🌲🌴🌞🌸🏵️☘️🔥🌀🌹🍎🙏
1) ஜீவன் என்றால் என்ன?
2) ஆத்மாவிற்கும் ஜீவனுக்கும் என்ன ஒற்றுமை ?
🌲🌴🌞🌸🏵️☘️🔥🌀🌹
அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம்.
பொதுவாக *"ஜீவன்"* என்ற சொல் *"உயிர்"* ஆகும்.
இந்த தேகத்தில் *"நித்திய ஜீவன், அநித்திய ஜீவன்"* எனும் இரண்டு வகை உண்டு.
*"நித்திய ஜீவன்"* என்பது *"ஆன்மா"* ஆகும். இதுவே *"சாமான்ய ஜீவன்"* எனப்படும். இது சிரநடுவில் நிராதாரநிலையில் சதா ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இது அனாதியானது; பிறப்பு இறப்பு அற்றது. என்றும் உள்ளது. அறிவே வடிவமானது. இதை *"அக வானம்"* என்பர் மெய்ஞ்ஞானிகள். இது *"அறிவு ஆகாயமாய்"* உள்ள சிற்சபை ஆகும்.
இந்த ஆன்மா ஆகிய நித்திய ஜீவனிட த்திருந்துதான் *"உயிர்ச்சக்தி"*(உயிர்) வெளிப்படுகின்றது, தாயின் கருவறையிலே முதல் நாளிலே.
இந்த உயிர்ச்சக்திக்கு உணர்வும், ஆற்றலும், ஓர் வடிவும் உண்டு. அதாவது *"உயிர் உணர்வு ஆற்றல் வடிவம்"* கொண்டது.
இந்த உயிர்ச்சக்தி, ஆண்- பெண் தேகப் புணர்ச்சியின் போது சுக்கில- சுரோணித சேர்க்கையான அந்த நொடியிலே (தாயின் கருப்பையில்) *"ஆன்மாவிலிருந்து வெளிப்படுகின்றது"*. இது வெளிப்படுகின்ற அதே கணத்தில், பௌதிக பிண்ட அணுக்கள் சூழ்ந்து உடல் உருவமாய் வளரத்தொடங்குகின்றது. 10 மாதம் பூர்த்தியாகி ஒரு குழந்தையாய் இவ்வுலகுக்கு வாழ்வனுபவம் ஏற்க வருகின்றது.
இந்த *"அநித்திய ஜீவன்"*(உயிர்) பௌதிக உடலின் ஒவ்வொரு திசுக்களின் ( . Body cells ) உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும்.
அகத்தே இருக்கும்
*"ஆன்மாவாகிய காரண சரீரத்தையும்"* புறத்தே இருக்கும் *"தூல சரீரத்தையும்"* இணைப்பது இந்த *"சூக்கும சரீரமாகிய"* உயிர்ச் உணர்வு சக்தியே.
*"அதாவது, தலைநடுவில் உள்ள அருவமான ஆன்மாவையும், புறத்தே தோன்றும் உருவமான உடலையும் இணைப்பது நடுவில் உள்ள அருவுருவமான உயிர்."*
இந்த அநித்திய ஜீவனாகிய *"உயிர் உணர்வு"* மூலம்தான் இவ்வுலகில் *"வாழ்வனுபவம்"* பெறுகின்றோம்.
புற உலகில் இன்ப துன்ப அனுபவம் ஏற்கின்றோம்.
*"வாழ்வின் அந்தியத்தில் இந்த உயிர் உணர்வு சக்தி ஆன்மாவில் உள்ளொடுங்குகின்றபோது மரணம் நிகழ்கின்றது."*
உடல் தனித்து விடப்பட்டு, ஆன்மா வேறு தேகம் ஏற்க வெளியேறிவிடுகின்றது.
அநித்திய *"ஜீவனாகிய இந்த உயிர்ச்சக்தி இதயஸ்தானத்தையே இருப்பிடமாகக் கொண்டது"* எனினும்,
மூலாதாரம்.
சுவாதிட்டானம்,
மணிபூரகம்,
அனாகதம்,
விசுத்தி,
ஆக்ஞை ஆகிய அந்தந்த இடங்களிலும் வியாபித்து நின்று விளங்கும்.
முடிவாக, சுத்த சன்மார்க்கத்தில் இந்த *"அநித்திய ஜீவனாம் உயிர்-ஆற்றல்- உணர்வு- வடிவத்தையே"* ( சூக்கும தேகம் ) பிரணவ தேகமாக மாற்றிக்கொண்டு,
தூல தேகத்தை *"சுத்த தேகமாகவும்"* ,
காரண ஆன்மாவை *"ஞானதேகமாகவும்"* மாற்றி,
என்றென்றும் அழியாது நித்தியானந்தத்தோடு வாழ்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.
கருத்து:----
திருவருட் பிரகாச வள்ளலார், தயாநிதி சுவாமி சரவணானந்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக