அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 15 நவம்பர், 2020

14-11-2020 தீபாவளி திருநாள் !

 14-11-2020 *தீபாவளி திருநாள்.!*


தீபாவளித் திருநாளைப்பற்றி பலபேர் பலவிதமான கதைகளைச் சொல்லி உள்ளார்கள்.

கதைகள் யாவும் கற்பனையா ? உண்மையா ? என்று எவருக்கும் தெரியாது.


எப்படி இருந்தாலும் தீபாவளித் திருநாளை பல ஆண்டுகளாக  மக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் என குடும்பத்துடன்  மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். 


*உயிர்ப்பலி செய்யாதே !*


தீபாவளி அன்று புத்தாடை.

பலகாரங்கள் பல இனிப்புக்கள்.பல உணவு வகைகள் செய்து பட்டாசு வெடித்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.


*ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உட்கொண்டு. ஒரு உயிர்  மகிழ்ச்சி அடைவது நியாயமா ? என்பதை  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.*


மக்கள் மகிழ்ச்சியுடன் இன்பமுடன். வாழும் அதே நேரத்தில் ஏழை எளிய ஆதரவு அற்ற குழந்தைகள் முதியோர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகள் செய்து அவர்களுடைய மகிழ்ச்சியையும்.

இன்பத்தையும் பாகம் செய்து கொள்ளுவதே மனிதநேயம்.

ஆன்மநேயமாகும்


தாவர உணவான காய்கறிகள்.

பழங்கள்.பூக்கள் இலைகள் யாவும். எல்லா உயிர்களுக்கும் பொதுவான உணவாக இறைவன் உலகம் முழுதும் படைத்துள்ளார்.


*உயர்ந்த அறிவுள்ள மனிதன் தாழ்ந்த அறிவுள்ள உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்வது பெரிய பாவச்செயல் என்று எல்லா ஞானிகளும் அருளாளர்களும் சொல்லி உள்ளார்கள்*.


முக்கியமாக தமிழ்நாட்டில் தோன்றிய மெய்ப்பொருள் உணர்ந்த  *திருவள்ளுவர்*. *வள்ளலார்* போன்ற அருளாளர்கள் புலால் உணவைப்பற்றி கடுமையாக சாடி உள்ளார்கள்.

திருக்குறளையும் திருஅருட்பாவையும் படித்து பயன் பெறுவதே மனித குலத்தின் பண்பாகும்.


வாய் பேசாத. தங்கள் உயிர்களை பாதுகாத்துக்

கொள்ளமுடியாத  அப்பாவி உயிர்களைக் கொன்று உணவாக உட்கொள்ளாமல் தாவர உணவுகளை உட்கொண்டு மகிழ்ச்சி யுடன் ஆனந்தமாக தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழுங்கள். *அதுவே சிறந்த ஆன்ம மகிழ்ச்சியாகும்*


திருவள்ளுவர் கொல்லாமை புலால் உண்ணாமை என இரண்டு அதிகாரங்களில் 20 குறள்களில் பதிவு செய்துள்ளார்.


*அதிலே இரண்டு குறள்*


கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்.! 


கொலாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேற் செல்லாது உயிருண்ணுங் கூற்று ! 


*வள்ளலார்பாடல் !*


*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார்* அவர்க்குப்


பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ! 


உயிருள்யாம்  மெம்முள்  உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே! 


என்றும் பல நூறுபாடல்களில் தெரிவித்துள்ளார்.


*உயிர்க்கொலை செய்பவர்களும் அதன்புலாலை உண்பவர்களும் இறைவனைத் தொடர்கொள்ளவும்.தொழுவதற்கும்.வழிபடவும் வணங்கவும். அருளைப் பெறவும்  தகுதி அற்றவர்களாவார்கள் என்று வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள்*. 


உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் மற்ற உயிர்களை மகிழ்ச்சி அடைய செய்விப்பதே சிறந்த வழிபாடாகும் சிறந்த செயலாகும்.சிறந்த இன்பமாகும்.சிறந்த தீபாவளி பண்டிகையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக