*சிந்திப்போம் செயல்படுவோம்* !
இன்று உலகம் முழுவதும் மாபெரும் சக்திவாய்ந்த. மனிதனால் பெயர் வைக்கப்பட்ட *கொரோனோ கிருமி* என்னும் தொற்று மக்களை அளவில் அடங்காத துன்பங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.
சுமார் ஐந்து மாதங்களாக மக்களுக்கு வேலைஇல்லை.வருமானம் இல்லை.உணவுக்கு வழியில்லை.
மக்களின் துயரங்களையும் துன்பங்களையும்.போக்க வழியில்லை.அரசாங்கம் கொடுக்கும் உதவிகளும்.
தொண்டு நிறுவனங்களும் செய்யும்உதவிகளும் மக்களுக்கு போதியதாக இல்லை.
நூற்றுக்கு எண்பது சதவீதமக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் வள்ளலார் கொள்கையைப் பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் அவரவர்களால் முடிந்த ஜீவகாருண்யப் பணியை.பொது நலத்தோடு இடைவிடாது தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
வள்ளலார் சொல்லியவண்ணம் இந்த ஜீவகாருண்ய பணி எல்லா காலக்கட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்துவது தான் ஏழை எளியவர்களுக்கு செய்யும் உயிர் இரக்க பணியாகும்.
வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.
*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்*.
*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்*.
*ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்* என்றும் மக்களுக்கு தெளிவாக விளக்கி உள்ளார்.
மக்களுக்கு .பசி.
பிணி.தாகம்.இச்சை.எளிமை.
பயம் கொலை போன்ற துன்பம் வரும்போது தம்மை சார்ந்தவர்களின் உதவியை நாடுகிறோம்.
அவர்களிடம் உதவி கிடைக்காவிட்டால் இறுதியாக கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.
அதற்காக நம் உடம்பையும் உயிரையும் வருத்தி பலவகையான விரதங்கள் தவங்கள்.
யோகங்கள்.மற்றும் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்து வேண்டிக்கொள்கிறோம்.
*இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது* *!
உலகில் உள்ள சாதி சமய.மதங்களின் பெயரால் நிறைய கடவுள்களை படைத்துள்ளார்கள்.
*இங்கே கடவுள் உண்டு என்பது உண்மை*.
அதில் *உண்மையான கடவுள் யார் ?* என்பதுதான் கேள்வி.
எந்த கடவுள் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தொடர்பு கொண்டு தீர்த்து வைக்கிறவர் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
கடவுள் மனித உருவம் தாங்கியவரா ? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
நம்பிக்கையின் அடிப்படையில்.
அவரவர்கள் பின்பற்றும் சமயம் சார்ந்த.மதம் சார்ந்த கடவுள்களை வணங்கி வழிபாடு செய்து. பிரச்சனைகளை பதிய வைத்து. தீர்க்க வேண்டி வேண்டுகிறோம்.
ஒருசில நேரங்களில் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன. நாம் நினைப்போம் நாம் வழிபடும் கடவுள் தான் நம் பிரச்சனைகளை தீர்த்து வைத்துவிட்டார் என்று நினைப்பது இயல்பு.
இப்படி பல கடவுள்களின் பெயரிலும் நம்பிக்கை வைத்து் கொண்டு இருப்பது மக்களின் மனநிலையாகும்.
அந்த அளவிற்கு நம்பிக்கையை நம்பும்படி சமயங்கள் மதங்கள் வைத்து விட்டார்கள்.
இங்கே வள்ளலார் மக்களுக்குத் தெளிவுப் படுத்துகின்றார்.
நீங்கள் கடவுளை வேண்டுவதும் வழிபடுவதும் உண்மை.உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் உண்மை..
ஆனாலும் நீங்கள் வழிபடும் சமய மதக்கடவுள்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை.
*உண்மையான கடவுள் ஒருவர் உண்டு* *அவர் ஒளியாக உள்ளார்*.
அவருக்குப் பெயர்தான் *அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவர் என்றும் மக்களுக்கு புரியவைக்கிறார்.
நீங்கள் எங்கு எங்கு இருந்து எதை எதை நினைத்து.துன்பம் நிறைவேற வேண்டும் என்று உண்மை உருக்கத்துடன் எந்தக் கடவுளை வேண்டினாலும் அங்கங்கு இருந்து அருள் பாலித்து நிறைவேற்றும் கடவுள் ஒருவரே !
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சொல்லுகின்றார்.
*எங்கெங் கிருந்து உயிர் ஏது ஏது* *வேண்டினும்*
*அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி* !
என்று வெளிப்படையாக விளக்கி உள்ளார் !
மேலும்
1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
மேலே கண்ட பாடல்கள் உண்மையை எடுத்து இயம்புகின்றன்
.
அந்த உண்மையான தெய்வம் எங்கு இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது என்பதையும் எவ்வண்ணமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்கி உள்ளார்.மேலே கண்ட பாடலை பலமுறை படித்து உணரவேண்டும்.
கடவுள் நேரிடையாக வந்து உதவி செய்யமாட்டார்.
மனித உருவில் வந்துதான் உதவி செய்வார்.
எனவேதான் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்*
ஏன் என்றால் ? ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக்கொண்டுள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.
எனவேதான் கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் என்பதாகும்.
*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* !
*ஜீவநேயம்.மனித நேயத்தைவிட உயர்ந்த்து ஆன்மநேயம் என்பதை உலகிற்கு பறைசாற்றியவர் வள்ளலார்*.
என்பார் வள்ளலார்.
சாதி சமய மதம்.இனம்.மொழி. நாடு போன்ற வேற்றுமை இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும்.
வள்ளலார் பாடல் !
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்த தாலோ.!
என்னும் பாடலின் மூலம் தெரியப்படுத்துகின்றார்.
இந்த கொரோனோ தொற்றில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற. தனிமனித ஒழுக்கத்தைக் கடைபிடித்து .
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒன்றுபட்டு வேண்டுவோம் நிச்சியம் வெற்றிகிடைக்கும்.
சிந்திப்போம் செயல்படுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக