*அருள் பெறுவதற்கு திருமணம் தடையா*?
வள்ளலாரின் சிறுவயதுமுதல் நெருங்கிய நண்பர் சென்னையில் வாழ்ந்த இரத்தினமுதலியார் என்பவராகும் அவர் தமிழ் ஆசிரியர். *வள்ளலாருக்கு வேட்டி வேண்டும் என்றாலும் கூட அவரிடம்தான் சொல்லுவார்* அவர்தான் வாங்கியும் அனுப்புவார் அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்.
சென்னையை விட்டு வடலூர் வந்து தங்கியிருந்த காலத்தில். வள்ளலார் அதிகப்பழக்கமும் அதிக கடிதத் தொடர்பும் கொண்டதும் இரத்தினம் அய்யா அவர்களிடமே.
ஒவ்வொரு கடிதத்திலும் உடம்பை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றும்.
*ஜீவகாருண்யம்**பாசவைராக்கியம்*.
*சிவபக்தி* அவசியம் கடைபிடிக்க வேண்டும். *இவை கிடைப்பதற்கு சாதுக்கள் சார்பு அவசியம் வேண்டும்*. இக்காலத்தில் சாதுக்கள் கிடைக்காவிடினும் நம்மை எழுபிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துக் பேரின்பம் என்னும் கரையில் ஏற்றும் சைவத் திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்து சிவபெருமான் திருவடிகளைப் பற்றவேண்டும் என ஒவ்வொரு கடிதத்திலும் தெரிவிப்பார்.
*திருமணம் ஏற்பாடு நடைபெறுகிறது.*இரத்தினம் அய்யா அவர்களுக்கு அவரது வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்வதை வள்ளலாரிடம் கடிதம் மூலமாக தெரிவிக்கிறார்.
*வள்ளலார் சொல்லும் பதில் மிகவும் சிந்திக்க வைக்கிறது*
தாம் எழுதிய கடிதம் வரக்கண்டு அதில் உள்ளவைகளை அறிந்து கொண்டேன்.
*பரம சிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம் என பதில் கடிதம் அனுப்புகின்றார்*( இதனுடைய உள் அர்தத்தை சிந்திக்கவும்)
அன்றியும் விவாகஞ் செய்துக் கொண்டாலும் அதனால் வருத்தப்பட நம்மை சிவபெருமான் செய்விக்கமாட்டார்.ஆதலால் சந்தோஷமாக விவாகத்துக்குச் சம்மதிக்கலாம்.
தாம் தடைசெய்ய வேண்டாம்.
*எந்தகாலத்தில் எந்தஇடத்தில்*.
*எந்தவிதமாக எந்தமட்டில்* *எதை அனுபவிக்க வேண்டுமோ* *அதை அந்தக்காலம்* *அந்த இடம்* *அந்தவிதம்*.*அந்தமட்டு பொருந்தப் பொசிப்பிக்கின்றது.*
*திருவருட் சத்தியிருந்தால் நமக்கென சுதந்தரம் இருக்கின்றது.**எல்லாம் திருவருட்சத்தி காரியம் என்று அதைத் தியானித்து இருக்க வேண்டும்.*
*உண்மை இது இதைக்கொண்டு தெளிந்திருக்க வேண்டும்*.
*எனக் கடித்த்தில் தெரிவிக்கிறார்*.
வள்ளலார் சம்மதம் தெரிவித்துவிட்டார் எனக்கருதி இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.
திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தி அருளவேண்டும் என்று இரத்தினம் அய்யா வள்ளலாருக்கு கடிதம் எழுதுகிறார்.
*வள்ளலார் திருமணவிழாவிற்கு போகவில்லை* அதற்கு பதில் கடிதம்.
*தங்கள் மணக்கோலத்தை காணக்கொடுத்து வையாதவனாக இருந்தாலும் கேட்டு மகிழும்படி பெற்றேன்*. என்று விரிவாக கடிதம் எழுதுகிறார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்? திருமணம் செய்துகொண்ட இரத்தினம் அய்யா அவர்கள் வள்ளலார் சொல்லியவாறு வாழ்ந்து அருள்பெற்று மரணத்தை வென்றுவிட்டாரா ?
மரணம்தான் அடைந்தார்.
*உண்மையில் கடவுள்மீது பற்று இருந்தால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார்*
மேலும் சொல்கிறார்.
புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
*உகுந்தருணம்* *உற்றவரும்* *பெற்றவரும்* *பிறரும்**உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே*
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனேமெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியேசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.!
மேலே கண்ட பாடலில் எந்த பற்றும் இருக்ககூடாது என்கிறார்.
மேலும் இரண்டாம் திருமுறையில் ஒருபாடல்!
புண்ணைக் கட்டிக்கொண்டே அதன்மேல் ஒருபுடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வார் இவர் கொள்ளிவாய்ப்பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.!
மேலே கண்ட பாடலையும் கவனிக்கவும்.
*அருள் பெறுவதற்கு திருமணம் தடையா ? இல்லையா ? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்*
*வள்ளலாருக்கு பின்பு ஒருவரும் தேறவில்லை என்று கேட்பவர்களுக்கு என்னபதில் என்ன காரணம் சன்மார்க்கிகள் சொல்லப்போகிறீர்கள் ?
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடுகதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக