*கருங்குழி தெருவில் உருண்டு வந்த அவதானியார்!*
வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த சமயம் *திருச்சிற்றம்பல ஞானியர்* என்பவர் வள்ளலாரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினர். அதுசமயம் காவி உடை அணிந்த துறவிக்கு வெள்ளை வேட்டிகாரர்ராகிய வள்ளல்பெருமான் உபதேசம் செய்ய மறுத்துவிட்டார்.
இருப்பினும் அவரின் உண்மையான உள் அன்பை ஏற்றுக்கொண்டு ஒருபாடலைப்பாடி எழுதி அவர் கையில் கொடுத்து உபதேசித்தார்.
பின்பு மதுரை திருஞான சம்பந்தமூர்த்தி
சுவாமிகள் மடத்திற்கு சென்று தங்கிஇருந்தார்.
*சிறுவன் காணாமல் போனான்*
ஒருநாள் கருங்குழிக் கிராமத்தில் உள்ள சிறுவன் ஒருவன் மனவருத்ததுடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே போய்விட்டான்.போன இடம் தெரியாமல்
விசாரிக்கையில். *மதுரை மடாலயத்தில்* இருப்பதாக கேள்விபட்டு அவன் தாய் தந்தையார் வள்ளல்பெருமானிடம் சொல்லி *அங்குள்ள சிற்றம்பலஞானியார் அவர்களுக்கு* கடிதம் எழுதி மகனை வரவழைக்கும்படி வேண்டினர்.
வள்ளல்பெருமான் மிகச் சாதாரண தமிழ்நடையில் சுவாமிகளுக்கு கடிதம் எழுதி சிறுவனை அனுப்பி வைக்கும்படி தெரியப்படுத்துகிறார்.
அப்போது மதுரை மடாலயத்தில் இலக்கணம் இலக்கியம் தெரிந்த மேதாவி *கணக்கிலவதானியும் தேவிபட்டினம் முத்துசாமியும்* உரையாடிக்கொண்டு இருக்கும் போது. வள்ளலார் எழுதிய கடிதம் சிற்றம்பலஞானியார் கைக்கு வந்த்து.வள்ளலார் எழுதிய கடிதத்தை அங்குள்ளவர்கள் படித்து காட்ட சொல்லவும் படித்து காட்டுகின்றார்.
உடனே *கணக்கிலவதானி* என்பவர் சொல்கிறார். வள்ளலார் பெரிய மேதாவி என்றீர்கள் அவர் எழுதிய கடிதத்தில் இலக்கணம் இலக்கியம் விசேடம் ஒன்றும் இல்லையே என்றார்.
அவர் சொன்னதும் *ஞானியாருக்கு* கோபம் வந்துவிட்டது.
*வள்ளலார் வார்த்தையாடிக் கொண்டு இருக்கும்போது சிந்திய இலக்கணம் இலக்கியம் இந்த உலகில் பரவி இருக்கிறது என்றார்*
உடனே கணக்கிலவதானியார். அப்படியாயின் இலக்கணம் இலக்கியம் அருமை நிரம்பிய ஒருகடிதம் எழுதி வரவழையுங்கள் பார்க்கலாம் என்றார்.
உடனே இங்கு நடந்த விவகாரத்தை வள்ளலாருக்கு தெரியப்படுத்தி பதில் அனுப்புமாறு வேண்டினார். கடிதத்தை கண்ட வள்ளலார் *பிச்* என கடிதத்தை எறிந்தனர்.
உடன் அங்கு இருந்த *தொழுவூர் வேலாயுதனார்* அக்கடித்த்தை எடுத்து இலக்கணப் பத்திரிகை ஒன்று எழுதி அனுப்புமாறு வள்ளலாரை வேண்ட. முதல் மாணாக்கர் வேண்டுகோளுக்கு இசைந்துள்ளார்.
இரண்டொரு வரிகள் எழுதித் தந்தருளிப் பத்திரிகையை முடித்து அனுப்பும்படி வேலாயுதனாருக்கு கட்டளையிட்டார்.
அவ்வாறே அவர் எழுதி அனுப்பிவிட்டார்.
அப்பத்திரிகையை ஞானியார் கண்ணுற்றபின் அவதானியார் கையில் கொடுத்தார்.
*பலமுறை படித்தும் பொருள் விளங்காமையால் சற்று நிதானித்து. *வேணுமென்றே ஒரு வித்வான் பூட்டுப்போட்டால் அந்த வித்வான்தான் அதைத் திறக்கவேண்டும்* என்று அவதானியார் கூறினார்.
உடனே ஞானியார் நீர் ஒரு பூட்டுபோட்டு பத்திரிகை எழுதி அனுப்புங்கள் என்றார். *அவதானியார் சுலமாய் பொருள் விளங்ககூடாதவாறு ஓர் அறிய கவியை வரைந்து அனுப்பினார்.*
அக்கவியை கண்ணுற்ற வள்ளலார். *அவதானியார் கருதிய உரையும். அதற்குமேல் தத்துவ சம்பந்தமான ஓர் அறிய உரையும் வரைந்து அனுப்பினார்*.
அதனை அறிந்த *கணக்கிலவதானியார். உடனே வண்டியில் ஏறி கருங்குழிக்கு வந்தார்.* *வள்ளலார் வீற்றிருக்கும் தெருவின் கோடியில் வண்டியை விட்டு இறங்கி வீதியில் வெய்யிலில் உருண்டே வந்து வள்ளலார் திருமுன் மூர்ச்சியாய் விழுந்தார்*.
வள்ளலார் உபசரித்தபின் அவதானியார் தெளிவடைந்து எழுந்து நமஸ்கரித்து *மன்னிக்கவேண்டும்* தங்களை சாதாரண வித்வான் என மதித்தேன். *பரிபூரண ஞானியென உணர்ந்திலேன்* உங்கள் காட்சியும் தோற்றமும் கருணையும் கண்டு உணர்வற்றனாகி விட்டேன். என் செருக்கு அடக்கி ஆட்கொள்ளல் வேண்டும் என வேண்டினர்.
மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார் வள்ளலார்.
*வள்ளலார் பாடல்*!
நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் *எஞ்ஞான்றும்*
*சாவாவரம்* எனைப்போல் சார்ந்தவரும் -
தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் *எவ்வுலகில்*
*யார்உளர் நீ சற்றே அறை.!*
*பூரண அருள் பெற்று எனைப்போல் சாகாவரம் பெற்றவர்கள் எவ்வுலகிலும் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் காட்ட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே கேட்கிறார் வள்ளலார்*
*ஆண்டவர் பதில் சொல்லுகிறார்*.
ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனை நீ அஞ்சலைஎன் றருளி
*வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி*
வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
சுகமயமே எல்லாஞ்செய் வல்ல தனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.!
என்னும் பாடல்வாயிலாக ஆண்டவர் தெரிவிக்கின்றார்.
நாம் காமம்.வெகுளி.
மயக்கம்.மோகம்.லோபம். அகங்காரம் யாவும் அடக்கி ஆனமநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம் .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக