*அருட்பெருஞ்சோதி* *அருட்பெருஞ்சோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி*
*🔥ஜீவர்களிடத்தில் பக்தியும் ஆண்டவரிடத்தில் அன்புமே இறைவனது அருளைப் பூரணமாக பெற்று தரும். என்னிடத்தில் உள்ள உயிர்இரக்கம் நீங்கில் எனதுஉயிரும் நீங்கும்🔥*
*.... அருட்ஜோதி வள்ளலார்.*
***************************
*இரக்கத்திற்கு ஒரு வடிவம் உண்டென்றால் அவர் வள்ளல் பெருமான்தான்.*
*கருணைக்கு ஒருவடிவம் உண்டென்றால் அது வள்ளல் பெருமான்தான்.*
*தயவிற்கு ஒருவடிவம் உண்டென்றால் அதுவும் வள்ளல் பெருமான்தான்.*
*மேற்கண்ட இரக்கம் கருணை தயவு என்ற இவையெல்லாம் ஒரே பொருளைத் தரும் அருளுக்கும் ஒருவடிவம் கொடுத்தால் அதுவும் வள்ளல் பெருமான் ஒருவரேதான்.*
*ஆம் ,*
*1: அருளே வடிவாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பரிபூரண அருளை எஞ்சல் இன்றி* *(அதாவது குறைவின்றி)* *பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமான் ஒருவரே ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்ட இப்பிரபஞ்சத்தின் முதல் அருளாளர் ஆவார்கள்.*
*ஆதாரம் ;*
*தேவா நின்பேரருளை என்போல் பெற்றவர் எவ்வுலகில் யார்உளர் சற்றே நீ அறை...*
*..ஆறாம் திருமுறை.*
*************************
*2: அதேபோன்று,*
*முத்தியைக் கடந்த எல்லாம் செய்ய வல்ல சர்வசித்தி வல்லபத்தைப் பெற்றுக்கொண்ட இப் பிரபஞ்சத்தின் முதல் சுத்த சன்மார்க்க மெய்ஞானச் சித்தரும்,நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாம்*
*ஆதாரம்;*
*1: பூரண ஞானமும் பொருளும் உன்னிய எல்லாம் வல்ல சித்தியும் பேர்உவகையும் உதவினை எனக்கே..*
*......(ஆறாம் திருமுறை)*
*2: எல்லாம் வல்ல சித்தெனக்களித்து எனக்குனையல்லாது இலையெனும் அருட்பெருஞ்ஜோதி.*
*......(அகவல் வரி)*
*************************** *3:அண்டபிண்டத்தையெல்லாம் ஆக்கல் முதலாம் ஐந்தொழிலால் ஆளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முதல் பிள்ளையும்,நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாம்*
*ஆதாரம்;*
*ஆக்கல்ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட வீக்கம்எல்லாம் சென்று உன்இச்சையின் வண்ணம் விளங்குக நீஏக்கமுறேல் என்றுரைத்து,* *அருட்சோதியும் ஈந்தெனக்கே ஊக்கமெலாம்உற உட்கலந்தான் என்உடையவனே.*
****************************
*4: ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடிமுடி கண்ட முதல் மகாபுருஷரும்,நமது வள்ளல் பெருமானேயாம்.*
*ஆதாரம் :*
*ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயேஆதி (முதல்வன்) என்றருளிய அருட்பெருஞ்ஜோதி.*
*.....(அகவல்)*
****************************
*5: சுத்த பிரணவ ஞானமென்னும் முத்தேக சித்தியைப் பெற்ற முதல் சுத்த சன்மார்க்க மெய்ஞானியும், நமது வள்ளல் பெருமானேயாம்.*
*ஆதாரம்:*
*என்றும் இறவாநிலையில் இன்ப அனுபவனாகி இயல் சுத்தமாதி மூன்றும். எந்நாளும் உன்இச்சைவழி பெற்று வாழ்க.* *யாம்எய்தி நின்னுட் கலந்தேம்.இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈது எம்மாணை என்றகுருவே.*
*.....(ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை)*
****************************
*6:கருணையும் சிவமே பொருள் எனக்கண்டு கருணையே வடிவாய் நின்று அண்டகோடிகள் அனைத்தையும் தமது அருள் வல்லபத்தால் அருளாட்சி செய்கின்ற பிரபஞ்சத்தின் முதல் அருளாளரும் நமது வள்ளல் பெருமானேயாம்.*
*ஆதாரம்:*
*அண்டகோடிகளெலாம் அரைக்கணத்தேகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே.*
*....(ஆறாம் திருமுறை அகவல்வரி)*
****************************
*7: படிவான் முதல் (படி -மண், வான் -விண், முதல்) படைத்தல் ஐந்து தொழிலையும், ஞானம் படைத்தல் முதல் ஐந்து தொழிலையும் ஒருங்கே நடத்துகின்ற பிரபஞ்சத்தின் முதல் பஞ்சகிருத்தியரும், ஒரு ஆன்மா மனிதப்பிறவி எடுத்து, தமது பரிபூரண ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொண்டு, அருட்பெருஞ்ஜோதியை அடைந்து , ஆண்டவரது புனித குலத்தின் முதல் அருள்பிள்ளையென்ற பட்டத்தையும் வென்ற இப்பிரபஞ்சத்தின் பெருமைக்குரிய முதல் ஆன்மாவும் நமது வள்ளல் பெருமான் ஒருவரேயாகும்;*
*ஆதாரம்;*
*கொலைபுரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே.நீஎனது குலத்து முதல்மகனே. மலைவறவே சுத்தசிவ சமரசசன்மார்க்கம் வளர வளர்ந்திருக்க என வாழ்த்திய என்குருவே.*
*....ஆறாம்திருமுறை*
*எனவே.. ஆன்மநேய உயிர் உறவுகளே.. சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று அறிவோம், சுத்த சன்மார்க்க நிலையை பெறுவதற்கு முயல்வோம் . சுத்த சன்மார்க்க சுகநிலையை அடைந்து ஆன்மலாபமாகிய சுத்த சன்மார்க்கப் பெருவாழ்வாம் மரணம் இல்லாத பெருவாழ்வு என்னும் உன்னத பெருவாழ்வை பெற்று உய்வோம்.* ****************************
*...தயவான நன்றிகள். வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,*
*வள்ளல் அடிமை,*
*வடலூர் இரமேஷ்.*
*7708490336.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக