அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 15 டிசம்பர், 2020

வள்ளலார் அழைக்கிறார் !

 *வள்ளலார் அழைக்கிறார்* ! 

*உலகில் தோன்றிய ஞானிகள் எல்லோரும் அணுபக்ஷத்தின் கூட்டு சேர்க்கையால் தாய் தந்தையின் உறவில் பிறந்தவர்கள்* *வள்ளலார் மட்டுமே இறைவனால் வருவிக்க உற்றவர் அதற்கு சம்பு பக்ஷசம் என்று பெயர்*.

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் *மருதூர்* கிராமத்தின் கணக்கராக பணியாற்றிவந்தவர் இராமய்யா அவரின் மனைவியார் சின்னம்மையார் அவர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம் நிறைந்தவர்.அவரை சந்தித்து நேர்காணல்  காண்பதற்கு 

சிவனடியார் கோலத்தில் வந்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.அவர்  பசிக்கு உணவு கேட்கிறார்.*பசியைப்போக்கிய சின்னம்மையிடம்

என்பசியைப் போக்கிய உமக்கு உலகில் உள்ளோர் அனைவரின் பசிப்பிணியைப் போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று *சிவனடியார் உருவில் வந்த  இறைவன். வாயால் சொல்லியவுடன் கருத் தரித்தவர்தான் இராமலிங்கம்* என்னும் திருவருட்பிரகாச வள்ளலார். 

*உயர்ந்த அறிவு பெற்ற மனிததேகம்*!

இவ்வுலகில்  இறைவனால் அனுப்பிய ஆன்மாக்களின் இறுதி பிறப்பாகிய உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு கொடுக்கப்பட்டதின் நோக்கமே இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று  மரணத்தை வென்று பிறப்பை இறப்பை அறுத்து இறைவனும் கலக்கவேண்டும் என்பதுவே இறைவன் விதித்த நியதி சட்டமாகும்.

ஆன்மாக்கள் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ளாமலும். அருளைப்பெற முடியாமலும் மாயையில் சிக்குண்டு சாதி சமய மதங்களின்  தவறான கொள்கைகளைப் பின்பற்றி பிறந்து பிறந்து. இறந்து இறந்து அழிந்து கொண்டு இருக்கும் ஆன்மாக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள். 

*வள்ளலார் பாடல்* ! 

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

*புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்*

*புத்தமுது* *அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்*

தன்னெறி செலுத்துக என்ற என் அரசேதனிநடராஜ என் சற்குரு மணியே.!

மேலே கண்ட  பாடலில நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. சாதி சமயம் மதம் அல்லாத புதியதோர் உலகத்தை படைக்க வேண்டும் என்பதற்காக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* 1872 ஆம் ஆண்டு வடலூரில் புதுப்பித்து புதிய கொள்கைகளை முன்வைத்து தோற்றுவிக்கின்றார்

மனிதன் இறைவனைத் தொடர்பு கொண்டு  அருளைப் பெற  வேண்டுமானால். எல்லா உயிர்களையும் தம் உயிர்கள் போல் பாவித்து *பொது நோக்கத்துடன் அன்பு தயவு உயிர்இரக்கம் கொண்டு கருணையுடன் மரணத்தை வென்று வாழவேண்டும்* என்பதே வள்ளலாரின் முக்கிய கொள்கைகளில் முதன்மையானதாகும். 

*சத்திய தருமச்சாலை*

உயிர் குலத்தின் பசிப்பிணியைப் போக்கினால் மட்டுமே அறிவு விளக்கம். ஆன்ம விளக்கம்  பெற்று 

இறைவனிடம் தீராத  அன்பு காதல் கொண்டு நெருங்கிய உறவால் பூரண அருள் பெறலாம் என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவே.1867 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத்  தோற்றுவிக்கின்றார்.இன்றுவரை இடைவிடாது தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை போக்கிவருகின்றது. 

மேலும் *வள்ளலாரின் கொள்கைகள்*

1.கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! 

2.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.

3.சிறுதெய்வ வழிபாடுகள் கூடாது. தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது.

4.உயிர்க்கொலை செய்யக்கூடாது.புலால் உண்ணக்கூடாது.

5.வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் உண்மையைத் தெரிவிக்கமாட்டாது

6.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

7.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்ககூடாது.

8.இறந்தவர்களுக்கு அழுகுரல் செய்யவேண்டாம் கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.நேர்ந்த நேரத்தில் நேர்ந்த அளவு அன்னவிரயம் செய்தால் போதும்.

9.பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். யோகம் முதலிய சாதனங்கள் கற்றுத்தர வேண்டும். 

10.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் என்னுகின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.

11..எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

*ஆன்ம லாபம்* !

*மனிதகுலம் முக்கியமாக அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமே அன்றி  வேறு எதவும் இல்லை*.நமக்கு சொர்க்கம் நரகம் என்ற விசாரம் அல்ல.நாம் எல்லோரும் மேலான ஆன்ம இன்பத்தை அடையும் பொருட்டு *இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் தெரிவிக்க வேண்டும் என்னும் கருணையோடு பொது நோக்கத்தோடு  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை 1872 ஆண்டு நிறுவுகிறார்*. 

*சத்திய ஞானசபை விளக்கம்* ! 

சாதி சமய மதங்கள் உருவ (பக்தி) வழிபாட்டிற்காக உடம்பை ஆலயம்( கோயில்) ஆக்கினார்கள்.பல தத்துவ உருவங்களை படைத்து பல தெய்வங்களாக்கினார்கள்.

*வள்ளலார் ஞானம் அடைவதற்காக. ஒரே ஒளி. ஒரே குணம்.ஒரே உருவம் உள்ள ஒரேத் தன்மையுள்ள மனிததேகத்தின் அகத்தில் உள்ள ஆன்மாவை அறிந்து கொண்டு அருள் பெறுவதற்காக.புற ஒளி வழிபாட்டிற்காக சத்திய ஞானசபையை* தோற்றுவிக்கின்றார்

ஆரம்ப காலத்தில் சமய மதங்களில் அதிக ஈடுபாடு கொண்டு எல்லா தத்துவ உருவ தெய்வங்கள் மேல் பக்தி உணர்வோடு ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி வெளியிட்டுள்ளார்.

இறை அருள்பெற்று உண்மை அறிந்தவுடன் *சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!* என்னும் வெளிப்படையான இயற்கை உண்மைகடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்கிறார்.

சாதி சமயம் மதம் சாராத சத்திய ஞானசபையை தோற்றுவிக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! மாதிரி வரைபடம் போட்டுத் தருகின்றார்.தான் கண்ட அக ஆன்ம அனுபவத்தை அப்படியே புறத்தில் சத்திய ஞானசபையாக அமைக்கின்றார் வள்ளலார்.

*வள்ளலார் பாடல்* ! 

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் !  அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே என்று பதிவு செய்கிறார்.

மேலும்.

*சபை யெனது துளமெனத் தான் அமர்ந்து எனக்கே*

*அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி*!

என்னும் அக அனுபவ ஆன்ம உண்மையை வெளிப்படுத்துகிறார். *ஆன்மாவும் ஒளியாக உள்ளது கடவுளும் ஒளியாக உள்ளார் என்பதை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு  காட்டவே சத்தியஞானசபையை புறத்தில் தோற்றுவிக்கின்றார்*

*வடலூர் மக்கள்* வள்ளலார் மீது வைத்துள்ள  அன்பின் காரணமாக இனாமாக கொடுத்துள்ள 80 காணி பரப்பளவு கொண்ட இடத்தில்.

*எண்கோண வடிவமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவிக்கின்றார்அவற்றில் 8 எட்டுக் கதவுகள் 16 பதினாறு ஜன்னல்கள் கொண்டதாகும். சபையின் மத்தியில் ஞான சிங்காதன பீடம் என்னும் மேடை உள்ளது. மேடையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஒளிவடிவமாக அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றார். என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்

மேலும் சபையின் புறப்புறத்தில் சுற்றிலும் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட சங்கிலி வளையங்களால்  (மாயாசங்கிலி )  அமைத்துள்ளார்.

இன்றுவரை துருபிடிக்காமல் அப்படியே உள்ளது. உயிர்க்கொலை செய்பவர்கள்

*புலால் (மாமிசம்) மறுத்தவர்கள் மட்டுமே சங்கிலி தாண்டி சபையின் உள்ளே வரவேண்டும் என்ற வாசகம் எழுதி வைத்துள்ளார்.*

*வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார்*

1. வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே.

2. திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங் குஞ் சிதபாதர் சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்... வருவார்

3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு

இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்.....

4. இடுக்கி ல்லாமல் இருக்க இடமுண்டு நடஞ்செய்ய இங்கு அம்பலம்  ஒன்று அங்கே எட்டம் பலம் உண்டைய

ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர் என்னால்

உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்றுசொன்னால் வருவார்...

5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து விளையா டவும்எங்கள் வினை

ஓடவும் ஒளித்து எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவுடன் பதிவு செய்து அனைத்துலக மக்களையும் வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்.

ஒவ்வொரு நாளும் மதியம் இரவும் சாதாரண வழிபாடும் .ஒவ்வொரு மாதப்பூசம் அன்றும் இரவு 8-30 மணிக்கு ஏழுதிரைகள் நீக்கி  மூன்றுமுறை ஜோதி தரிசனமும். தைப்பூசத்தன்று  ஆறுகாலமும் ஏழுதிரைகள் நீக்கி சிறப்பு ஜோதி தரிசனமும் காட்டப்படுகிறது.

வடலூர் வந்து வந்து தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அழைக்கிறார்.

*வள்ளல்பெருமான் அவர்கள் உலக மக்களுக்கு சாகாக்கல்வி கற்றுத்தருவதற்காக இறைவனால் வருவிக்க வந்தவர். பூரண அருள் பெற்று மரணத்தை வென்றவர். கடவுள் நிலை அறிந்து அம்மாயமானவர்*.

*வள்ளலார் பாடல்* !

காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தான் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வின்  உண்மையை வள்ளலார். வெளிப்படுத்துகிறார்

*பஞ்சபூதங்களால் பின்னப்பட்ட  உடம்பை பஞ்ச பூதங்களில் கலக்காமல்*.

*பஞ்சபூதங்களால் சிதைக்காமல்*.

*இயற்கை உண்மை தனித் தலைமை பெரும்பதி* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள் பெற்று.பூத தேக உடம்பின் அணுக்களை அருள் ஒளிதேக அணுக்களாக மாற்றி அதாவது கடவுள் நிலைக்கு தன்னை தகுதியாக்கி இறைவனுடன் கலந்து வாழ்வதே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்* 

தாம்பெற்ற பெரும் பேற்றை  உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் *கருணை உள்ளத்தோடு வடலூருக்கு வள்ளலார் அழைக்கிறார்*.

*இதுவே வள்ளல் பெருமானின் தனித்தன்மையாகும்*.

*வள்ளலார் பாடல்*

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.! 

*மேலும் வள்ளலார் அருள்பூரணம் பெற்று மரணத்தை வென்று இறைவனுடன் கலந்ததால் ஐந்தொழில் வல்லபமான அருள் ஆட்சியை வழங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்கின்றனர்*.

*வள்ளலார் பாடல்* !

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு*

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு *மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு*.!

மேலே கண்ட பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அருட்பெருஞ்ஜோதி!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக