*சன்மார்க்க கொடி கட்டுதல்!*
*22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள்7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை காலை் 8 மணிக்கு முதன் முதலில் சன்மார்க்க கொடியை கட்டிய பின்புதான் நீண்ட பேருபதேசம் செய்கின்றார்*
*இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியம், கொடியை ஏற்றி உபதேசம் செய்ய வில்லை. கொடியை கட்டிக் கொண்ட பின்புதான் உபதேசம் செய்கின்றார்*
*கொடி சம்பந்தமான சிற்சக்தி துதி என்னும் தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்துள்ளார்*
*சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு சங்கங்களிலும் கொடியை ஏற்றும் போதும் ஒவ்வொரு பாடல்கள் பாடி கொஞ்சம் கொஞ்சமாக கொடியை ஏற்றி இறுதியாக கொடியின் கயிற்றைக் கட்டி ஜோதிப் பாடல்களும் மற்ற பாடல்களும் பாடி வழிபாடு செய்துகொண்டு வருகிறார்கள் அவ்வாறு செய்வது சரியா?*
*கொடியை முழுவதுமாக மேலே ஏற்றி கம்பத்தில் கட்டிவிட்ட பின்பு வழிபாடு செய்வதே சிறந்த வழிபாடாகும்*
*வள்ளலார் கொடி கட்டிக் கொண்டேன் என்றே சொல்கின்றார்,கொடியை ஏற்றுகிறேன் என்று சொல்லவில்லை,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்*
*கொடியின் விளக்கம்!*
*இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.!*
*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்:?*
*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது.இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.*
*பஞ்ச பூத உடம்பில் இயங்கி கொண்டு இருந்த ஆன்மாவை, ஜீவன் என்னும் உயிரை,மற்றும் உடம்பை அருளால் அருள் பிரகாசத்தால் அருள் உடம்பாக மாற்றிக் கொண்டார் வள்ளல்பெருமான், அதனால் திருஅருட் பிரகாச வள்ளலார் என்றுபெயர் சூட்டப்பெற்றது,அவற்றிற்குஅருள் தேகம் என்றும் பெயர். சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் பெயர்.*
*அதனாலே கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி என்னும் பாடலில் தெரியப்படுத்துகின்றார்*
*வள்ளலார் பாடல்!*
*கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி*
*கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி*
*அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி*
*அருளமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.!*
மேலும்.....
*தானேநான் ஆனேன் என்று சின்னம் பிடி*
*சத்தியம் சத் தியம் என்று சின்னம் பிடி*
*ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி*
*ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.!*
மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்
*கோடி சூரிய பிரகாசம் உள்ள ஆன்மா என்னும் ஒளி தேகமானது,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று அருள் ஒளி தேகமாக மாற்றம் அடைந்துள்ளது. அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறிவிட்டது என்பதாகும்.*
*வள்ளலார் பாடல்!*
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
*மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!*
*இப்போது கொடியின் வண்ணம்!*
*மேல் பாகம் மஞ்சள் நிறம் வண்ணம் கால் பாகமும், கீழ்பாகம் வெண்மை நிறம் வண்ணம் முக்கால் பாகமும் கலந்த இரண்டு வண்ணங்களாக கலந்து உள்ளன என்பதை தெரியப் படுத்துகின்றார்*
*மஞ்சள் வண்ணம் அருளைக் குறிக்கின்றதுவெள்ளை வண்ணம் "அருள் பிரகாசத்தைக் குறிக்கின்றது*
*இராமலிங்கம் என்னும் பெயர் கொண்ட உடம்பு உயிர் ஆன்மாவைத் (அடையாளம்) தாங்கியவர்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய அருளால், திருஅருட்பிரகாச வள்ளலாராக மாற்றிக் கொண்டார்.*
*எனவே கொடிக்கட்டி கொண்ட படியால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம் என்று அழுத்தமாகச் சொல்லுகின்றார்* .
*சன்மார்க்க காலம் என்றால், மனிதகுலம் மரணத்தை வெல்லும் சாகாக்கல்வி கற்கும் மார்க்கமே சுத்த சன்மார்க்க காலம் என்பதாகும்*
*ஆன்மா அற்ற, உயிர் அற்ற, உடம்பு அற்ற அருள் ஒளி தேகமாக மாற்றிக்கொண்டு என்றும் அழியாத அழிக்க முடியாத,பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.அதன் உண்மையை வெளிப்படுத்தும் காரண காரியமாக, வெளிப்புறத்தில் அடையாள வண்ணமாக சுத்த சன்மார்க்ககொடிகட்டிக் கொண்டதே அதன் விளக்கமாகும்*
*உதாரணம் கோழி முட்டை வடிவம்!*
*கோழி முட்டை மத்தியின் மேல்புறம் மஞ்சள் வண்ணம் உள்ளதுபோல்,கீழ்புறம் வெள்ளை வண்ணம் உள்ளது போல் அருள் தேகம் மஞ்சள் வண்ணம் கால்பாகம் வெள்ள வண்ணம் முக்கால் பாகம் கொண்டதாகும்.*
*நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியைக் கடைபிடித்து,அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக்!
அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்கசுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக