அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 14 ஜூன், 2021

நான்கு வயது சிறுவனை ஏழு மொழியில் பேச வைத்தவர் !

 *4 நான்கு வயது சிறுவனை ஏழு மொழியில் பேச வைத்தது!* 


வள்ளலார் காலத்தில் பாண்டிச்சேரியில் தந்தி அலுவலக மேலாளராக பணிபுரிந்தவர்  *பிநாகபாணி*  என்பவர் சுமார் ஏழு எட்டு மொழிகளில் பேசும் திறமை வாய்ந்தவர். 


அவர் *வடலூரில்  வள்ளலாருடன்  இருந்தவர்களை. தருமச்சாலையில் சும்மா  தெண்டச் சோறு சாப்பிட்டுவிட்டு  திரியும்  சோம்பேரிகள் என்றும்.வெட்டி பயல்கள் என்றும் இகழ்ந்து பேசியுள்ளார்* 


அவர் ஒருநாள் வள்ளலாரை சந்திக்க வடலூர் வந்தார்.


வள்ளலாருக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்ற  எண்ணம் கொண்டு. வள்ளலாரிடம் தமக்குத்  தெரிந்த மொழிகளில் பேசி ஆச்சிரியப்படுத்தி அசத்திவிட வேண்டும் என்ற கர்வமான எண்ணத்தில் வந்துள்ளார்.


பிநாகபாணி அவர்கள் வரும்போது வள்ளலார் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார். அவர் வருவதற்கு முன்னரே வள்ளலார். *ஒருவர் புத்தி சொல்ல வருகிறார்* என்று மக்களிடம் சொல்லியுள்ளார்.

பிநாகபாணி வந்து அரைமணி நேரம் நின்று கொண்டு இருந்தார்.


வள்ளலாரின் முதன்மை அன்பர் வேலாயுதம் அவர்கள் மகன் *திரு நாகேஸ்வரன்* நான்கு வயது சிறுவன் வள்ளலார் அருகில் அமர்ந்து சொற்பொழிவு கேட்டுக் கொண்டு இருந்தான்.


வள்ளலார் அவன் தலையில் கைவைத்து விட்டு பிநாகபாணியை எதிரே  நிறுத்தி உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்றார்.ஐந்து ஆறு மொழிகள் தெரியும் என்று குறைத்தே சொன்னார்.


வள்ளலார் *எந்த மொழியில்* வேண்டுமானாலும் இந்த பிள்ளையிடம் கேளுங்கள் பதில் சொல்வான் என்றார். பிநாகபாணி மூர்ச்சையாகி ஊமையாய் நின்றார்.


வள்ளலார் சிறிது நேரம் கழித்து ஏன் மவுனமாகி விட்டீர்கள்.எந்த மொழியில் வேண்டுமானாலும் *கேளும் கேளும்* என்றார். வாய் திறவாமல் மவுனமாகவே இருந்தார். *பிச்* என்று வள்ளலார் சொன்னவுடன் பேச ஆரம்பித்தார்.


பிநாகபாணி சிறிது நேரம் கழித்து *என்னை மன்னிக்க வேண்டும்* *நீங்கள் பூரண அருளாளர்.முற்றும் அறிந்தவர் என்பது தெரியாமல்* .நான் பல மொழி தெரியும் என்ற  அகங்காரத்தில் தடுமாறிவிட்டேன்.தவறாக நினைத்து விட்டேன் என்று வள்ளலார் காலில் விழவந்தார். யார் காலிலும் விழவேண்டும் என்று சொல்லிவிட்டு மனிதனாக திருந்தி வாழுங்கள் என வாழ்த்தி அனுப்பி வைத்தார்.


பிநாகபாணி திருந்தியவராய்  வந்தனம் சொல்லிவிட்டு சென்றார். 


*இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*


பல கற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டாம்.

அலைகதிர் ஞாயிறை சிறு கைக்குடையும் காக்கும். 


சில கற்றார் கண்ணும் உலவாம் பல கற்றாற்கு அச்சானி அன்னதோர் சொல். 

என்ற வரிகள் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனது தமிழ் ஆசிரியர் சொல்லிய ஞாபகம் வந்தது. 


*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்.*

*பிறர் மீது கோபியாதிருத்தல்*.

*தன்னை மதியாதிருத்தல்* என்னும் வார்த்தை வரிகள் கரண ஒழுக்கத்தில் கடைபிடிக்க வேண்டும் என வள்ளலார் சொல்லி உள்ளார்.


மனிதனாக வாழ்வதற்கு வள்ளலார் சொல்லியுள்ள *இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை* முழுமையாக கடைபிடித்தாலே போதுமானதாகும்.. 


*வள்ளலார் பாடல் !*


குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே


சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது


தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே


இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.! 


என்னும் பாடல் வரிகளில் உள்ளவாறு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக