அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 23 மார்ச், 2021

வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபை.!

 *வள்ளலார்  தோற்றுவித்த  சத்திய ஞான சபையை*!


வள்ளல் பெருமான் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க நெறிமுறைகளுக்கு.கொள்கைகளுக்கு புறம்பாக.

விரோதமாக சத்திய ஞானசபையை நிர்வகித்து நடத்தி வந்தவர்  வள்ளலார் காலத்தில் இருந்தவர் ஆடூர் சபாபதி குருக்கள் என்பவராகும்.


மற்றும் வடலூரில் வள்ளலார் விருப்பத்திற்கு இணங்க மக்களால் கொடுக்கப்பட்டது 80 காணி இடமாகும்.  


அறச் செயலுக்காக கொடுக்கப்பட்ட வடலூர் பொது சொத்துக்களில் பல ஏக்கர் நிலத்தை அதிகாரிகளின் துணைக்கொண்டு தன்  பெயருக்கு  மாற்றியும்  வருமானங்களை சுய லாபத்திற்காக பயன்படுத்தியும் வந்துள்ளார்      சபாபதி சிவாச்சாரியார்.


அதன் உண்மை தெரிந்த அன்பர்கள்   நிறைய புகார்கள்  கட்டுக்கட்டாக  இந்து சமய அறநிலையத்துறை வாரியத்திடம் குவிந்திருந்தன என்னும் உண்மையை  ஆ. பாலகிருஷ்ண பிள்ளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


பின்னர் புகார்களின் உண்மைத்தன்மை அறிந்து சட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்  துறையின்  முழு கட்டுப்பாட்டிற்கு  *சத்திய ஞான சபை* *சத்திய தருமச்சாலை,* *சித்திவளாகம்*

*கருங்குழி* *மருதூர்* ஆகிய ஐந்து இடங்களும் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது.


எனினும், ஞான சபை வழிபாடு பூசைகள்  சபாபதி சிவாச்சாரியார்கள் கையிலேயே  தொடர்ந்தது நடைபெற்றுக் கொண்டு வந்த்து. 


திரு .ஊரன் அடிகள் 1967 இல்  வெளியிட்ட  *வடலூர் வரலாறு* என்ற நூலின் வழி  பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட பின்  நடந்த  வரலாற்று உண்மைகளை  முழுவதும் உணர்ந்த  சுத்த சன்மார்க்க   ஞானி *திரு துறவி கந்தசாமி ஐயா* அவர்கள்,  பெருமான் ஞான சபை வழிபாடு குறித்தும் தரும பரிபாலனத்திற்கு வழங்கிய சொத்துக்களை  மீட்கவும் பல வழக்குகள் ஆகியவற்றை  நீதி மன்றங்களில் முறையிட்டார். 


ஆனால் அவருக்கு உதவ போதிய வலுவான அன்பர்களின்  ஆதரவு இல்லை.   துறவி கந்தசாமி  ஐயா அவர்களின் கடும் உழைப்பு / செயல் அனைத்தும் போற்றுதலுக்கு உரியது. 


அந்த நாட்களில்  (இராமநாதபுரம்)  பார்த்திபனுர் வெ.பெருமாள் ஐயா ,  சுத்த சன்மார்க்க கொள்கை நெறியில் மிகவும் துடிப்புடன் தமிழகம் முழுவதும் சொற்பொழிவு ஆற்றி வந்த *திரு. ஈரோடு  கதிர்வேல் ஐயா* ஆகிய இருவரும்  ஞான சபையை சுத்தம் செய்யும் பணியிலும் சீற்திருத்த பணியிலும் மாதந்தோறும் ஈடுபட்டு வந்துள்ளனர்.  


துறவி கந்தசாமி ஐயா போராட்டத்தால்  ஈர்க்கப்பட்ட, ஈரோடு  கதிர்வேல் அவர்கள்.துறவியாரின் துணை கொண்டு வடலூர் சீர்திருத்த பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.


2006 வரை பூசாரியாக இருந்த  சபா ஒளி சிவாச்சாரியார் இடம்  அணுகி  பெருமான் வகுத்த வழிபாட்டிற்கு புறம்பாக  செய்யபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். 

சிவாச்சாரியார்  அதையெல்லாம் காதில் வாங்காமல் மாத பிரதோஷம் சிலை வழிபாடு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் விபூதிபிரசாதம் போன்ற சைவநெறியுடன்  வைணவ மரபுடனும் விஷேச  நாட்களில்  பூஜை செய்வதை தொடர்ந்து செய்து வந்துள்ளார்கள்.


அத்துடன்  சிவலிங்கதிற்கு  பால் அபிஷகம் செய்து விட்டு ஞானசபை தீப தரிசனம் காட்டுவதை  வழக்கமாக கொண்டு இருந்தனர். 


மாத பூசத்தன்று பகல் 12 மணி ஜோதி தரிசனம் கட்டிவிட்டு, வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு விபூதி பிரசாதமும். பால் அபிஷேகம் செய்த தீர்த்தமும் வழங்கியுள்ளார். இதையெல்லாம் இடைவிடாது கவனித்து வந்த *ஈரோடு கதிர்வேல் அவர்கள்*, மீண்டும் அவரிடம் நேரில் தொடர்பு கொண்டு. இப்படி செய்வது வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமானது என்று விளக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


தங்களுக்கு வேண்டிய பொருள்/ மற்றும்  உதவிகள் எது வேண்டுமானாலும்  செய்கிறோம்.வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக செயல்படாதீர்கள் என்று எச்சரித்தும் உள்ளார்.


அதற்கு பிரதிபலனாக ஞானசபை  வழிபாடு செய்வதை பெருமான் கட்டளைப்படி 72 வயது கடந்த முதிர்ந்த  சன்மார்க்க அன்பர்கள் பொறுப்பில் விட்டு விடுங்கள் என்றும் கோரியுள்ளார்.  அதற்கு சிவாச்சாரியார் , வள்ளலார் சித்தி பெற்ற காலத்தில் இருந்தே எங்கள் மூதாதையர் செய்துவந்துள்ளபடி. அவர்கள் கொடுத்த படிக லிங்கத்திற்கு  முதல் பூஜை திரைக்கு பின்னால்  செய்து விட்டு பிறகே  ஜோதிவழிபாடு காட்டி தீபாராதனை  செய்வது. ஒரு நூற்று ஆண்டுக்கு மேல் நடைபெற்று வந்த செயல்களாகும் என்றனர்.


வள்ளலார் சொல்லியே என் மூதாதையர் செய்தனர் நாங்களும் அவர்கள்  செய்ததையே இதுநாள்வரை செய்து கொண்டு வந்த்தாக  கூறினார்.


சிவாச்சாரியார் விளக்கத்தை  ஏற்றுக் கொள்ளாத *ஈரோடு கதிர்வேல்* அவர்கள் , ஞான சபை  சாவியை தந்திரமாக  *சபாஒளி*  சிவாச்சாரியிடமிருந்து  கைப்பற்றி எடுத்து கொண்டு தெய்வ நிலையத்திற்கு வந்து அடைக்கலமானார். இது உள்ளூர் மக்களிடம்  பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தியது.கதிர்வேல் அவர்களை அடிப்பதற்கு தருமச்சாலையில் மக்கள் குவிந்து விட்டார்கள்.துறவி கந்தசாமி ஐயா அவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.


வடலூர் காவல் துறை , மாவட்ட ஆட்சித்துறை , அறநிலைய ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள்  அனைவரும் வந்து விசாரணை நடந்தது. மதியம் முடிந்து இரவு 7-00 மணி வரை தொடர்ந்து விசாரணை நடந்த்து.


ஈரோடு கதிர்வேல் அவர்கள் கோரிக்கை ஞாயத்தை உணர்ந்த மேல் அதிகாரிகள் ,  இரவு 8 மணி பூசை நடத்த வேண்டி நடத்திட  சன்மார்க்க  அன்பர்களில்  72 வயது நிரம்பியவர்கள்  யாரேனும் முன்வர வேண்டுகோள் வைத்தனர்.  அங்கு 10 க்கு மேற்பட்ட  72 அகவை முதிர்ந்தவர்களிருந்தும் எவரும் முன் வரவில்லை.  எனவே வேறு வழியின்றி.மீண்டும் சபாஒளி சிவாச்சாரியார் வசம் ஞானசபை திறவுகோலைக் கொடுத்து  பூசை செய்யும் உரிமையை தொடர்ந்து வழங்கப்பட்து.


ஞான சபை சுத்த சன்மார்க்க வழிபாட்டு  முறை மாற்றத்திற்கு இந்த தலைமுறையில் செயல் வடிவம் கொடுக்க காரணமாயிருந்த *ஈரோடு கதிர்வேல் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.*


மேலும் சத்திய தருமச்சாலை ஒடுமேய்ந்த கட்டிடம் பழையதாகி மழை வெயில் உள்ளே போகும் அளவிற்கு சிதிலமடைந்து இருந்த்து.


புதியதாக தார்சு கட்டிடம் கட்டவேண்டி போராட்டங்கள் நடத்தி.தைப்பூசம் அன்று *வடலூர் சீர்திருத்தம்* என்கின்ற கோரிக்கைகளை எழுதி முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யப்பட்டு காவல்நிலையம் சென்று.அங்கும் உண்ணாவிரதம் கடைபிடித்து மாலைவரை இருந்து விடுதலை செய்யப்பட்டது.


இப்போது உள்ள தருமச்சாலை கட்டிடம் ஈரோடு கதிர்வேல் அவர்களின் விடாமுயற்சி யினால்  கட்டப்பட்டதாகும்.


பல சன்மார்க்க அன்பர்களின் விடா முயற்சியால்.உழைப்பால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து குருக்களிடம் இருந்து சத்திய ஞானசபை திறவுகோலைப் பெற்று வள்ளலார் சொல்லியவாறு சன்மார்க்க கொள்கைபடி சத்திய ஞானசபையில் முதியவரைக் கொண்டு ஜோதிவழிபாடு நடந்து வருகிறது. 


இந்த செய்திகள் எல்லாம் இப்போதுள்ள சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.


இனி வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எந்த தடைகளும் தடுக்க முடியாது இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக