158 ஆவது சத்திய தருமச்சாலை தொடக்க விழா !
*158 ஆம் ஆண்டு தொடக்க விழா !*
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!
பசித்த ஏழைகளின் பசிப்பிணியை தவிர்க்க 25-5-1867 ஆண்டு (வைகாசி 11 ஆம் நாள்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் *வள்ளல் பெருமான் அவர்களின் திருக்கரங்களால் தீ மூட்டி துவங்கி வைக்கபட்டதுதான் வடலூரில் இயங்கிவரும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்பதாகும்.*"
*உலக அதிசயம் !*
*உலக வரலாற்றில் ஆதரவு அற்ற ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" என்பது உலக அதியங்களில் ஒன்றாகும்*
*வழிப்பாட்டு முறையை மாற்றிய புரட்சியாளர்!*
*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும், உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் புதிய ஆன்மீக வழிப்பாட்டு புதிய புரட்சி கருத்தாழம் உள்ள முறையை, அதன் உண்மையை வெளிப்படுத்திவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்*
*மேலே கண்ட உண்மையை கருத்தில் கொண்டு வழிப்பாட்டு விசயத்தில் சன்மார்க்கிகள் ஒத்த கருத்தோடு ஒத்துரிமையோடு கவனமாக செயல்பட வேண்டும்*
*வடலூரில் சத்திய தருமச்சாலை விழா !*
*வருகின்ற 24-5-2024 ஆம் தேதி வைகாசி மாதம் 11 ஆம்நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யானது 157 ஆம் ஆண்டுகள் நிறைவு அடைந்து 158 ஆம் ஆண்டு துவக்கவிழா சிறப்பாக கொண்டாடப் படஉள்ளது*
அனைவரும் தருமச்சாலை விழாவில் கலந்து கொண்டு அவரவர்களால் இயன்றஅளவு உதவி செய்தி அதனால் கிடைக்கும் ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்டு ஆன்ம லாபம் அடைந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் ஆன்மநேயன் *"முனைவர் சுத்தசன்மார்க்க சுடர்" ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
வடலூர்
*9865939896*
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு