அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 10 ஜூன், 2021

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !

 *சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல்* ! 


தருமமிகு சென்னையில் 35 ஆண்டுகள் வள்ளலார் வாழ்ந்துள்ளார். 


வள்ளலார் காலத்தில்  காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த *மகா பெரியவர்  சங்கராச்சாரியார்* அவர்களுக்கு ஒரு சந்தேகம் (ஐயம்) வந்துவிட்டது. அவர் சமஸ்கிருதம் மொழியில் முழுவதிலும் பாண்டித்தியம் பெற்றவர். பல மொழிகளை நன்கு படித்தவர்  உணர்ந்தவர் எல்லாம் தெரிந்தவர்.


சமஸ்கிருதம் என்னும் வேதநூலில்  ஒருசில பகுதிகளில் உள்ள வாக்கியங்களுக்கு அதன் உண்மையான  அர்த்தம் அவருக்கு புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை. அவற்றில் உள்ள சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்பது புரியாமல் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.


அப்போது காஞ்சிபுரம் *மகாவித்வான் சபாபதி முதலியார்* அவர்கள் சங்கராச்சாரியார் அவர்களை ஏதேச்சியாக சந்திக்க சென்றுள்ளார்.

அவர் பெரியவருக்கு நன்கு தெரிந்தவர் பழக்கமானவர். 


அவரிடம் பெரியவா் சமஸ்கிருதத்தில் ஒரு சந்தேகம் வந்துள்ளது அவற்றிற்கு சரியான விளக்கம் வேண்டும் யாரிடம் கேட்டால் சரியான விளக்கம் கிடைக்கும்.

உமக்கு தெரிந்த சமஸ்கிருதம் நன்கு படித்த பண்டிதர் யாராவது தெரியுமா என கேட்டுள்ளார்.


ஆசிரியர் சபாபதி அவர்கள் சற்று நேரம் சிந்தித்துவிட்டு எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் இருக்கிறார் அவர் பெயர் ராமலிங்கம் சென்னையில் உள்ளார் என தெரிவித்துவிட்டு.

மேலும் ஒரு முக்கியமான விஷயம் !. அவர் பள்ளிக்கு போகாதவர் பாடம் கற்காதவர்.

ஆனாலும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் ராமலிங்கத்திற்கு நன்றாகத் தெரியும் என்றார்.


உடனே பெரியவர் லேசாக சிரித்தார்.பிறகு சொல்கிறார் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரங்கள் யாவும் தமிழிலும்  சமஸ்கிருதத்தில் படித்த எனக்கே விளக்கம் தெரியவில்லை.

பள்ளிக்கு செல்லாதவன் பாடம் படிக்காதவன் சமஸ்கிருதம் தெரியாதவன்.

மேலும் அவன் ஒரு சிறுவன் அவனுக்கு எவ்வாறு இதன் உண்மையும்  விளக்கமும் தெரியும் என கேட்டுள்ளார். 


*சபாபதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வித்வான் சபாபதி அவர்கள்* !


*காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் யார்* ? என்றால் இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களுக்கு சென்னையில் கல்வி போதித்தவர் புராணங்கள் யாவும் பாடம் சொல்லிக்கொடுத்தவர்.

அவரை புராண சொற்பொழிவு செய்யும் அளவிற்கு உயர்த்தியவர் *காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் அவர்கள்*. 


தம்பி இராமலிங்கத்திற்கு பள்ளிபருவம் எய்தியதும் தமையனார் சபாபதி அவர்கள் தாம் படித்த ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியாரிடம்   கற்வி கற்க அனுப்பி வைத்தார். 


இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும்.

பக்குவ நிலையையும்.

கந்தகோட்டம் மற்றும் திருவொற்றியூர் சென்று பக்தி பாடல்களை இலக்கணம் இலக்கியம் குறையாமலும்.

சொற்குற்றம் பொருட்குற்றம் இல்லாமலும் *கவிபாடும் திறமையைக் கண்டு அதிர்ந்து போனவர்தான் காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் அவர்கள்*.


அந்த வித்வான்  இவ்விளைஞர் ராமலிங்கம் கல்லாது உணரவும்.சொல்லாது உணரவும்.வல்லவர் என்பதை அறிந்து  கற்பிப்பதைக் கைவிட்டுவிட்டார்.


இந்த விபரம் காஞ்சிபுரம் மகாபெரியவர்  சங்கராச்சாரியார் அவர்களுக்கு தெரியாது. மகா வித்வான் சபாபதி முதலியாரும்  சொல்லவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்.


*சந்திக்க ஏற்பாடு செய்தல்!*


சங்கராச்சாரியார் அவர்கள் விருப்பபடி சிறுவன் 

*இராமலிங்கரையும் மகாபெரியவரையும் சந்தித்து உரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது*.


வேத நூலான சமஸ்கிருத நூலில் உள்ள சந்தேகத்திற்கு இடமான பக்கங்களை இராமலிங்கரிடம் காட்டி விளக்கம் கேட்டார் மகாபெரியவர்.


*கொஞ்சநேரம் அந்த நூலை உற்று பார்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள வாக்கியங்களுக்கு உண்டான  விளக்கத்தையும் சொல்லிவிட்டு அதற்கும் மேலான உயர்ந்த விளக்கத்தையும் சொன்னார்*. ராமலிங்கர் சொல்லிய விளக்கத்தை கேட்டு

*மகா பெரியவர் மிகவும் ஆனந்தம் அடைந்து மெய் சிலிர்த்து மகிழ்ச்சி அடைந்தார்*.


இராமலிங்கம் சொல்லிய விளக்கத்தை கேட்ட பின்பு 

மகாபெரியவர் அவர்களுக்கு *சமஸ்கிருத நூலின் மேல் அளவில்லா மதிப்பும்.மரியாதையும்.பற்றும் விருப்பமும் ஆர்வமும் அதிகமாயிற்று.* அதில் உள்ள உயர்ந்த கருத்தாழம் உள்ள உயர்ந்த விளக்கத்தையும் கேட்டபின்பு இன்னும் அதிகமான பற்று *சமஸ்கிருத மொழிமீது* வந்து விட்டது.


பின்பு இராமலிங்கர் அவர்களிடம் ஒரு விடையை எதிர் பார்க்கிறார் பெரியவர் அவைதான் மிகவும் முக்கியமானது.


*அவை யாதெனில்*?.


*சமஸ்கிருத மொழி ஒன்றே உலகத்திற்கே தாய்மொழி என்று ஏற்றுக் கொள்ளலாமா ? என கேட்கிறார்.*


அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் காலம் தாழ்த்தாமல் *ஆம்* என்று ஏற்றுக் கொள்கிறார்.


*பின்பு மகாபெரியவர் சங்கராச்சாரியார் அவர்களிடம் இராமலிங்கம் ஒரு கேள்வி கேட்கிறார்*. அவை யாதெனில்.?


*தாய் என்று ஒன்று இருந்தால் தந்தை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? என கேட்கிறார்*.


மகா பெரியவர் *ஆம்*.என்று கூறிவிட்டு  *தாய் ஒன்று இருந்தால் தந்தை ஒன்று இருப்பதுதான் இயற்கையின் நியதி* அதுவே உயிர்களின் உற்பத்திக்கு காரண காரியமாகும் என பதில் அளிக்கிறார்.


அடுத்து இராமலிங்கர் சொல்கிறார். *உலகிற்கு  சமஸ்கிருதம் தாய்மொழி என்றால்*.

*உலகிற்கே தமிழ் தந்தை மொழி என்று சொல்லிவிட்டு  எழுந்து விடைபெற்று சென்று விடுகிறார்* *இராமலிங்கர்*


அருகில் இருந்த மகாவித்வான் சபாபதி முதலியார் மற்றும் கற்றறிந்த பெரியோர்கள் யாவரும் அதிசயிக்கும் வண்ணம் *தமிழ் மொழியின் பெருமையை தந்தைமொழி* என்று சொல்லி  மகாபெரியவர் வாயை இராமலிங்கம்  அடைத்து விட்டார் என்பதை நினைந்து சிந்தித்து  எல்லோரும் சற்று நேரம்  அமைதியாயினர்.


 *இவை யாவும்  நடந்த வண்ணம் உரைத்தல். சந்தேகம் தெளிதல் என்னும் தலைப்பின் செய்தியாகும்.*


*இராமலிங்கம் என்னும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.*


எனவே 

*தமிழ்நாட்டிற்கு  தாயாகி தந்தையாகி தாங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும்*.


*இந்திய நாட்டிற்கும் உலகிற்கும் தமிழ் தந்தை மொழியாகும்* 


இந்தியாவின் *ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி ஜொலிக்கும் காலம் வந்தே தீரும்*


இறைவனால் படைக்கப்பட்ட தமிழ்மொழி தந்தை மொழி என்பதில் பெருமிதம் கொள்வோம். மற்ற மொழிகள் யாவும் மாயையால் ( சாத்தான்) மனிதர்களால் படைக்கப்பட்ட மொழிகளாகும். 


*கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழியாகும்*.


யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதானது எங்கும் காணோம் என்று போற்றப்படும் மொழியே தமிழ் மொழியாகும்.


*தமிழைப் படிப்போம் *தமிழைப் போற்றுவோம்*

*தமிழை வளர்ப்போம்* *தமிழால் மக்களை இணைப்போம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

1 கருத்து:

  1. பெயரில்லா9 மே, 2023 அன்று 7:45 PM

    Ayya Nalla Vishayangalai pagirthinthu ullir. Yaavaiyu karunaiyodu parungal endru Vallal koorugaiyil, Sathan endru kuripiduvathu manathai kaaya paduthugirathu

    பதிலளிநீக்கு