அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 16 நவம்பர், 2021

பஞ்ச பூதங்களின் செயல் !

 *பஞ்ச பூதங்களின் செயல்!* 


பாரொடு நீர் கனல் காற்று ஆகாயம் எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான

ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய்


இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய்

நேருறும் அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடு 

பூரணமாய்


நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற் குணமாய்

ஓர்தரு சன் மாத்திரமாம் 


திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!


*இவ்வுலகில் இயங்கும் நீர் நிலம் அக்கினி காற்று ஆகாயம் எனும் பஞ்சபூதங்கள் எல்லாம் இயற்கையானது அல்ல.*

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்* *படைக்கப்பட்ட செயற்கையான  ஜட அணு* *தத்துவங்களாகும்* 


*அத் தத்துவங்களுக்கு எனத் தனித்தனி காரண காரியங்களும் அமைப்புகளும் அதிகாரங்களும் ஆற்றல்களும் செயல்பாடுகளும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டுள்ளன* அதனதன் வேலைகளை சரியாக முறையாக  செயல்பட்டுக் கொண்டுள்ளன. 


*பஞ்ச பூதங்களிலே மிகப்பெரியது ஆகாயம். அதற்கும் சிறியது காற்று. அதற்கும் சிறியது அக்கினி. அதற்கும் சிறியது  நீர். அதற்கும் சிறியது மண்(பூமி)*


 *அந்த ஐந்து பூதங்களையும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றுவதற்கும் செயல்படுவதற்கும் ஒன்பது கிரகங்கள் அதாவது (ஒன்பது துவாரங்களையும்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்*


*அதேபோல் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளன என்கிறார் வள்ளலார்*


*ஆன்மாக்கள் உயிர்கள்!*


*இவ்வுலகில் இறைவனால்  அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு முதலில் உயிரைக் கொடுத்து பின் உடம்பு கொடுக்கப்படுகிற து.*  *பஞ்சபூத அணுக் கருவிகளைக்கொண்டு கட்டிக்கொடுக்கப்பட்டதுதான் உடம்பு என்னும் வாடகை   வீடாகும் அச்செயல் எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.*


*ஆன்மாக்கள்  அருள் உடம்பு என்னும் ஒளி உடம்பு  பெறுவதே சொந்த வீடாகும்*


*உயிரும் ஆன்மாவும் ஒரேத்தன்மையாக இருந்தாலும் வெவ்வேறு செயல்பாடுகள் உடையது.* 


*உயிருள்யாம்  எம்முள் உயிர்* *இவை யுணர்ந்தே*

*உயிர்நலம் பரவுக என்று  உரைத்தமெய்ச் சிவமே!* ( அகவல்)


*பஞ்ச பூத உடம்பில் ஆன்மா இருந்தால் உயிருக்கு வேலை*  *அருள் உடம்பு பெற்றால் உயிருக்கு வேலை இல்லை ஆன்மாவிற்கு மட்டுமே வேலை என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்*


*ஒவ்வொரு உருவ மாற்றத்திற்கும் தோற்றத்திற்கும் அதாவது பிறப்பு இறப்பிற்கும் பஞ்சபூத தத்துவ அணுக் கருவிகளே காரண காரியமாய் உள்ளன.*


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆன்மா தொடர்பு கொண்டு அருளைப்பெற்றால் மட்டுமே உயிரும் பஞ்சபூத கருவிகளான  உடம்பும் ஆன்மாவிட்டு விலகும்*. *ஆன்மா அருளைப்பெற்றால்தான் மரணத்தை வெல்லமுடியும்.*

*மரணத்தை வெல்லும் தகுதியை ஆன்மா பெறுகின்றவரை பஞ்ச பூதங்களும் உயிரும் ஆன்மாவை விட்டு விலகாது* 


*வள்ளலார் பாடல்!*


ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி


ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து

அருட்பெருஞ் சோதி கண்டாடேடி பந்து!  


*மேலே உள்ள பாடலில் கண்டபடி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் வள்ளலார். அவரைப்போல் நாமும் பின்பற்ற வேண்டும்.நாம் பின்பற்ற வேண்டிய ஒரே மார்க்கம் அதாவது நேர்வழியைக் காட்டும் மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்* அச்சங்கத்தின் வழியே சென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளமுடியும். 


*உலகில் உள்ள உயிருள்ள ஜீவராசிகளிடம் ஆன்மநேயமும் ஈரமான உயிர் இரக்கமும் அதாவது இடைவிடாது தயவு கருணை என்னும்  காருண்யமும்*காட்டவேண்டும். மேலும் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இடைவிடாத அன்பும் காதலும் பற்றும் எவரிடத்தில் உள்ளதோ அவருக்கு ஆண்டவர் அருளை வாரி வாழங்குவார்* 


*அருள் பெற்ற ஆன்மாவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது* 


*வள்ளலார் பாடல்!* 


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்

*எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!*


என்னும் பாடல் வாயிலாக விளக்கம் தருகிறார் வள்ளலார்.   


*ஆன்மாவை விட்டு பஞ்சபூத தத்துவ  அணுக்கள் மரணம் அடையாமல்  விரையம் ஆகாமல் நரை திரை பிணி மூப்பு  துன்பம் துயரம் அச்சம் பயம் மற்றும்  முதிர்ச்சி அடையாமல் விலகிவிட்டால் ஆன்மா அருள்ஒளி உடம்பு பெற்று என்றும் அழியாமல்  எங்கு வேண்டுமானாலும் தன் விருப்பம்போல் செல்லலாம் செயல்படலாம்*


*மேலும் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதிக்கலாம் மற்றும்  எல்லாம் தடையின்றி நடைபெறும் என்பதே மரணத்தை வென்று வாழும் பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையாகும்.*

 *இங்வுலகில் பொருள் பெற்று வாழ்வதற்கும் அருள் பெற்று வாழ்வதற்கும் பஞ்சபூத தத்துவ அணுக்களே காரண காரியமாக உள்ளன என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு என்றும் அழியாத நன்நிதியாகிய அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக