அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 6 அக்டோபர், 2022

முதல்வர் திரு ,ஸ்டாலின் பேசியது ?

 *கோயபல்ஸ் கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த மு.க.ஸ்டாலின்!*


சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியபோது, 


திமுக ஆட்சியில் வள்ளலார் முப்பெரும் விழா நடப்பதைப் பார்த்து, மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலருக்கு ஆச்சர்யமாகவும், ஏன், அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்.


*ஏனென்றால், ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக.*


அரசியல் லாபத்துக்கும், சுயநலத்திற்கும், உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே ஆன்மீகத்தை பயன்படுத்தி வருவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி.


தமிழ் மண்ணின் சமயப் பண்பாட்டை அறிந்தவர்கள், இதை நன்கு உணர்வார்கள்!


பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை என்று உணர்த்தி, பிற்போக்குக் கயமைத்தனங்களை எதிர்த்த வள்ளுவரின் மண்தான், இந்தத் தமிழ் மண்!


*‘நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்’* என்று முழங்கிய சித்தர்கள் உலவிய மண், நம்முடைய தமிழ் மண்!


*‘இறைவன் ஒருவன்தான், அவன் ஜோதி வடிவானவன்’* என்று எடுத்துச்சொன்ன வள்ளலாரின் மண், இந்த தமிழ் மண்!


*‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’* என்ற திராவிடத்தின் மூலக்கருத்தியலை முதலில் சொன்னவர் அய்யன் வள்ளுவர் பெருமான்.


*‘சாதியும் - மதமும் - சமயமும் பொய்’* என ஆதியில் உணர்த்தி, *‘சாதி - மதம் - சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்; சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்’* – எனப் பாடியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளார்.


*‘சாத்திரக் குப்பையும் தணந்தேன்’* என்றும் *‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக’* என்றும் கடைசி வரை பாடியவர் அவர்.


*சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே*

*சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே*

*ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!*

*அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே* - என்று

பாடியவர் வள்ளலார் பெருமான் அவர்கள்.


இத்தகைய வள்ளலார் பெருமான் அவர்களைப் போற்றுவது

என்பது, திராவிட ஆட்சியின் கடமை.


எனவே, *‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’* என்ற திருமூலரின் கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு எடுத்துரைத்த நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் வழியில், *வள்ளலாரின் பிறந்தநாளை ‘தனிப்பெரும் கருணை நாள்’* என நாம் அறிவித்திருக்கிறோம்!


இவ்வாறு அவர் பேசினார்.


திமுக இந்து மதத்துக்கும், இந்து சமயக் கடவுள்களுக்கும் எதிரி  என்ற பொய்யை மாறி மாறி வாந்தி எடுத்து அரசியல் பிழைக்க நினைக்கும் RSS சங்கிகள் மற்றும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கோயபல்ஸ் கும்பல் இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக