*எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே* !
*எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !
*அருட்பெருஞ்ஜோதி அகவல் !*
சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!
சாதியு மதமுஞ் சமயமும் *பொய்யென*
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!
*சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்*
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி !
*சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த*
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி !
இயற்கை உண்மையாம் மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்னும் கடவுள். *உலகில் உள்ள எந்த சாதி சமயங்கள் மதங்களையும் சார்ந்தது அல்ல.*
அக்கடவுள் தன்னை வெளியே காட்டாமல் அமர்ந்து இயங்கும் இடம் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!
*அருட்பெரு வெளியில்* அருட்பெரு உலகத்
தருட்பெருந்தலத்து மேல் நிலையில்
அருட்பெரும்பீடத் *தருட்பெரு வடிவில்*
அருட்பெருந்திருவிலே அமர்ந்த
*அருட்பெரும்பதியே அருட்பெரு நிதியே*
*அருட்பெருஞ் சித்தி என்அமுதே*
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!
என்னும் பாடலின் வாயிலாக எளிய தமிழில் தெரியப்படுத்துகின்றார்.
மேலும் ஒருபாடல் !
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
*இதுஅது* எனஉரைப் பரிதாய்த்
தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத்
தந்து எனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும் ஆனந்த போக போக் கியனாய்ப்
புத்தமு தருத்தி என்உளத்தே
*அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த*
*அருட்பெருஞ் சோதிஎன் அரசே*.!*
எங்கும் நிறைந்துள்ள உயிர்களிலும் *ஆன்மா என்னும் சிற்சபை இடத்தும்* விளங்கி இயங்கிக் கொண்டுள்ள *உள்ஒளியே அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.*
*அது தனித்து இயங்கும் இடம் எது என்றால் ? பஞ்ச பூதங்களையும் கடந்து.பல கோடி அண்டங்களையும்.பலகோடி உலகங்களையும் கடந்து.அப்பாலுக்கு அப்பால் தனித்த இடமான. அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பெருவெளியில் தனித்து இயங்கும் ஒரே கடவுள் ! அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்*
அந்த அருட்பெருஞ்ஜோதி மனித உடம்பில் *அந்த கரணக் கூட்டத்தில் மத்தியில் உள்ஒளியாக உயிர்ஒளியாக விளங்கி இயங்கி கொண்டுள்ளது*
எந்த சமய மதக்கடவுளையும் அருட்பெருஞ்ஜோதியிடம்
*இது அது* என்று ஒப்பிட்டு சொல்ல முடியாத தனத்தலைமை பெரும்பதி கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்.
அக்கடவுள்தான் அதன் இயற்கை உண்மை தனிஅனுபவத்தை (அதாவது அருளை) எனக்குத் தந்து என்னை தன்மயமாக்கி ஆட்கொண்டது.
ஆதலால்தான் மரணத்தை வென்று *சத்து சித்து ஆனந்தம்* என்னும் பெரும் போகத்திலே வாழ்ந்து கொண்டுள்ளேன்.
*இப்போது நான்வேறு கடவுள் வேறு அல்ல*. என் உள்ளத்தே அங்கையர் கனிபோல் அமர்ந்து அருள் கண்களால் பார்த்து ரசித்து நிலைத்து என்றும் பிரியாமல். எதனாலும் தடைஇல்லாமல் அருள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளேன் என்கிறார்.
*வள்ளலார் பாடல் !*
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி *அருட்சோதி* அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.!
மேலே கண்ட பாடலில்.நான்பெற்ற நெடும் பேற்றை சொல்லுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வார்த்தைகள் இல்லை என்கிறார்.
எனக்கு அறிவை விளக்கி அருளை அளித்து ஆட்கொண்டது போல். எல்லா உலகில் உள்ள உயிர்களுக்கும் அருளை அளித்து ஆட்கொள்ள வேண்டும் என்ற அன்பால் தயவால் கருணையினால் ..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* வேண்டுகிறார்.
ஆதலால் நாம் சமய மதங்களினால் படைக்கப்பட்ட தத்துவக் கடவுள்களை புறத்தில் பார்த்து வணங்கி வழிபடாமல்.
*இயற்கை உண்மை*
*இயற்கை விளக்கம்*
*இயற்கை இன்பம்*
என்னும் சிரநடு சிற்சபையின் அகத்தில் நடம்புரியும் ஆன்மா என்னும் உள்ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்வோம்.
*அருளைப் பெறுவோம்*
*மரணத்தை வெல்வோம்*
*மகிழ்ச்சியுடன் வாழ்வோம்*.
*வள்ளலார்பாடல் !*
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
*பொறித்த மதம் சமயம் எலாம் பொய்பொய்யே* அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடு *சிற்சபை* நடத்தைத் தெரிந்து
துதித்திடுமின்
*சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந் திடுமே*.!
மேலே கண்ட பாடலை பலமுறை ஊன்றி படித்து பயன் பெறுவோம்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் !
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக