அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சுத்த சன்மார்க்கத்தின் அடையாளங்கள் !

சுத்த சன்மார்க்கத்தின் அடையாளங்கள்!

இவ்வுலகில் வாழும் உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்கள் .
நல்லவர்களா? கெட்டவர்களா ? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது.

மேலும் இறைவனிடம் தொடர்பு உள்ளவர்கள் என்பதை  அறிந்து கொள்வதற்கு உண்டான அடையாளங்கள் என்ன ?

வள்ளலார் சொல்லிய வண்ணம் இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து அருளைப் பெரும் தகுதி உடையவர்களின்  அடையாளங்களைத் தெரிந்து கொள்வது எங்கனம்.

மேலும் வள்ளலார் சொல்லிய வண்ணம் இடைவிடாது உண்மை இரக்கத்துடன் ஜீவகாருண்யம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் தகுதி உடையவர்களின் அடையாளங்களை அறிந்து கொள்வது எங்கனம்.

மனிதர்கள் மனிதர்களை பாராட்டுவதும் போற்றுவதும்.தூற்றுவதும் குறைசொல்வதும் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இவர்களில் உயர்ந்தவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய தகுதிப்பெற்றவர்கள் யார் ?  என்பதை தெரிந்து கொள்ள.உடம்பின் மாற்றங்களைப்பற்றி பல பாடல்களிலும் உரைநடைப்பகுதியிலும் விளக்கம் தந்துள்ளார்.

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில்.வள்ளலார் கொள்கையான  சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் தங்கள் உடம்பின் அடையாளங்கள்.இவ்வாறு தான்  இருக்க வேண்டும் என்று தெரியப்படுத்துகின்றார்.

 வயது முதிர்ச்சி தெரியக்கூடாது..அவர்களுக்கு தலை முடி நரைக்க கூடாது. எந்தவிதமான (பிணி)நோய்களும் தொற்றக்கூடாது.பயம் இருக்ககூடாது.மரணம் வரக்கூடாது .அவர்களே நல்ல உடம்பினர் என அடையாளத்தை தெரிவிக்கின்றார்.

ஆன்மீகத்தில் உள்ளவர்கள் புற வேடத்தால் புற செய்கையால் நல்லவர்கள் போல் காட்சி தருகிறார்கள்.அவர்கள் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.அவர்களை நல்லவர்கள் என்று அடையாளம் காட்டுவதுதான் அவர்களின் உடம்பின் நிலைப்பாடாகும்.

மேலும் இவ்வுலகில் சாதி.சமயம்.மதங்களில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என பிரித்து வைத்துள்ளார்கள்.எல்லா சாதி சமய மத்த்தை சார்ந்தவர்களுக்கும் மரணம் வந்து மடிந்து போகிறார்கள்.

அவர்களை மண்ணில் போட்டு புதைத்து விடுகிறார்கள்.சுமார் ஒரு ஆறுமாதம் கழித்து புதைத்தவர்களை தோண்டிப் பார்த்தால் அனைவருடைய உடல்களும் புழுக்களாக உள்ளன.இதில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பவர்களின் இரு குலமும் புழுக்குலமாகத்தான் காட்சி அளிக்கிறது என்கிறார் வள்ளலார்.

ஒவ்வொரு மனிதனும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு புனிதகுலம் பெறவேண்டி வள்ளலார் அழைக்கின்றார்.

அதற்குண்டான தகுதியை உடம்பு.உயிர்.ஆன்மா பெறவேண்டும்.அதற்குண்டான அடையாள மாற்றங்களை மனித உடம்பு பெற வேண்டும்.அதுவே உயர்ந்த நிலையான புனித தோற்றமாகும்.

மேலும் வள்ளலார் உரைநடைப்புகுதியில் தெளிவாக சொல்லி உள்ளார் !

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், 
காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். 
மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். 
அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். 
அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
எனவே தான் சாகாதவனே சன்மார்க்கம் என்று அழுத்தமான உண்மையை வெளிப்படுத்துகிறார்.
வள்ளலார் கொள்கையில் யாரும் தங்களை  ஏமாற்றிக்கொள்ள  வாய்ப்பே இல்லை 
உலகவாதனையை தவிர்க்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது.அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்ல முடியாது.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு அஜாக்கிரதையால் அறியாமையால் மரணம் வந்தால் மீண்டும் மனிதப் பிறப்பு உண்டு.
நாம் அதிக அன்பு வைத்துள்ளவர்களுக்கு மரணம் வந்தால் அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார்கள் என்பது தவறான கருத்து தவறான சிந்தனையாகும்.
வள்ளலார் பாடல் !


எனவே மரணத்தை வெல்லுவது ஒன்றே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மை வழியாகும். மரணத்தை வென்றால் மட்டுமே முத்தேக சித்திப்பெற்று 

நாம் நல்லவரா கெட்டவரா என்பதை பிறர் சொல்லியோ பிறர் பாராட்டியோ நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.நம் உடம்பே நமக்கு நல்லவரா கெட்டவரா என்ற விடை தந்துவிடும்.

எனவே மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கை யாக சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு எதிர்பு சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். கொரோனோ வைரஸ் போன்ற தொற்று மனித உடம்பை தொடர்பு கொள்ளாது.தாக்காது. 

வள்ளலர் பாடல் !


இந்த பூமியில் வாழ்ந்தாலும் .வானத்தில் வாழ்ந்தாலும்.சொர்க்கம்.வைகுண்டம்.கைலாயம்.பரலோகம்  போன்ற எந்த வாழ்க்கையாக இருந்தாலும்.நரை திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் வராமல் வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். என்பதை தெளிவாக சொல்லி விட்டார் வள்ளலார்.

வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கம் ஒன்றே உயிர் காக்கும் அருள் மருந்தாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக