*முதல் மனித பிறப்பு வள்ளலார் !*
*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்ற அருள் நிறைந்த பக்குவ ஆன்மா* *ஆதலால் உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பே முதல் பிறப்பாகும்.*
*வள்ளலார் வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட மரபினில் வந்த ஒருவர் அல்ல..*
அவர் ஒரு தனிப்பிறவியாகும்
*வள்ளல்பெருமானுக்கு முன் பிறப்பும் இல்லை.பின்பிறப்பும் இல்லை யாரையும் பின்பற்றவும் இல்லை*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் மரணத்தை வென்று ஐந்தொழில் வல்லபம் பெற்றவர்*
*ஆன்மாக்கள் சாதி.சமயம்.மதம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றி அறிவு விளக்கம் இல்லாமல் தாழ்ந்த கதி அடையும்போது உண்மையை விளக்கி மேல்நிலைக்கு கொண்டு செல்லவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பபட்டவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பக்குவ ஆன்மாவாகும்*
வள்ளலார் பாடல்!
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த *உலகர் அனைவரையும்*
*சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்*
*இகத்தே பரத்தைப்* பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!*
*என்னும் பாடலின் வாயிலாக தெளிவான விளக்கம் அளிக்கிறார்*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையும் ஆன்மாக்களின் உண்மையும் தெரிந்து கொண்டால் மட்டுமே தெளிவான உயர்ந்த அறிவு சார்ந்த உண்மை விளங்கும்*
*ஆன்மாக்கள் !*
*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் இடம்தான் அருள் நிறைந்த பெரு வெளியாகும்*
வள்ளலார் பாடல்!
*அருட்பெரு வெளியில்* அருட்பெரு உலகத்
தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
*அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்*
அருட்பெருந் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் சோதி என்அரசே.!
*என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் ஆட்சி புரியும் இடத்தை தெளிவாக சொல்லி விளக்குகின்றார்*
*அந்த அருள் பெருவெளியான கடவுள் சமூகத்தில் ஆன்ம ஆகாயம் என்று ஓர் பகுதி உள்ளது அங்கு 1.பக்குவ ஆன்மாக்கள்.*
*2.அபக்குவ ஆன்மாக்கள். 3.பக்குவாபக்குவ ஆன்மாக்கள் என மூன்று வகையான ஆன்மாக்கள் நிறைந்து உள்ளன*
*ஆன்மாக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருள் சக்தியே காரணமாகும்.*
(ஆன்மாக்களை பிரித்து எடுக்கும் ஆற்றல் அங்கு விளங்கும் அருட்சக்தியால் மட்டுமே முடியும்)
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பலகோடி உலகங்களையும் அண்டங்களையும் படைத்தது ஆன்மாக்கள் சென்று வாழ்வதற்கே படைக்கப்பட்டதாகும்.*
*வள்ளலார் பாடல்!*
*குலவு பேரண்டப் பகுதி* ஓர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற் பலபொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்து மேல் இடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது தொழியாது அதுவதில் விளங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!
*எண்ணில் அடங்காத பலகோடி அண்டங்கள் ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்காகவும் வாழ்க்கை வசதிக்காகவும் படைக்கப்பட்டுள்ளதாகும்*
ஆன்மாக்களின் உண்மையை ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார் வள்ளலார் !
*பஞ்ச பூத உலகத்தில் ஆகாயம் அனாதி அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி*
*அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி.அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ.அதேபோல் கடவுள் இடத்தில் (சமூகத்தில் ) அருட்சக்தி அனாதியாய் இருக்கின்றன.*
*ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன அதுபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன.*
*அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.*
அணுக்களின் பேதம்!
பஞ்சபூத ஆகாயத்தில் இருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் ஏழு வகையாகப்பிரியும்அவை யாவன...
1.வாலணு.
2.திரவவணு.
3.குருவணு.
4.லகுஅணு.
5.அணு.
6.பரமாணு.
7.விபுவணு
மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இந்த ஏழுவிதமான அணுக்களின் சேர்க்கையால் தான ஆன்மாக்களின் தகுதிக்கு தகுந்தவாறு உயிரும் உடம்பும் கொடுக்கப்படுகிறது.
*இவற்றில் *காரணவணு.*
*காரியவணு காரண காரியவணு* என மூன்று வகையாய் *பக்குவம் அபக்குவம்.*
*பக்குவாபக்குவம் என நிற்கும்.*
*இவைபோல் ஆன்ம ஆகாயமான கடவுள் சமூகத்தில் ஆன்மாக்களும் மூவகையாய் நிற்கும்.*
யாவை எனில் ...
*பக்குவ ஆன்மா*
*அபக்குவ ஆன்மா*
*பக்குவாபக்குவ ஆன்மா*
என மூவகைப்படும்
*ஆகாயத்தில் இருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம்.*
*அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருட்சத்தியேயாம்*
*அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு அருட்சத்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை.கிரியை.ஞானம் என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள...*
அவை யாதெனில்?
*கர்மதேகம்.*
*பிரணவதேகம்*
*ஞானதேகம்*
என மூன்றுவிதமாகும்*.அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம். *பூத ஆகாயத்தில் உண்டான வாயு பேதத்தினால் சோம சூரிய அக்கினி என மூன்று வகை நிற்பன போல் உணர்க என்கின்றார் வள்ளலார்*
*மேலே கண்ட உண்மையான காரண காரியங்களை விபரமான விளக்கங்களை சாதாரண அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது* ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறினால் *ஆன்ம அறிவு விளங்கி *அருள் அறிவால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.* இதற்கு அனுபவ அறிவு என்று பெயர்
வள்ளலார் சொல்கிறார் !
*ஆன்மாக்கள் !*
*ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் (விருப்பத்தால்) அருட்சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க ( அசைவு கொடுக்க ) ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழில்படும்.*
*மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே.மேற்படி ஆகாயம் சந்தானமானதால் ஆன்மாக்கள் நிரம்பி இருக்கும்.*
*ஆதலால் பஞ்ச கிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது.*
*ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதி இயற்கை அல்ல.ஆதி செயற்கையேயாம்.*
*அதேபோல் ஆணவம் அனாதியில் இயற்கையேயாம்.* *இதன் இரகசியம் குருமுகமாய் அறிக என முடிக்கிறார்.*
*இங்கே குரு என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதாகும்*
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)
*பக்குவம். அபக்குவம். பக்குவா அபக்குவம் உள்ள ஆன்மாக்களில் அபக்குவம் உள்ள ஆன்மாக்களை மட்டுமே பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.*
*அந்த ஆன்மாக்கள் பல தேகங்கள் எடுத்து வாழ்ந்து இறுதியாக மனித தேகம் எடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பக்குவம் அடைந்து அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டும்*
*பக்குவம் உள்ள ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டுபாட்டில் இருந்து கொண்டே இருக்கும்.அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்*
பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் மாயையின் கட்டுபாட்டிற்கு அனுப்பி மாயையின் ஆணைப்படி அதிகாரத் தலைவர்களாக செயல் படுத்தப்படும்.
அபக்குவம் உள்ள ஆன்மாக்கள் சகலர் என்பதாகும்.
பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் பிரளயாகலர் என்பதாகும்.
பக்குவம் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் அறிந்த விஞ்ஞானகலர் என்பதாகும்.
*வள்ளல்பெருமான் வந்த விபரம்!*
சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பத்தில் வள்ளலாரே சொல்கின்றார்!
*இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில்.இயற்கை விளக்க நிறைவாக விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்.இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்து அருள்கின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !*
*அறிவு என்பது ஒரு சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம் சிற்றணுப் பசுவாகி யருகிக்கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி யிருந்து அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து*.
*எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம்மனிதப் பிறப்புஉடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச்செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் எவ்வாறு கருதுவேன் என்னென்று சொல்வேன் என்கிறார்.*
மேலும் சொல்கிறார்!
*சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்து அறியப்படாத பெரிய உலகின் கண்ணே போராசை.பெருங்கோபம்.பெருமோகம்.பெருமதம்.பெருலோபம்.பேரழுக்காறு.பேரகங்காரம்.பெருவயிரம். பெருமடம் பெருமயக்கம் முதலிய பெருங் குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றை யிடங்களிற் பிறப்பியாமல்*
*குணங்களே பெரும்பாலும் விளைதற்குரிய இவ்விடத்தை உறுப்பிற் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம் மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னவென்று கருதி என்னவென்று துதிப்பேன் என்கிறார்.*
மேலும் சொல்லுகிறார்!
*வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்கு வித்தருளினீர்* என்கிறார்
மேலும் சொல்கிறார்.
*வாலிபப் பருவம் தோன்றுயபோதே சைவம்.வைணவம்.சமணம்.பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்.அச் சமயங்களிற் குறித்த சாதனங்களும்.தெய்வங்களும்.கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்*
*அந்த சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆச்சாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற் தடை செய்வித்து அருளினீர் என்கிறார்*
*இவற்றை எல்லாம் எப்போது ? சொல்கிறார் வாலப பருவம் தோன்றுவதற்கு முன்னமே தெளிவாக அறிந்து சொல்கிறார்*
மேலும் சொல்லுகிறார் !
*தமிழ் மொழி!*
*இடம்பத்தையும்.*
*ஆரவாரத்தையும்*. *பிரயாசத்தையும்* *பெருமறைப்பையும்* *போது போக்கையும்* உண்டு பண்ணுகின்ற *ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது.*
*பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் லேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்.*
*சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றிடத்தே மனம் பற்றச் செய்து அத் தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருளினீர் என்று தெளிவாக சொல்லுகிறார்.*
இன்னும் விரிக்கில் பெருகும்...
மனிதர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?
*வள்ளலார் எழுதிய திருஅருட்பா திருவருளால் எழுதி படைக்கப்பட்ட இயற்கை உண்மை நூலாகும்.*
*மனித தேக ஆன்மாக்களை அருள்தேகமாக மாற்றி இயற்கை இன்பத்தை அனுபவிக்க அருட்பெருவெளிக்கு அனுப்ப வந்தவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை ஒவ்வொரு மனித ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.*
*உலகிலே எல்லா வகையிலும். எல்லாத் தரத்திலும்.எல்லா குணத்திலும் உண்மையை மட்டும் சொல்ல வந்த உயர்ந்த ஒரு அருள் நூல் திருஅருட்பா மட்டுமே என்பதை அறிந்து படித்து பயன்பெற வேண்டும்.*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக