேன்,இருப்பினும் மறுபடியும் இதை தெரியப்படுத்துகிறேன்.நீங்கள் தமிழகம் வரும்போது அவசியம் எங்கள் இல்லத்திற்கு வருவதை அன்புடன் வரவேற்கிறேன்.நேரில் வள்ளலாரைப்பற்றி கலந்துரை யாடலாம்.அன்புடன்.கதிர்வேலு.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு