* 18-7-1872 ஆம் ஆண்டு வள்ளலார் வெளியிட்ட ஞானசபை விளக்க விபவ பத்திரிகை!*
அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !
இன்று தொடங்கி சபைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்* சாலைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.
இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்.
பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி 12 பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது. 72 எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்வித்தல் வேண்டும்
நான்கு நாளைக்கு ஒருவிசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்.
தூசு துடைப்பிக்க புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக்கொண்டு தூசு துடைப்பிக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்க வேண்டும்.
விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற 12. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும்.72.எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள். இடம். போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைப்பு உள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்.
விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும்.நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும்.
யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது.ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருக்கப்படாது.அத் திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.
தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.
இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம்.
என்று கையொப்பம் இட்டு தெரிவிக்கின்றார்..
வள்ளலார் சொல்லியப்படி ஒருவரும் பின்பற்றவில்லை. கடைபிடிக்கவில்லை. ஆதலால் சத்திய ஞானசபையை பூட்டிக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகின்றார்.
வடலூரில் தைப்பூச ஜோதிதரிசனம் காட்டவும்இல்லை.காட்ட சொல்லவும் இல்லை. பின்னாளில் சமய மதம் சார்ந்த ஆடூர் சபாபதி குருக்களால். சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாய் தைப்பூச ஜோதிதரிசனம் காட்டும் பழக்கம் உருவானதாகும்.அது தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
இந்த பழக்க வழக்கங்கள் சுத்த சன்மார்க்கிகளால் மாற்றும் காலம் வந்தே தீரும்.இது ஆண்டவர் கட்டளை.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக