ஒளி உடம்பு பெறுதல் !
ஒளி உடம்பு பெறுதல் !
மனிததேகம் உயர்ந்த அறிவுடைய இறுதி தேகம்.
மனித தேகத்தில் வாழ்ந்து இறைவனைத் தொடர்பு கொண்டு ஞானம் என்னும் அருளைப்பெற்று பஞ்ச பூத அணுக்களான ஊன் உடம்பை ஒளி அணுக்களாக மாற்றி ஒளிதேகமாக்கி இறைவனும் கலந்து என்றும் நிலைப்பெற்று வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.
உயர்ந்த அறிவு பெற்று. அருள் பெற்று வாழ்கிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது்.அருளைப் பெரும் தகுதியுடன் வாழ்வதே மனித தேகத்தின் உயர்ந்த வாழ்க்கையாகும்.
ஒருவரை உயர்ந்த அறிவுள்ளவர் .அறிவு இல்லாதவர் என்பதை எதனால் எப்படி அறிந்து கொள்வது?
அருளைப்பெற்று மரணம் வராமல் வாழ்கின்றவர் யாரோ அவரே உயர்ந்த அறிவுள்ளவர் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மரணம் இல்லாமல் வாழ்கின்றதை சிலபேர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் சொல்லுகின்றார்கள்.
சமுதாயத்திற்கு நன்மை செய்து மக்களால் போற்றப்படுபவர்கள் வயது முதிர்ந்து இறந்துவிட்டால். அவர்கள் புகழ் போற்றப்படுவதால் அவர்களை மரணத்தை வென்றவர்களாக சொல்கிறார்கள்.அதுதவறான சிந்தனை தவறான கருத்தாகும்.
அதற்கு புகழ் உடம்பு பெற்றவர்கள் என்று ஒருவகையில் சொல்லலாம்.அவருக்கு சுத்ததேகம் பெற்றவர்கள் என்று ஒருவாறு சொல்லலாம்.அவர்கள் அஜாக்கிரதையால் அறியாமையால் இறந்தாலும் மீண்டும் நல்ல மனித்தேகம் எடுத்து பிறந்து வருவார்கள்.
அதேப்போல் ஆன்மீகத்தில் நல்ல ஒழுக்கத்தோடு வாழ்ந்தவர்கள் இறந்து விட்டாலும் மீண்டும் மனிதப் பிறப்பு எடுத்து வருவார்கள்.
வள்ளலார் கொள்கையில் நீண்ட அனுபவம் வாய்ந்து வாழ்ந்தாலும் மரணம் வந்துவிட்டால் மீண்டும் மனிதப்பிறப்பு உண்டு.
*வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது தனித்தன்மை வாய்ந்தது*.
வள்ளலார்பாடல் !
உடம்பு உயிர் உள்ளம் எல்லாம் அருளால் ஒளிமயமாக மாற்றிக் கொண்டு பிறப்பு இறப்பு இல்லாமல் எக்காலத்தும் அழியாமல் வாழ்வதாகும்.அதற்குத்தான் பேரின்ப வாழ்க்கை என்பதாகும்.
*அதற்கு ஒளிதேகம் என்று பெயர்.
கடவுள் நிலை அறிந்து அம்மயமாக தன்னை மாற்றிக்கொண்டு வாழ்வதாகும்*.
முதலில் உண்மையானக் கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் சாதி.சமயம்.மதங்களின் பெயரால். ஆயிரக்கணக்கான பொய்யான தத்துவக் கற்பனை கடவுள்களை படைத்துவிட்டார்கள். எல்லாக் கடவுள்களையும் உண்மை என்று நம்பி ஆலயங்கள்.சர்ச்சுக்கள்.மசூதிகள்.
கோயில்கள் போன்ற இடங்களில் எல்லாம் சென்று வணங்கி வழிப்பட்டு அலைந்து வகொண்டுள்ளோம்.
*இது உண்மைக் கடவுளை அறிய முடியாமல்.அறிவு விளக்கம் பெறாமல் அலையும் அறியாமையின் வெளிப்பாடாகும்.*
வள்ளலாரும் ஆரம்ப காலக்கட்டத்தில் எல்லாக் கடவுள்களையும் வணங்கி வழிபட்டு அத்தெய்வங்கள் பெயரால் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை எழுதி வைத்துள்ளார்.
அதன்பின் அனுபவ அறிவு விளங்கி அருள் ஞானத்தால் உண்மைக் கடவுளைக் கண்டு அவற்றிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் சூட்டுகின்றார்.
( எனக்கு அப்போது அற்ப அறிவாக இருந்தது என்று வள்ளலார் வாக்குமூலம் தருகிறார்)
பின்பு உண்மை உணர்ந்து அறிந்து தெரிந்து தெளிந்து அத்தெய்வங்கள் யாவும் உண்மை அல்ல என்பதை உயர்ந்த அறிவாலும் அருளாலும் தெரிந்து.அவைகள் யாவும் கலைஉரைத்த கற்பனையான சிறு தெய்வங்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.
தானும் அத்தெய்வ வழிபாடுகளை செய்யாமல் பின்பற்றாமல் நிறுத்திவிடுகின்றார்.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மையை வெளிப்படுத்தும் முழக்கத்தோடு உலகிற்கு பறைசாற்றுகிறார்.
ஒரே கடவுள் தான் உண்டு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து பின்பற்றிவாழ்கிறோமா ? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் பாடல் !
வள்ளலார்பாடல் !
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. !
என்ற பாடல்வாயிலாக திருக்கதவைத் திறந்து அருள் அமுதைப்பருக வழிகாட்டுகிறார்.
மனித தேகம் எடுத்த நாம்.உலக வாழ்க்கைக்கு அடிப்படை ஆணி வேரான பொய்யான. கற்பனையான சாதி சமய மதங்களில் பற்று வைக்காமல்.வள்ளலார் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே .அருளைப்பெற்று ஒளி உடம்பை பெற முடியும்.

- கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
- சாகா வரம் *எனக்கே* தந்திட்டான் - ஏகாஅன்
- ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
- மாகா தலனா மகிழ்ந்து.!
இறந்த பிணத்தை வைத்து மக்கள் கூடி அழாத வண்ணம் சாகாவரம் எனக்கே தந்திட்டான் என்கிறார் வள்ளலார்.
இங்கே ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.வள்ளலாருக்கு முன்னாடி வாழ்ந்தவர்கள் எவரும் வள்ளலார் பெற்ற நிலையை அடையவில்லை.என்பதை சாகாவரம் எனக்கே *எனக்கு மட்டுமே* இறைவன் தந்திட்டான் என்கிறார்.
உடம்பு உயிர் உள்ளம் எல்லாம் அருளால் ஒளிமயமாக மாற்றிக் கொண்டு பிறப்பு இறப்பு இல்லாமல் எக்காலத்தும் அழியாமல் வாழ்வதாகும்.அதற்குத்தான் பேரின்ப வாழ்க்கை என்பதாகும்.
*அதற்கு ஒளிதேகம் என்று பெயர்.
கடவுள் நிலை அறிந்து அம்மயமாக தன்னை மாற்றிக்கொண்டு வாழ்வதாகும்*.
முதலில் உண்மையானக் கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் சாதி.சமயம்.மதங்களின் பெயரால். ஆயிரக்கணக்கான பொய்யான தத்துவக் கற்பனை கடவுள்களை படைத்துவிட்டார்கள். எல்லாக் கடவுள்களையும் உண்மை என்று நம்பி ஆலயங்கள்.சர்ச்சுக்கள்.மசூதிகள்.
கோயில்கள் போன்ற இடங்களில் எல்லாம் சென்று வணங்கி வழிப்பட்டு அலைந்து வகொண்டுள்ளோம்.
*இது உண்மைக் கடவுளை அறிய முடியாமல்.அறிவு விளக்கம் பெறாமல் அலையும் அறியாமையின் வெளிப்பாடாகும்.*
வள்ளலாரும் ஆரம்ப காலக்கட்டத்தில் எல்லாக் கடவுள்களையும் வணங்கி வழிபட்டு அத்தெய்வங்கள் பெயரால் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை எழுதி வைத்துள்ளார்.
அதன்பின் அனுபவ அறிவு விளங்கி அருள் ஞானத்தால் உண்மைக் கடவுளைக் கண்டு அவற்றிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் சூட்டுகின்றார்.
( எனக்கு அப்போது அற்ப அறிவாக இருந்தது என்று வள்ளலார் வாக்குமூலம் தருகிறார்)
பின்பு உண்மை உணர்ந்து அறிந்து தெரிந்து தெளிந்து அத்தெய்வங்கள் யாவும் உண்மை அல்ல என்பதை உயர்ந்த அறிவாலும் அருளாலும் தெரிந்து.அவைகள் யாவும் கலைஉரைத்த கற்பனையான சிறு தெய்வங்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.
தானும் அத்தெய்வ வழிபாடுகளை செய்யாமல் பின்பற்றாமல் நிறுத்திவிடுகின்றார்.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மையை வெளிப்படுத்தும் முழக்கத்தோடு உலகிற்கு பறைசாற்றுகிறார்.
ஒரே கடவுள் தான் உண்டு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து பின்பற்றிவாழ்கிறோமா ? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் பாடல் !
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறு சன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே
- உலைவறும் இப் பொழுதே நல் தருணம்என நீயே
- உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
ஒரே கடவுள் ஒரே மார்க்கம்.அதுவே வள்ளலார் வகுத்துதந்த *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற திருநெறியாகும்.இந்த மார்க்கம் ஒன்றே உலகின் நிலையான நிரந்தர மார்க்கமாகும்.
சுத்த சன்மார்க்கத்தில் அறிவித்தபடி உண்மை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு அருளை வாரி வழங்குவார்.
அருள்... வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை.ஒவ்வொரு மனிதர்களின் சிரநடு என்னும் சிற்றம்பலத்திலே அருள் இறைவனால் வைக்கப்பட்டுள்ளன.
அந்த அருளை ஏழுவகையான மாயா திரைகளால்( ஏழு கதவுளால்) மூடப்பட்டுள்ளன.அதைத்தான் கோட்டை என்றும் மோட்ச வீடு என்றும் வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.
அந்த கதவைத் திறப்பதற்காக வள்ளலார் பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல.
அன்பு.தயவு.கருணை முழுமைப்பெற்றால் மட்டுமே மேல்வீட்டின் கதவு திறந்து உள்ளே நுழைந்து அருளைப் பருகமுடியும்..
வள்ளலார்பாடல் !
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. !
என்ற பாடல்வாயிலாக திருக்கதவைத் திறந்து அருள் அமுதைப்பருக வழிகாட்டுகிறார்.
மனித தேகம் எடுத்த நாம்.உலக வாழ்க்கைக்கு அடிப்படை ஆணி வேரான பொய்யான. கற்பனையான சாதி சமய மதங்களில் பற்று வைக்காமல்.வள்ளலார் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே .அருளைப்பெற்று ஒளி உடம்பை பெற முடியும்.
வள்ளலார் பாடல் !
- சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
- சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
- சோதியைக் கண்டேன டி.
*என்றும்*
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!
என்னும் பல பாடல்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்.
உலகில் உள்ளோர் வானத்தில் உள்ளோர் மற்றும் எங்கெங்கும் வாழ்கின்ற அறிவுசார்ந்த ஓதி உணர்ந்தவர்கள் யாவரும் உண்மை உணர்ந்து அறிந்து வள்ளலார்கொள்கையை பின்பற்றி வாழ்கிறார்கள்.
நான் இன்னும் முன்னோக்கி செல்லாமல் பின்படும் தீமையில் முன்பட்டு வாழ்கிறோம்.
தெரிந்து கொள்வோம் .தெளிவடைவோம்.வாழ்ந்து காட்டுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா தெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு