*பொய் உண்மையானது!*
மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் தங்கி இருக்கும் போது மக்கள் தங்கள் குறைகளையும் துன்பங்களையும் போக்கிக்கொள்ள கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர்.
ஒருநாள் கொங்கண தேசத்தில் இருந்து வந்த இருவர் தங்களுக்குண்டான *வெண் கருங்குஷ்டத்தால்* வருந்துவதை விண்ணப்பிக்க வள்ளலார் ஐந்துவேலை மருந்துகொடுக்க பெற்றுக் குணமடைந்தனர்.
*பொய் உண்மையானது*
மக்கள் வள்ளலார் இடம் வந்து போவதை கவனித்த இருபது வயதுள்ள *துலுக்கப்பையன்*
(முஸ்லீம்பையன்) ஒருவன் *வள்ளலாரை சோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று *சிரங்கு* என்றுகூறி இவற்றை நீக்கவேண்டும் என்று வேண்டினான் *வள்ளலார் சிலநாள் பொறுத்துக்கொள் குணமாகும் என்றார்*.
வெளியில் வந்து பஞ்சை அகற்றினான் சிரங்கு இல்லாத *உடம்பு முழுவதும் சிரங்காகியது.*
*விளையாட்டு*
*வினையாயிற்று**பின்பு வருந்தி சரணடைந்தான்*.
*வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் உள்ள கேணியில்* *மூழ்கச் சொன்னார்*.
*அவ்வாறே*
*மூழ்கியதும்* *குணமடைந்தான்*.
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைத்த தேர்வில் (சோதனையில்) எல்லாவற்றிலும் வெற்றிபெற்றவர் நமது வள்ளல் பெருமான்*.
*வள்ளலார் பாடல்* !
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் *வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்*
*தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்*.
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!
*இரகசியமாக சொன்னது*
மேலும் ஒரு துலுக்க வைத்தியன் ஒருவன் வள்ளலாரிடம் வந்து என்னிடம் ஒரு ரகசியம் உள்ளது என்றான்.
*என்ன ரகசியம் என்று வள்ளலார் கேட்க*
*ரஸபஸ்பம் செய்ய இன்ன மூலிகை உள்ளது* என்று பிறர் கேட்காமல் ரகசியமாக வள்ளலார் காதில் மட்டும் கேட்கும்படி கூறினான்.
உடனே வள்ளலார் *ரஸபஸ்பம்* செய்வதற்கு *பல மூலிகைகள் உண்டு* என்று அனைவருக்கும் கேட்குபடி உரத்தகுரலில் கூறினார். மேலும் மூலிகையின் பெயரையும் வெளிப்படையாக கூறினார்.
*தங்கம் செய்வதற்கும் ரஸபஸ்பம் செய்வதற்கும் ரஸம் கட்டுவதற்கும் பற்று அற்றவர்களுக்கே பலிக்கும்*
*வள்ளலார் பாடல்* !
*பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென*
*தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி*! (அகஙல் )
*நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே*
*வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே*! (அகவல்)
*துறையிது வழியிது துணிவிது நீசெயும்*
*முறையிது* *வெனவே மொழிந்தமெய்த் துணையே*! (அகவல்)
*நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற*
*அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே!* (அகவல்)
நாம் தெரிந்து கொள்ள வேண்டியுது யாதெனில் ?.
*உலகப்பற்றான மாயைப்பற்றை (பொருள்பற்றை) விட்டு* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றினால் எல்லாம் கைகூடும்* .
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து !
*வள்ளல் இருக்க வாட்டம் ஏன்* *நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக