புதன், 30 ஜூன், 2010

தமிழ் மொழி ;--பாகம் 4 .

 தமிழ் மொழி, இயற்கை மெய்ப்பொருளாம் அருட்பெரும்ஜோதி 

பேரொளியால் தோற்றுவிக்கப்பட்ட அருள் மொழியாகும் .

தமிழ் மொழிமேல் அன்பும் ,ஆசையும்,ஆர்வமும் ,பற்றுதலும்,

பாசமும் ,நேசமும் ,விருப்பமும் கொண்டு பல அறிஞர் 

பெரு மக்கள் தமிழை வளர்த்துள்ளார்கள் .தமிழ் காவியங்களை 

படைத்துள்ளார்கள் .பல்லாயிரம் ஆண்டுகளாக சங்கம் வைத்து 

தமிழ் வளர்த்துள்ளார்கள் .சங்கம் வளர்த்த தமிழ் தாய்க்குலத்தை 

ஆண்ட தமிழ் என்றெல்லாம் , போற்றி புகழ்ந்துள்ளார்கள்.

தொல்காப்பியர் ,திருவள்ளுவர் முதல் இன்று வரை 

ஆயிரக்கணக்கான தமிழ் அருலாளர்களும்,அறிஞர்களும் 

லஷ்ச கணக்கான தமிழ் நூல்களும் ,தமிழ் இலக்கண,

இலக்கியங்களும் ,படைத்து, வடித்து தந்துள்ளார்கள்.

இன்னும் தமிழை வளர்த்து கொண்டே இருக்கிறார்கள் .

தமிழ் வளர்ந்து கொண்டு இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் 

இல்லை.

எந்தகாலத்தில் இருந்து யாரால் தமிழ்,உலகமெங்கும் 

பேசப்படுகிறது,விஞஞானம்,அறிவியல் ,ஆராயச்சி

பொது உடைமைக்கொள்கைகள் ,மனித நேயம் ,ஆன்மநேயம் ,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் .,சுதந்திரம் ,எல்லோரும் 

இந்நாட்டு மன்னர்கள்,தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்

சகத்தை அழித்திடுவோம்,சாதி ,மதம், சமயம எல்லாம் பொய்

கடவுளை கற்பித்தவன் முட்டாள் ,முடநம்பிக்கைகள் 

முட்டாள் தனமானது ,தனிமனித சுதந்திரம் தேவை ,

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் ,அடக்குமுறை 

ஆட்சி கூடாது ,அன்னியனே வெளியேறு ,என்ற சுதந்திர வேட்கை, 


யாதும் ஊரே யாவரும் கேளீர் ,பிறப்பொக்கும் எல்லா 


உயிக்கும் ,

போன்ற அத்தனை மாற்றங்களும் எந்த காலக்கட்டத்தில் 

இருந்து மக்கள் மனதில் வேர் ஊன்ற ஆரம்பிக்க ஆரம்பித்தது .

என்பதை உணர்ந்தால் ,தமிழ்மேல் இன்னும் அதிக ஆர்வம் 

ஏற்படும்.


உலகம்;--


இவ்வுலகம் எப்பொழுது தோன்றியது என்பது,யாருக்கும் 


தெரியாது .உயிர்கள் தோன்றிய விதம் தெரியாது ,உயிகளுக்கு 


உடம்பு வந்த விதம் தெரியாது ,ஆனால் உடல் பருக்க


உண்ணுதற்கும்


உறங்குதற்கும் பின்மரணம்


அடைவதற்கும் ,

உணர்ந்துள்ளோம். மனம் 


என்னும் மடம் புகும் பேய்

மனத்தாலே மயங்கி வாழ்ந்து 


அழிந்து கொண்டு இருககிறோம்,


வீண்போய்க்கொண்டு,இருக்கிறோம் .


இன்னும் வீன்போகாதே இருக்க 


வேண்டும் என்பதற்காகவும்,புதிய 


மாற்றங்கள் தேவைஎன்பதற்காகவும் ,


இவுலகைப்படைத்த,


'அருட்பெரும்ஜோதி 'என்னும் 


பேரொளி,பக்குவம் என்னும் ஓர் 


ஆன்மாவை,[ உயிரொளியை ]


இவ்வுலகிற்கு ,


அனுப்பி வைக்கப்பட்டது .


அந்த பக்குவமானஆன்மாதான் ,


நம் தமிழ்நாட்டில் தோன்றிய,


ராமலிங்கம் என்ற பெயரில்உதித்த   


அருட்பிரகாச வள்ளலார்


[அருளொளி ]என்பவராகும் ,


வள்ளலார் தான் எதற்காக் வந்தேன் என்பதை தெளிவு 


படுத்தும் பாடல்;----


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிகள் எல்லாம் 


பேய் பிடிப்புற்ற பிச்சுப் 


பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிகள் பல

பேதமுற்று அங்கும் இங்கும் 


போர்ருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 


போகாத படி விரைந்தே


புனிதமுறு சுத்த சன்மாக்க நெறிகாட்டி மெய்ப் 


பொருளினை உணர்த்தி எல்லாம் 


ஏருற்ற சுகநிலை யடைந்திடப் பிரிதி நீ  


என் பிள்ளை யாதலாலே 


இவ்வேலை புரிகவென்றிட்டணன் மனதில் வேறு 


எண்ணற்க என்ற குருவே 


நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 


நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 


நிர்ககுணானந்த பர நாதாந்த வரையோங்கும் 


நீதி நட ராஜபதியே .


என்று வள்ளலார் தான் இவ்வுலகிற்கு வந்த நோக்கத்தைப் 


பற்றி மேலும் ஒருபாடலில் பதிவுசெய்துள்ளார்;------ .


அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் 


அனைவரையும் 


சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து 


அடைவித்திடஅவரும் 


இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு


என்றே எனை இந்த 


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் 


அருளைப் பெற்றேன்.


என்பதை வள்ளலார் தெளிவாக  தெரியப்படுத்தியுள்ளார்.


ஆனால் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களும்,


தமிழ் சான்றோர்களும்,தமிழ் ஆராய்ச்சி யாளர்களும் ,


தமிழ் வல்லுனர்களும் ,தமிழ் சிந்தனையாளர்களும் ,


முத்தமிழ் காவலர்களும்.தமிழகமுதல்வரும்,தமிழக  


அரசும் ஏன் கவனிக்கவில்லை என்பது பெரும் கவலையும் ,


வேதனையும் தருகிறது ,


தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் வெகு 


சிறப்பாக நடைப் பெற்றது .உலகிலுள்ள தமிழ் அறிஞர்


களும் ,தமிழ் சான்றோர்களும் கலந்து கொண்டு மிகச் 


சிறப்பாக சொற்ப்பொழிவு படைத்தார்கள் ,


மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் நன்கு 


புசித்தார்கள் ,


ஆனால் சன்மார்க்க அன்பர்களாகிய நாங்கள் 


புசிக்கவில்லை,ரசிக்கவில்லை, பொறாமை


கொள்ளவில்லை,வேதனைப்பட்டோம் .


வள்ளலாரை புரிந்து கொள்ளும் தகுதி ஒருவருக்கும்


இல்லையே என்பதை நினைத்து வேதனைப்பட்டோம் .


வாழ்க தமிழ் ,


வளர்க உயிர் இனங்கள் .


1874  ம் ஆண்டுக்குப் பிறகு;-- 
நன்றி;---மீண்டும் பூக்கும் 


    

1 கருத்துகள்:

25 மார்ச், 2022 அன்று 12:33 PM க்கு, Blogger தாசெ கூறியது…

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ கஞழவ

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு