அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 11 ஜூலை, 2021

திருஅருட்பாவின் விளக்கம் அறிவது எங்கனம ?

 *திருஅருட்பாவின் விளக்கம் அறிவது எங்கனம்?*


கடலூரில் உள்ள காரணப்பட்டு என்ற ஊரில் பிறந்ததால் காரணப்பட்டு கந்தசாமி என்று பெயர் பெற்றார்.இளம்

வயதில் கல்வியில் சிறந்து விளங்கினார்.

பாகூர் என்னும் ஊரில் கணக்கு வேலை பார்த்துவந்தார்.


இவருக்கு உடல்நடுக்கமும் தலை சுற்றலும் என்னும் பிணி ஏற்பட்டது.பல மருத்துவர்களை நாடியும் மருத்துவங்கள் செய்தும் குணமாகவில்லை.


ஒருநாள் ஒரு பெரியவர் கந்தசாமி அய்யா வீட்டிற்கு வந்தார் அவரிடம் தமக்கு உள்ள  நோயின் தன்மையை எடு்த்துரைத்தார்.(அந்தபெரியவர் யார் என்பது தெரியாது)


அது கேட்ட அப்பெரியவர் வடலூரில் இராமலிங்க அடிகள் இருப்பது பற்றியும், அவர் பலருக்கு பல்வேறு பரோபகாரங்கள் செய்து கொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். அவரிடம் சென்றால் இவ்வுடல் நடுக்கமும், தலை ஆட்டமும் மாறும் நிற்கும் உடனே குணமாகும் எனவும் கூறினார்.


அவர் சொல்லியவாறே வடலூர் சென்று வள்ளலாரைச் சந்தித்து ஆசிபெற்று பூரண குணமானார்.

அதிலிருந்து வள்ளலார் மீதும் அவர் எழுதிய திருஅருட்பா மீதும் அளவில்லாத பற்றுக்கொண்டார்.வள்ளலாரிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிடைத்தது.

வள்ளலாரைத் தனக்கு கிடைத்த அருட்குருவாகவே எண்ணிக்கொண்டார். 


திருஅருட்பாவை தமிழகம் எங்கும் இசையோடு பாடி மக்கள் மத்தியில் பரவச் செய்தவர்தான் *சமரச பஜனை காரணப்பட்டு கந்தசாமிபிள்ளை என்பவராகும்*.

*அவர் எப்போதும் திருஅருட்பாவை தன் கையிலே வைத்திருப்பார்*.


*திருஅருட்பா விளக்கம் அறிதல்!*


*ஒருநாள் கந்தசாமி அய்யா அவர்கள் திருஅருட்பாவை கையில் வைத்துக்கொண்டு மாயவரம் சென்றார்*.அதே நாளில் மாயவரம் வித்வான் நடராஜபிள்ளயும்.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும் மற்றும் பல அறிஞர்களும் இருந்தனர்.அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.


மீனாட்சிசுந்தரம் அவர்கள் கந்தசாமிபிள்ளையைப் *பார்த்து கையில் உள்ளது என்ன புத்தகம்* என்று கேட்க *வள்ளலார் எழுதிய *திருஅருட்பா* என்றார்.


உடனே மகாவித்வான் அதனைப்பெற்று *மகாதேவமாலையில்* *கருணைநிறைந்து* என்னும் முதல் பாசுரத்தை அங்குள்ள வித்வான்களிடம் காட்டி பொருள் விளங்குமாறு சொல்லவேண்டும் எனக்கேட்டார்.


ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றிய விளக்கங்களை எடுத்துக்கூறினர். *மகாவித்வான் எழுந்து  திருஅருட்பாவைத் தன் தலைமீது வைத்துக்கொண்டு* போற்றித்துதித்து ஆனந்தித்து இருப்பதே அப்பாடலுக்கு உரை என்றனர்.


இதில் இருந்து *நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?* திருஅருட்பாவிற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு மனித தரத்தில் விளக்கம் சொல்லி வருகிறார்கள். அதனால் திருஅருட்பாவின் உண்மைவிளக்கம் தெரிந்து கொள்ள சாதாரண மக்களால் முடியவில்லை.


*எப்படித் தெரிந்து கொள்வது?* 


*ஒரேகடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்ற உண்மை உணர்ந்து.

அத்தெய்வத்தை *ஸ்தோத்திரம் செய்கின்றதாலும் இடைவிடாது நினைக்கின்றதாலும் அதிக உஷ்ணம் உண்டாகும்*.


அந்த விசார உஷ்ணத்தால் நம் ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடிஇருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகள் நீங்கும் .(மாயாத்திரை)


ஒரு ஜாமநேரம் மனத்தில் இகவிசாரமின்றிப் பரவிசாரப்புடன் ஆன்மநெகிழ்ச்சியோடு  தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம். 


*ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள முதல்திரை விலகினால் மட்டுமே ஓர்அளவிற்கு திருஅருட்பாவின் விளக்கம் புரியும்*


திருஅருட்பாவின் விளக்கம் எளிதில் அறிந்துகொண்டு அருளைப்பெற்று பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக