*ஆன்மா உயிர் உடம்பு வந்த வழி !*
*வள்ளலார் பாடல்!
*உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்*
*உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்*
*மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர்* *மனத்தை*
*வசப்படுத்தீர்* *வசப்படுத்தும் வழிதுறை கற் றறியீர்*
*இடம்பெறு பொய் வாழ்க்கையிலே* *இன்பம் துன்பம் அடுத்தே*
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!
*ஆன்மாவிற்கு *உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொண்டால்தான் உடம்பையும் உயிரையும் பாதுகாத்து ஆன்மா அருள் பெற்று புண்ணியம் என்னும் பேரின்பத்தை அடையமுடியும் என்கிறார் வள்ளலார்*.
அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் தினமும் மூன்று வேலையும் உண்ணுதற்கும் உறங்குதற்கும் மட்டுமே தெரிந்து கொண்டு *பேய்பிடித்த மனம்* போல் கண்டபடி தாவி தாவி அலைந்து கொண்டு உள்ளீர் என்று சொல்கிறார்.
*நாம் முதலில் ஆன்மாவைப் படைத்தவர் யார்?*என்பதையும்* *இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து உடம்பு உயிர் எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ? அருளைப்பெற வேண்டிய அவசியம் ஏன்? யாரிடம் அருளைப் பெற வேண்டும் ? அருளைப்பெறுவதால் ஆன்மா அடையும் லாபம் என்ன ? என்பதை தெரிந்து கொண்டால்தான் நாமும் அருளைப் பெறுவதற்குண்டான ஆசை வரும்*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகம்!*
சுருக்கமாக சொல்கிறேன் ! .
*அருட்பெருவெளி என்ற ஓர் மாபெரும் இடம் உண்டு.அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாம்ராஜ்ஜியம் ( ஆட்சிபுரியும் இடம்)* *அந்த எல்லைக்குள் ஆன்ம ஆகாயம் என்ற ஓர் இடம்உண்டு*. *அங்கு அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.*
*அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்*
*அவ் ஆன்ம அணுக்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே யார்? என்பதும் தெரியாது வெளி உலகம் எதுவும். தெரியாது*
*பஞ்ச பூத உலகம்!*
*ஆன்மாக்கள் உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே பஞ்சபூத உலகம் படைக்கப்பட்டது*.
பஞ்சபூத உலகத்தை நிர்வாகம் பண்ணும் உரிமையை *மாயை மாமாயை பெருமாயை* என்னும் மாயாசத்தியிடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. *ஆண்டவர் கட்டளைப்படி மாயாசக்திகள்தான் ஆன்மாவிற்கு பஞ்சபூத அணுக்களைக் கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக்கொடுத்து உயிர் இயக்கத்தினை ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி ஆன்மாவை குடியிருக்க வைக்கிறது* *அதற்கு ஜீவதேகம் என்றுபெயர்*
*அந்தவீடு ஆன்மாவிற்கு வாடகை வீடாகும். வீட்டின் வாடகைதான் தினமும் கொடுக்கும் உணவாகும்*.
*ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஜீவதேகம் என்னும் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்*.
*அதற்கு அருள்தேகம் ஒளிதேகம் ஆன்மதேகம் என்று பெயர்.*
*பஞ்சபூத அணுக்களால் பிண்ணப்பட்ட ஊன் உடம்பை (ஒளிஉடம்பாக) அருள் உடம்பாக மாற்றும் முறையைக் கற்றுத் தருவதுதான் *சுத்த சன்மார்க்கம்*
சுத்தசன்மார்க்கத்தில் கற்கும் கல்விக்கு சாகாக்கல்வி என்பதாகும்.*
*வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம்*.
அறிவு என்பது ஒர் சிறிதும் தோன்றாத *அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் *சிற்றணுப்பசுவாகி* அருகிக்கிடந்த அடியேனுக்குள் *உள்ளொகியாகி இருந்து* அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து *எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம்மனித தேகத்தில்* என்னை விடுத்துச் சிறிது *அறிவு* விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன்! என்னவென்று சொல்வேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருமையைப் போற்றுகிறார்.
மேலும் *இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில்? *நான் ஆன்மா! சிற்றணு வடிவின்ன்* . *மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது* *இருப்பிடம் லலாடஸ்தானம் அதாவது *உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேல் புருவமத்தி (சிற்சபாஅங்கம்) என்னும் இடத்தில் பாதுகாப்பாய் இயங்கிக் கொண்டு உள்ளது*
அதன் வண்ணம் *கால்பங்கு பொன்மை.*
*முக்கால் பங்கு வெண்மை* கலந்த வண்ணமாக உள்ளன.
*இப்படிப்பட்ட ஆன்ம்பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழுதிரைகளால் மறைக்கப்பட்டுள்ளது.*
*இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்*
*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்?*
*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது* *அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;*
*இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்*.
*மஞ்சள் வர்ணம் என்பது பொன் வர்ணம் அருளைக் குறிப்பதாகும்*
*வெள்ளை வர்ணம் என்பது பிரகாசத்தைக் குறிப்பதாகும்*
*ஆதலால் அருட்பிரகாசவள்ளலார் என்பதாகும்.*
*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படுகிறது*.
*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உடம்பைஇயக்கும் உயிரையும் அழிக்காமல் பின்னம் செய்யாமல் பாதுகாத்து மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆன்மா ஆன்ம இன்ப லாபம் அடையவேண்டும்.*( உடம்பு அழிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு)
*ஆன்ம இன்ப தேகமான சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் மாற்றத்தினால் முத்தேக சித்திப்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக சேர்ந்து பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே.ஆன்மாக்களை இந்த பஞ்சபூத உலகத்திற்கு வருவிக்க உற்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.
வள்ளலார் சொல்லியவாறு ஆன்மாக்கள் இவ்வுலகில் உடம்பு உயிர் எடுத்து வாழ்ந்து இன்பம் துன்பம் அனுபவித்தால் மட்டுமே நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்கிறார் வள்ளலார்
*கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி* *கூத்தாடுகின்றோம் என்று சின்னம்பிடி*
*அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம்பிடி*
*அருளமுதம் உண்டோம் என்று சின்னம்பிடி !*
என்றும் மேலும்
*அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*
*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*
*மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு*
*மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு*
என்று ஆனந்தக் கூத்தாடுகின்றார் வள்ளலார். *ஒவ்வொரு ஆன்மாவும் வள்ளலார் பெற்ற பேரின்ப நிலையை அடையவேண்டும் என்பதாலே என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்று நமக்காக ஆண்டவர் இடத்திலே விண்ணப்பம் செய்து வேண்டுகிறார்*.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக