*துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்!*
*வள்ளலார் பாடல்!*
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் *சுத்தசிவ*
*சன்மார்க்க சங்கம்* தலைப்பட்டேன்* - என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே *வான் நாட்டார்* *புகழ்கின்றார்*
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் என்கிறார் வள்ளலார். *துன்மார்க்கம் என்றால் எந்த மார்க்கம் ?*
*உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கத்தை சார்ந்தது என்கிறார்*.
அப்படியானால் *மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சாதி.சமயம் மதம்சார்ந்த மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கங்களே* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
*வள்ளலார் பாடல்!*
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்
போகாத படிவிரைந்தே
*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*
*பொருளினை* *உணர்த்தி* எல்லாம்
*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ*
*என்பிள்ளை ஆதலாலே*
*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்த பரநாதாந்த வரை ஓங்கு
நீதிநட ராஜபதியே.!
உலகில் தோன்றிய சாதி சமய மதம் சார்ந்த நெறிகள் யாவும் *பேய்பிடித்த பைத்தியக்காரத்தனமாக* போருற்று (சண்டைப்போட்டு) *இறந்து வீண்போய் கொண்டுள்ளார்கள். *இன்னும் உயிர்கள் அழிந்து வீண்போகாதபடி காப்பாற்ற வேண்டும் என்பதே ஆண்டவரின் அவசரமான விருப்பம்*.
ஆதலால் *புனிதமுறும் சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து அம்மார்க்கத்தின் வழியாக *உண்மையான மெய்ப்பொருளை(கடவுளை)* மக்களுக்கு உணர்த்தி வெளிப்படையாக காட்டி உண்மை ஒழுக்க நெறிகளைப் பின்பற்றச் செய்து *மரணம் அடையாமல் காப்பாற்றி பேரின்ப சித்தி சுகநிலை அடைந்திட புரிந்திட செய்திட வேண்டும்*.
அதற்கு தகுதியான *ஒரே நபர் நீ தான்* *என்பிள்ளை* ஆதலாலே *இவ்வேலை புரிக என்று ஆணை இட்டுள்ளேன்*.
மனத்தில் வேறு எதையும் நினைத்து மயங்கிட வேண்டாம்.பயம் கொள்ள வேண்டாம் என்று *மெய்ப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முழு சம்மதத்தோடு வள்ளல்பெருமானுக்கு அந்த உயர்ந்த பொருப்பை அளிக்கிறார்*
*துன்மார்க்கத்தை அழித்து சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிக்க இறைவனால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார்.*
மேலும் சொல்லுகிறார்!
*பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்* *ஓர்*
*பவநெறி* *இதுவரை பரவியது* அதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி *நீ*
*புன்னெறி* *தவிர்த்தொரு* *பொதுநெறி எனும்வான்*
*புத்தமு தருள்கின்ற* *சுத்தசன் மார்க்கத்*
*தன்னெறி* *செலுத்துக* என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!
என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகிறார்.
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையைத் சிரமேற்கொண்டு வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1872 ஆம் ஆண்டு மாற்றம் செய்து வடலூரில் தோற்றுவிக்கிறார்*.
*மக்கள் சுத்த சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினராகும் தகுதிகள் என்ன* ? என்பதை வள்ளலார் சொல்லுகிறார்.
*சுத்த சன்மார்க்க தகுதிகள்*
சுத்த சன்மார்க்கத்திற்கு *முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் கை விட்டவர்களும் காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும்.*
*கொலை புலை தவிர்த்தவர்களும்.மேலும் ஜீவதயவு உடையவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்*.
*இவர்கள்தான் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலியவைகளை தவிர்த்துக் கொள்வார்கள்*.
மேலும் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்* *முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்ககூடாது*.
*சமய மதங்களில் சொல்லிய காட்டிய பொய்யான பலப்பல தத்துவ தெய்வங்களை வணங்காமல் வழிபடாமல்*.
*வள்ளலார் காட்டிய உண்மைக்கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மைக் கடவுளை அறிந்து தெரிந்து உணர்ந்து புரிந்து வணங்கவும் வழிபடவும் வேண்டும்*.
*வள்ளலார் பாடல்!*
உருவராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
*ஒருவரே உளார் கடவுள்* கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரே யாம் என்றும் இயலும்
ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத் துழல்வதென் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ.!
*ஒரு உடம்பில் ஒரே உயிர்தான் இருக்கமுடியும் இருக்கவேண்டும்*. *இரண்டு மூன்று ஐந்து உயிர்கள் இருக்கிறது என்றால் எவ்வாறு நம்ப முடியாதோ* ! அதேபோல் உலகத்தை இயக்குவது *ஒரேக் கடவுள்தான் உண்டு என்பதுதான் உண்மை* என்பதை மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவாகப் பதிவு செய்கிறார்.
*அந்த ஒரேக்கடவுளைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே*
அந்தக் கடவுளுக்கு *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!*
என்று பெயர் சூட்டியவரும் வள்ளலார் ஒருவரே.
*வானாட்டார் புகழ்கின்றார்*
*பஞ்ச பூதங்களில் கலந்தவர்களில் வானத்தில் கலந்தவர்கள் உயர்ந்தவர்கள்*
*வானாட்டார் என்பது மரணத்தை வென்று வானத்தில் (ஆகாயத்தில்) கலந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அருளாளர்கள்.* அதாவது *மாணிக்கவாசகர்* போன்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்..
(கடவுளிடம் எவரும் சேரவில்லை கலக்கவில்லை.)
அவர்கள் துன்மார்க்கத்தை தொலைத்து சுத்த சன்மார்க்கத்தை நிறுவிய
வள்ளலாரைப் போற்றி புகழ்கின்றார்கள் என்கின்றார்.
*ஏன்என்றால்? அவர்களுக்கு எது உண்மை மார்க்கம் எது பொய்யான துன்மார்க்கம் என்பதை அறிந்தவர்கள்* மேலும் அவர்கள் பொது உணர்வுடன் வாழ்ந்து முக்தி சித்திப் பெற்றவர்கள் ஆவார்கள் அவர்கள் வள்ளலாரைப் போற்றுகிறார்கள்.
*இனி சுத்த சன்மார்க்கம் எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.*
*வள்ளலார் பாடல்!*
*பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே*
*சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே* -
*சொன்மார்க்கத்*
*தெல்லா உலகும் இசைந்தனவே* *எம்பெருமான்*
*கொல்லா* *நெறிஅருளைக் கொண்டு*.!
*இறைவனால் படைத்த எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தாரால் மட்டுமே முடியும்.*
*சாதி சமய மதத்தை பின்பற்றிக் கொண்டு சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அருள்பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்*.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை! (அகவல்)
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக